உலகத் தமிழர் பேரமைப்புடன் இணைந்த இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்கள் : உலகத் தமிழர் பேரமைப்புடன் இணைந்த இந்திய - இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தொடக்கவிழா மாநாடு நேற்று, திருவள்ளுவர் ஆண்டு 2040 தை 5-ம் தேதி ஞாயிறு காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை தஞ்சை, இராசராசன் மணி மண்டபம் அருகில் உள்ள தமிழரசி மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
உலகத் தமிழர் பேரமைப்பு
உலகில் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தமிழர் அமைப்புகளை ஒருங்கிணைத்து உலகளாவிய அளவில் மாபெரும் தமிழர் கூட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. முதன் முதலாக உலகத் தமிழர்களுக்கான அமைப்பு, கொடி, பண், உடை, வங்கி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து பல்வேறு அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் நாடு முழுவதும் குரல் கொடுத்து வரும் இந்த வேளையில் உலக தமிழர் அமைப்புக்களுடன் இந்திய இலங்கை தமிழ் அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து இந்த மாநாட்டை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இத்திட்டம் முழுமை பெற அதிகாலை தமது மகிழ்ச்சிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. இந்நிகழ்ச்சியின் காணொளி விரைவில் அதிகாலையில் பிரசுரிக்கப்படும்.
No comments:
Post a Comment