Monday, January 12, 2009

மக்களவை தேர்தலில் பிரியங்கா? : காங்கிரஸ் ஆலோசனை

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தியை களமிறக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என அந்த மாநில காங்கிரஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல வருடங்களாகவே பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அவர் போட்டியிட்டால் தேர்தலில் கட்சிக்கு மிக பலம் வாய்ந்ததாக அமையும் என்றும் காங்கிரஸார் விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் உ.பி காங்கிரஸாரின் கோரிக்கை வலுவடைந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸாரின் கோரிக்கை குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனிடம் தில்லியில் செய்தியாளர்கள் திங்கள்கிழமை கேள்வியெழுப்பியபோது அவர் அளித்த பதில்:

மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தியை களம் இறக்குவது குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது. தேர்தலில் அவர் போட்டியிட்டால் கட்சிக்கு மிகுந்த பலன் கிடைக்கும். மேலும் ஒரு சரியான, மிக நல்ல தேர்வாக அவர் இருப்பார் என்றார். பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, மொராதாபாத் தொகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்காவின் தாயார் சோனியா காந்தி ராய் பரேலி தொகுதியிலும், பக்கத்து தொகுதியான அமேதியில் அவரது சகோதரர் ராகுல் காந்தியும் எம்.பி.யாக உள்ளனர்.

பிரியிஙா தேர்த்லில் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு நன்மை பயக்கும் என்று காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.எனவே இந்த தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது ஓராளவு உறுதியாகி வருகிறது.

No comments: