Friday, January 30, 2009

"அதிகாலை" இன்றைய செய்திகள்

போர்நிறுத்தமும், உத்திரவாதமான பேச்சுவார்த்தையுமே அமைதி தரும்:பா.நடேசன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10225&Itemid=52
சென்னை - காந்தி நினைவு தினம் : அரசியில் பிரமுகர்கள் பங்கேற்பு-காணொளி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10228&Itemid=52
தீக்குளிப்பதற்கு முன் முத்துக்குமார் வினியோகித்த துண்டுப் பிரசுரம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10205&Itemid=52
தீக்குளித்து வீர மரணமடைந்த முத்துக்குமாருக்கு விடுதலைப்புலிகள் அஞ்சலி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10204&Itemid=52
மும்பை தாக்குதல் : ப.சிதம்பரம் - பாகிஸ்தான் தூதரக அதிகாரி சந்திப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10220&Itemid=52
அமெரிக்கா : ஹிலாரி கிளின்டனின் வெளியுறவு அமைச்சர் பதவி செல்லாது
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10217&Itemid=52
முல்லைத்தீவு-வெளியேறும் பொதுமக்களை நாங்கள் தடுக்கவில்லை:பா.நடேசன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10216&Itemid=52
காந்தி நினைவு தினத்தில் புழல் கைதிகளுக்கு விழிப்புணர்ச்சி வகுப்புகள்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10203&Itemid=52
பார்த்திபன் கனவு # 16 : இரண்டாம் பாகம் - அத்தியாயம் 6 : கலைத்திருநாள்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10197&Itemid=110
சென்னை - காந்தி நினைவு தினம் : அரசியில் பிரமுகர்கள் பங்கேற்பு-காணொளி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10228&Itemid=52
காதலா? ஆக்சனா? ஆக்சன்தான் என்கிறார் அருண்விஜய்!
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10233&Itemid=67
மம்மூட்டி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10234&Itemid=67

Saturday, January 24, 2009

பாகிஸ்தானும் ஆப்கானும் உலகப்பாதுகாப்புக்கே மாபெரும் அச்சுறுத்தல்:ஓபாமா

ஜன 23 : ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் மோசமான சூழ்நிலைகள் உலக நாடுகளுக்கே தீவிரவாத அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஒபாமா கருத்துத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான அமெரிக்க விசேசப் பிரதிநிதியாக ரிச்சர்ட் ஹோல்ப்ரூக்கை நியமனம் செய்து, பின்னர் உரை நிகழ்த்துகையில் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது :Image

அமெரிக்காவின், பயங்கரவாதத்திற்கு எதிரான முன்னனிப் போரில் முக்கியப் புள்ளியில் இருப்பது பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும்தான் என்று திட்டவட்டமாகக் கூறினார். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் எல்லைப்பகுதிகளில் அல் கொய்தா போன்ற பயங்கர வாத அமைப்புக்கள் உலக நாடுகளை தாக்குவதற்கும், அச்சுறுத்துவதற்கும் தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக அமெரிக்கா மீதான 9/11 தாக்குதல் போன்ற இன்னொரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த தக்க தருணம் பார்த்துக்கொண்டுள்ளன. அதனால் அமெரிக்கா இன்னும் பெரிய இழப்புகளைச் சந்திக்கும் அபாய கட்டத்தில்தான் உள்ளது.

ஆனால் தமது நிர்வாகமானது அதனை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்ற இலக்கில் மிகத்தெளிவாகவே உள்ளது. மேலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளின் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளன, அவை எந்த அளவுக்கு வலுவாக உள்ளன என்பதை தாம் சீரிய நோக்கோடு கவனிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இவை உடனே தீர்க்க முடிந்த பிரச்சினைகள் இல்லையாயினும், அமெரிக்கா மிகுந்த கவனத்தோடு கையாளத் திட்டமிட்டுள்ளது.

தனது ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் கொள்கைகள் தொடர்பில் ஒபாமா விபரிக்கையில், "நாங்கள் அப்பிராந்திய அரசாங்கங்களுடனான பலமான சகோதரத்துவத்தையும், நேட்டோ நட்புறவு நாடுகளுடனான நிறைவான ஒத்துழைப்பையும் ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் மக்களுடன் ஆழமான தொடர்புகளையும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை தடை செய்வதில் பரந்த தந்திரோபாயமொன்றையும் எதிர்பார்த்துள்ளோம்'' என்று கூறினார்.

நாங்கள் எமது பாதுகாப்பிற்காகவும், நோக்கத்திற்காகவும் மற்றும் உலக நாடுகளின் மீதான பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு சவால் விடுப்பதாகவும் சில உத்திகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பராக் ஒபாமா தெரிவித்தார்.

இலங்கைப் போர் நிறுத்தத்திற்கு இதுவே இறுதி வேண்டுகோள்! - கலைஞர்

இலங்கையில் செத்து மடிந்து கொண்டிருக்கும் எம் தமிழீழ மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி அந்தப் படுகொலைகளை நிறுத்தவேண்டும் நிறுத்தவேண்டும் என்று பல முறை மத்திய அரசை மன்றாடிக் கேட்டுப்பார்த்துவிட்டோம். ஆனால் இதுவரை ஒரு பயனும் இல்லை. இனியும் பொறுப்பதற்கில்லை. இதுவே கடைசித் தீர்மானம் என்று சட்டசபையில் நேற்று நிறைவேற்றிய சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசும்போது கலைஞர் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்து, இந்த நாடகத்தை நம்ப நாங்கள் தயாராக இல்லை என அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்புச் செய்தனர்.Image

மேலும் கலைஞர் கூறுகையில், 1939 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தனது "இந்தியன் இன் சௌத் ஏசியா" நூலில் கூறியதை நினைவுகூர்ந்தார். வெளிநாடுகளில் வாழக்கூடிய இந்தியர்களுக்கு இன்று இந்தியா பெரிதாக எதுவும் செய்யமுடியவில்லை, ஆனால் அவர்களுக்கு ஏற்படும் அநீதிகளையும், இன்னல்களையும் தட்டிக்கேட்கும் காலம் விரைவில் வரும், அன்று இந்தியாவின் வலிமையால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு நியாயம் கிடைக்கும்" என்று கூறியதை நினைவிற்கொண்டு இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்று கூறினார்.

ஐ.நா. கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு இலங்கை இன்று தமிழர்களின் சுடுகாடாக மாறிக்கொண்டுள்ளது. நாம் தமிழகத்தில் வாழ்கிறோம், நமக்கு ஏற்படும் துன்பங்களை, துயரங்களை மத்திய அரசு தட்டிக்கேட்கும் என்று நல்லெண்ணத்திலும் நம்பிக்கையிலுமே நாம் மத்திய அரசை கண்ணீர் மல்க மன்றாடிக் கேட்கிறோம். ஆனால் அதற்குப் பயனில்லை என்றால் இனி அடுத்தகட்ட நடடிவக்கைக்கு நாங்கள் தயார். இங்கு சில எதிர்க்கட்சி நண்பர்கள் "இந்த ஆட்சி தேவையா?" என்று குரல் எழுப்புகின்றனர். ஆட்சியில் இருப்பதால்தான் இந்த அளவிற்காவது குரல் கொடுக்க முடிகிறது. ஆட்சியை இழந்தால், இலங்கையில் அமைதி ஏற்படும் என்ற உத்திரவாதம் இருந்தால் அதற்கும் நாங்கள் தயார் என்று கலைஞர் பேசினார்.

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்:3-ம் நாள்

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் : ஈழ மக்களின் துயரை நீக்கக் கோரி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி வாசலில் நடக்கும் இந்த போராட்டம் கடந்த மூன்று நாட்களாக தொடர்கிறது. அரசியல் கட்சித்தலைவர்கள் உண்ணாவிரதம் என்றால் மீடியா நண்பர்கள் குவிந்திருப்பர். தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் மாற்றி மாற்றி செய்தி வெளியிடுவர். ஆனால் இந்த அறப்போராட்டம் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி நடைபெற்றுக்கொண்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் :

1. கெம்ப குமார்
2. திருமுருன்
3. விஜயகுமார்
4. மணிவேல்
5. பிரவீன்
6. சுரேஷ்
7. ராஜா
8. ராஜ்குமார்
9. முஜிபுர் ரகுமான்
10. முனிஷ் குமார்
11. நவீன்
12. பிரியன்
13. பிரபு
14. ஆறுமுக நயினார்

கெம்ப குமாரிடம் பேசிய போது, 'ஈழத்தில் துன்புறும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக உதவ வேண்டும். இந்திய அரசு சிங்கள அரசுக்கு செய்யும் உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. எத்தனை நாட்களானாலும் எங்கள் போராட்டத்தை நாங்கள் உறுதியாகத் தொடருவோம். எங்களைகைது செய்தாலும் சிறையிலும் எங்கள் உண்ணாவிரதம் தொடரும்' என்று உறுதியோடு கூறினார்.

Wednesday, January 21, 2009

"சவால்களை சமாளிப்போம்;புதிய அமெரிக்காவை உருவாக்குவோம்:" ஒபாமா முழக்கம்

சவால்களை சமாளித்து புதிய அமெரிக்காவை உருவாக்கும் பணியை இன்று முதல் தொடங்குவோம் என்று, புதிய அதிபராக பதவியேற்ற ஒபாமா உறுதியுடன் தெரிவித்தார்.
அமெரிக்காவின் 44-வது அதிபராக பதவியேற்ற பராக் ஒபாமா, விழா மேடையில் எழுச்சி உரையாற்றினார். அவர் கூறியதாவது-

"மிகப்பெரிய நெருக்கடிகளுக்கும்,சவால்களுக்குமிடையில் நாம் இருக்கிறோம். நமது பொருளாதாரம் பலவீனமாக உள்ளது. அனைத்து சவால்களையும் சமாளித்து புதிய அமெரிக்காவை நிர்மாணிக்கும் பணியை இன்று முதல் தொடங்குவோம்.

தற்போதைய சூழ்நிலையில், ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் பொறுப்புணர்வு என்ற புதிய சகாப்தம் அவசியம். அமெரிக்க கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.

தீவிரவாதத்தை தோற்கடித்து சிறப்பான வரலாற்றை உருவாக்குவோம். ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றி அந்த நாட்டு மக்களிடமே ஈராக்கை ஒப்படைப்போம். ஆப்கானிஸ்தானில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவோம். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள், இந்துக்கள் என அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் நாடு அமெரிக்கா.

முஸ்லிம் நாடுகளை பொறுத்தவரை பரஸ்பர நலன்-மரியாதை அடிப்படையிலான புதிய வழிமுறை ஒன்றை காண்பது அவசியம்.''

இவ்வாறு ஒபாமா கூறினார்.

ஏ.ஆர்.ரகுமான் மீது அவதூறு வழக்கு

பிரபல இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

'ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற ஆங்கில சினிமா படத்துக்கு இசையமைத்ததன் மூலம் ஆலிவுட்டின் தங்க பூமி விருதைப் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் மீதும், படத்தில் நடித்த அனில்கபூர் மீதும் பாட்னா நகர கோர்ட்டில் தபேஷ்வர் விஸ்வகர்மா என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

`ஸ்லம்டாக் மில்லியனர் சினிமா, குடிசையில் வசிக்கும் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இது மனித உரிமைகளை மீறுவதாகும்' என்று பாட்னா நகர தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குடிசையில் வாழ்வோர் கூட்டு நடவடிக்கை குழு என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடர்ந்துள்ள தபேஷ்வர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் தனது தரப்பு ஆதாரங்களை தபேஷ்வர் தாக்கல் செய்யவேண்டும் என்று கூறிய மாஜிஸ்திரேட்டு ரவீந்திர சிங்குமார் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 5-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரபாகரன் எங்கே? : அதிரடித் தேடலில் சிங்கள ராணுவம்

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை பிடித்தே தீருவது என்ற மூர்க்கத்துடன் சிங்கள ராணுவம் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இதற்காக தனி விமானத்துடன் சிறப்பு அதிரடிப்படை ஒன்றையும் ராணுவம் அமைத்துள்ளதாக இலங்கை உயர் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரபாகரன் மறைந்திருப்பதாகக் கருதப்படும் முல்லைத்தீவை நாலாபுறம் இராணுவம் சூழ்ந்துள்ளது. இராணுவத்தின் 7 பிரிவுகள் முல்லைத்தீவை சூழ்ந்துள்ளன. பிரபாகரன் தப்பிவிடாமல் வளையம் அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த இராணுவ அதிகாரி கூறினார்.

இலங்கையில் தமிழ் ஈழத்துக்காக போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் கடும் போர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. விடுதலைப்புலிகள் வசம் இன்னும் 20 கிலோ மீட்டர் அளவில் கடற்கரை பகுதி இருக்கிறது.

இதற்கிடையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடிக்க ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவர் புதுக்குடியிருப்பு அல்லது விஷ்வா மடு என்ற இடத்தில் உள்ள அதிநவீன பாதாள அறைகளில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரபாகரன், தனது அதிவிரைவு படகில் ஆப்பிரிக்காவுக்கு சென்று இருக்கலாம் என்றும், நவீன குட்டி விமானத்தில் பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டுக்கு பறந்து சென்று விட்டதாகவும் உறுதிப்படாத தகவல்கள் கூறுகின்றன.


பிரபாகரன் மறைந்திருக்கும் இடம் பற்றிய தகவல் கிடைத்ததும் விரைந்து சென்று பிடிப்பதற்காக தனி விமானம் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் செல்லும் அதிரடி வீரர்கள் பிரபாகரன் மறைந்திருப்பதாகக் கருதப்படும் இடத்தில் பரசூட் மூலம் குதிப்பார்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களின் நடமாட்டத்தையும் இந்த சிறப்பு அதிரடிப் படை கண்காணித்து வருகிறது. எப்படியும் இராணுவம் பிரபாகரனை பிடித்துவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரபாகரன் கடல்வழியாகத் தப்பிச் செல்வதைத் தடுக்க முல்லைத்தீவு கடல் பகுதியை இலங்கை கடற்படை சுற்றிவளைத்துள்ளது. முல்லைத்தீவு வனப் பகுதியில் பிரபாகரன் எங்காவது மறைந்திருக்கிறாரா என்று இலங்கை விமானப்படை விமானங்கள் தீவிரமாகத் தேடி வருகின்றன. புதுக்குடியிருப்பு மற்றும் விஸ்வமேடு பகுதிகளில் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

பிரபாகரன் தங்கியிருந்திருக்கலாம் என்று கருதப்படும் 2 பாதாள பதுங்கு அறைகளை இராணுவம் கண்டுபிடித்துள்ளது. இந்த பாதாள பதுங்கு அறைகளை கைப்பற்றியதால் பிரபாகரன் வெளிநாட்டுக்குத் தப்பியிருக்கக் கூடும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுபோன்ற பல பாதாள அறைகளை பிரபாகரன் உருவாக்கியிருக்கக் கூடும் என்று தற்போது கருதப்படுகிறது.

பிரபாகரனை பாதுகாக்க கறுப்புப் புலி படை உள்ளது. இந்த படையினர் கடுமையாக பயிற்சி பெற்றவர்கள் பிரபாகரனுக்கு மிகவும் விசுவாசமானவர்கள். பிரபாகரனை பிடிக்க வேண்டுமானால் இவர்களை வீழ்த்திவிட்டுதான் பிடிக்க முடியும்.

அதிவேக நவீன படகு மூலம் பிரபாகரன் முல்லைத்தீவிலிருந்து தப்பி நடுக்கடலில் உள்ள கப்பலுக்குச் செல்ல முடியும் என்று இலங்கை இராணுவ தளபதி பொன்சேகா ஏற்கெனவே கூறியிருந்தார்.

ஆனால் முல்லைத்தீவில் புதுக்குடியிருப்புக்கும் விஸ்வமேட்டுக்கும் இடையே உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் அதி பாதாள அறையில் பிரபாகரன் தங்கியிருக்கக் கூடும் என்று இராணுவ அதிகாரிகள் சிலர் கருதுகின்றனர்.

தனது இருப்பிடத்தை எளிதில் கண்டுபிடிக்காதவாறு அவர் அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டிருப்பார் என்று கருதுகின்றனர். அவர் தப்பியிருக்க வழியில்லை. முல்லைத்தீவில் 30 கி.மீ. பரப்பளவில்தான் அவர் பதுங்கியிருக்கக் கூடும் என்ற கருத்தும் இராணுவ அதிகாரிகள் மத்தியில் உள்ளது.

பிரபாகரன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ விடுதலைப் புலிகளின் இயக்க வரலாறு முடிவுரை எழுதப்பட்டுவிடும் என்று இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர்.

பிரபாகரன் மட்டுமின்றி விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களைப் பிடிக்கவும் இராணுவம் உஷார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகையில், "இலங்கை ராணுவம் வெற்றியின் விளிம்பில் இருக்கிறது. விடுதலைப்புலிகள் சரண் அடைவது தவிர, வேறு எந்த பேச்சுக்கும் இடம் இல்லை. பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க, அந்த நாடு கோரிக்கை விடுத்தால் பரிசீலிப்போம்'' என்று தெரிவித்து இருக்கிறார்.

தற்போதுள்ள நிலவரம் பற்றி, இலங்கை ராணுவ செயலாளர் கோதபயா ராஜபக்சே கூறியதாவது:-

பிரபாகரன், இதுவரை இலங்கையை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றால், அவரை விரைவில் பிடித்து விடுவோம்.

பிரபாகரனை பிடிக்க விசேஷ படை அமைக்கப்பட்டு உள்ளது. முல்லைத்தீவை சுற்றிலும் 7 படைப்பிரிவினர் சுற்றி வளைத்து முன்னேறுகிறார்கள். பிரபாகரன் இருக்கும் இடம் அறியப்பட்டால், உடனே அந்த இடத்தில் பாராசூட் வீரர்களை இறக்க விமானப்படையின் விமானங்கள் தயாராக உள்ளன.

அவரை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. வேவு பார்க்கும் விமானங்களும், செயற்கைகோள் மூலம் இயங்கும் கருவிகளும், ரேடார் கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவர் தங்கி இருந்த 2 பாதாள அறைகள் பிடிபட்டு உள்ளன. இது போன்று மேலும் சில இருக்கலாம் என்று கருதுகிறோம்.

இவ்வாறு ராணுவ செயலாளர் கூறினார்.

"வங்காள விரிகுடா கடல் பகுதிக்கு, பிரபாகரன் விரைவு படகில் சென்று, அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும் கப்பலில் ஏறி தப்பி செல்லவும் வாய்ப்பு உண்டு" என்று ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,"விடுதலைப்புலிகள் தற்போது 1,600 பேர் மட்டும் இருப்பதாக உறுதியான தகவல் வந்து இருக்கிறது" என்றார்.

தமிழர் குடியிருப்புக்களை குறிவைத்து வன்னியில் குண்டுமழை :17 பேர் பலி

வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவப் படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 5 சிறுவர்கள் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Imageசுதந்திரபுரம் சந்தியில் பிள்ளையார் கோவில் பின்பாக உள்ள இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1:45 மணியளவில் இலங்கை ராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தினர்.

25 குடும்பங்கள் வாழ்ந்து வரும் ஒரு பகுதியில் 6 எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. இதில் 12 வயது சிறுவன் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உடையார்கட்டு குரவில் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீதும் தாகுதல் நடத்தப்பட்டது. இதில் சிறுமி ஒருவரும் மற்றும் இளைஞர் ஒருவரும் உடல் சிதறிப் பலியாகினர்.

இந்த இரு தாக்குதல்களிலும் சிறுவர்கள் உட்பட 30 பேர் படுகாயமடைந்தனர். சுதந்திரபுரம் கிழக்குப் பகுதி இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட 11 அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறிப் பலியாகினர்.

இவர்களின் உடல்கள் உடையார்கட்டு நட்டாங்கண்டல் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில் குடும்பமாக பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.

தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.படுகாயமடைந்தவர்கள் அனைவரும் வள்ளிபுனத்தில் உள்ள முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் மற்றும் வான் தாக்குதல்களினால் படுகாயமடைந்த பொதுமக்கள் தொடர்ச்சியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சிறிலங்கா படையினர் இடம்பெயர்ந்த லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அடைக்கலமடைந்துள்ள உடையார்கட்டு-சுதந்திரபுரம்-தேவிபுரம் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து மக்களை படுகொலை செய்யும் தாக்குதல்களை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.இதனால் மக்கள் மீண்டும் இடம்பெயரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் ஈழம் மலர ஒபாமா உதவ வேண்டும்: அமெரிக்க தமிழர்கள் வேண்டுகோள்

அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சி, இலங்கையில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவந்து தமிழீழம் உருவாகுவதற்கு வழியை ஏற்படுத்த வேண்டும் என 'ஓபாமாவுக்கான தமிழர்கள்' கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஒபாமா அதிபர் பொறுப்பேற்ற நேற்று "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பு அவருக்கு வாழ்த்துக் கூறி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் நடைபெற்று வரும் போரை அமெரிக்காவின் புதிய அதிபர் முடிவுக்கு கொண்டு வந்து தமிழீழம் உருவாகுவதற்கு வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இந்த புதிய அரசு ஆட்சி அமைத்ததும், தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமெரிக்கா இதுவரை கடைப்பிடித்த கொள்கைகளை அது மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்துவதற்கு அமெரிக்கா அழுத்தமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் பராக் ஒபாமாவுக்கு ஆதரவு கொடுத்திருந்த, "ஓபாமாவுக்கான தமிழர்கள்" என்ற அரசியல் செயற்பாட்டுக் குழு, இப்போது அவர் அட்சிப் பொறுப்பில் அமரும் வேளையில் - தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டு வரும் போரை நிறுத்துவதை அவர் தனது முன்னுரிமைப் பட்டியலில் ஒரு முக்கிய விசயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

1948 ஆம் ஆண்டு, பிரிட்டனிடம் இருந்து இலங்கை சுதந்திரமடைந்த அதே நாளிலேயே தமிழர்களுக்கு எதிரான போர் அங்கு தொடங்கப்பட்டு விட்டது.

30 வருடங்கள் நடைபெற்ற அமைதி வழியிலான போராட்டங்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காது போன பின்னரே தமிழ் மக்களின் ஆயுதப்போர், விடுதலைப் புலிகளின் வடிவத்தில் 1980-களின் ஆரம்பத்தில் உருவெடுத்தது.

தமிழ் மக்களுக்கு எதிரான இன்றைய போர் வெடிகுண்டுகள், பீரங்கித் தாக்குதல்கள், வான்குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்கின்றன. முழுமையான இனஅழிப்பினைச் செய்து, தமிழ் மக்களை முழுமையாக இலங்கைத் தீவிலிருந்து அப்புறப்படுத்துவதே இந்தப் போரின் நோக்கம்.

கிழக்குத் தீமோர் நாட்டினை உருவாக்க ஐ.நா. ஆதரவுகளை வழங்கியிருந்தது. கொசோவோ சுதந்திர நாடாக உருவாகுவதற்கு அமெரிக்காவும், நேட்டோவும் உதவியிருந்தன.

இதேவிதமாக தமக்கென உருவாக்கப்படும் ஒரு தனியான நாட்டிலேயே தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியும் என்பதே "ஒபாமாவுக்கான தமிழர்க"ளின் திடமான நம்பிக்கையாகும்.

சிறிலங்காவுக்கான அமெரிக்கா தூதுவர் ரோபேட் ஒ பிளெக், இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு பிரச்சினைக்குரிய சிறுபான்மை இனம் என்றவாறு சித்தரித்திருந்தார். அமெரிக்காவின் முன்னைய கொள்கைகளில் இலங்கை அரசின் இன அழிப்பு நடவடிக்கை ஒரு உள்நாட்டு போர்.

அமெரிக்காவின் பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்ற கொள்கைக்குள் தமிழ் மக்களிற்கு எதிரான இன அழிப்புப் போரையும் சேர்த்திருக்கின்றது இலங்கை அரசு. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்ககளையும் அதனை ஏற்றுக்கொண்டிருந்தது.

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகள் மாற்றமடைய வேண்டும் எனவும், ஒபாமா அதனைச் செய்வார் எனவும் அனைத்துலக தமிழ் சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, January 19, 2009

ணிகம் இந்தியா தமிழகம் உலகம் இலங்கை மும்பை வளைகுடா விளையாட்டு மதுரை வேலூர் கன்னியாகுமரி சென்னை சிவகங்கை கோவை இராமநாதபுரம்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் -அ.தி.மு.க. கட்சிகளை தனிமைப்படுத்தவேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.

இலங்கை பிரச்சினை தொடர்பாக நேற்று 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உண்ணாவிரத பந்தலில் சோர்வான நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தனது சார்பில் அமைச்சர் ஆற்காடு வீராசாமியை அனுப்பிவைத்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார்.

இதேபோல் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் நேரில் வந்து உண்ணாநிலை போராட்டத்தை கைவிடும்படி வற்புறுத்தினார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் அறிக்கையின் மூலமும் நேரில் வந்து சந்தித்தும் உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டார். இவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

முல்லைத் தீவில் அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் போரை நிறுத்துவதற்கு இந்திய அரசு எந்த விதமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.இலங்கை சென்று அதிபர் ராஜபக்சேயை சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் போர் நிறுத்தம் குறித்து எதுவும் பேசவில்லை.

போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கு பதிலாக உணவுப் பொருள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், இரு நாடுகளின் நட்புறவு ஆழமாகவும், வலுவாகவும் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்துவதாக அமைந்து இருக்கிறது.

இந்திய அரசு தமிழ் இன விரோதியாக செயல்படுவதைத் தடுக்க தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும். இதேபோல் ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்ட அனைத்து தமிழர்களும் ஒன்று சேரவேண்டும்.

அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நானும், கருணாநிதியும் சேர்ந்து நாடகமாடுவதாக கூறி எனது உணர்வுகளை கொச்சைப்படுத்தி இருக்கிறார்.

எனது உண்ணாநிலை போராட்டத்திற்கும், முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. முதல்-அமைச்சர் மீது வீண் பழி சுமத்தவேண்டாம். இன்னும் சொல்லப் போனால் இந்த முடிவை எடுத்த என்மீது முதல்-அமைச்சருக்கு கோபமும், வருத்தமும்தான் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா தமிழ் இனத்திற்கும், ஈழத் தமிழர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். வைகோ உள்ளிட்ட தமிழ் உணர்வு உள்ள அனைவரும் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறவேண்டும்.

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற உண்மையான அக்கறை இருக்குமேயானால் காங்கிரஸ்- அ.தி.மு.க. கட்சிகளை தனிமைப்படுத்தவேண்டும். இதனை மிகுந்த உருக்கத்தோடும், இனமான உணர்வோடும் வைகோவுக்கும், கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களுக்கும் பணிவான வேண்டுகோளாக விடுக்கிறேன்.

தமிழகத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே தமிழ் இன அழிவை தடுக்க முடியும். இது என்னுடைய குறைந்த பட்ச வேண்டுகோள்தான். குறிப்பாக வைகோ, தா.பாண்டியன், டாக்டர் ராமதாஸ் ஆகியோர் இதனை கனிவோடு பரிசீலனை செய்யவேண்டும். இது சிக்கலான, நெருக்கடியானதொரு நேரம்.

மேற்கண்டவாறு திருமாவளவன் கூறினார்.

முல்லைத் தீவைச் சுற்றி வளைத்து 50 ஆயிரம் ராணுவத்தினர்

முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப்புலிகள் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்த இலங்கை ராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்காக 8 டிவிசன்களை கொண்ட 50 ஆயிரம் பேரை அங்கு குவித்து வருகிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகளை ராணுவம் கைப்பற்றி விட்டது. சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் அளித்துள்ள அதி நவீன ஆயுதங்களை கொண்டு இலங்கை ராணுவம் போரிட்டு வருகிறது. இதனால் முல்லைத் தீவு மாவட்டம் மட்டுமே விடுதலைப்புலிகள் வசம் தற்போது உள்ளது.

அது மிகுந்த அடர்த்தியான காட்டுப்பகுதி என்பதால் ராணுவம் தொடர்ந்து முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பெரிய அளவிலான தாக்குதல் நடத்த முடிவு செய்து இருக்கிறது. இது குறித்து கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கில வார பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முல்லைத் தீவில் உள்ள விடுதலைப்புலிகளை 500 சதுர கி.மீ. பரப்பளவில் இலங்கை ராணுவம் நெருக்கி விட்டது. ஒரு பெட்டி போன்ற வடிவமைப்பில் ராணுவம் சுற்றி வளைத்து நிற்கிறது. இதையடுத்து இறுதிகட்ட நடவடிக்கையை ராணுவம் தொடங்கி உள்ளது. அதற்கு ஏற்றவாறு தனது படைகளை நகர்த்தி வருகிறது.

அங்குள்ள விடுதலைப்புலிகள் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்காக 8 டிவிசன்களை கொண்ட 50 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். 500 சதுர கி.மீ. பரப்பளவையும் அவர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

அதி நவீன ஆயுதங்களையும் அதிக அளவில் ராணுவம் குவித்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே இந்த பணி மும்முரமாக நடைபெறுகிறது. இலங்கை வரலாற்றிலேயே, மிக குறைந்த பரப்பளவில் அதிக அளவில் ராணுவத்தினரை நிறுத்துவது இதுவே முதல் முறையாகும்.

பெரிய தாக்குதலுக்கு தயாராகி வரும் அதே நேரத்தில், சிறிய தாக்குதல்களையும் ராணுவம் நடத்தி வருகிறது. இதற்காக சிறப்பு படைகள் அமர்த்தப்பட்டு உள்ளனர். தினந்தோறும் 10 முதல் 15 விடுதலைப்புலிகளையாவது கொல்ல வேண்டும் என்பதே அந்த படைகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு.

இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், முல்லைத் தீவில் உள்ள புதுக்குடியிருப்பு காட்டுப் பகுதிக்கு தென் பகுதியில் பிரிகேடியர் நந்தன உதவட்டா தலைமையில் ராணுவத்தினர் தீவிரமாக போரிட்டனர். அப்போது, மருதம்புவேல் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த விடுதலைப்புலிகளின் கொரில்லா பயிற்சி முகாம் கைப்பற்றப்பட்டது. அதில் 6 பதுங்கு குழிகள், இரண்டு கட்டிடங்கள் மற்றும் 6 தற்காலிக கூடாரங்கள் ஆகியவை இருந்தன.

இது தவிர, விடுதலைப்புலிகளின் படகு தொழிற்சாலை ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இரண்டு அதி விரைவு படகுகள், 7 சிறிய படகுகள் உள்ளிட்டவை அங்கு கிடந்தன. சிறிய படகுகளில் தற்கொலை படை தாக்குதலுக்கு தேவையான அனைத்து கருவிகளும் இருந்தன. தற்போது புதுக்குடியிருப்பு பகுதியில் ராணுவம் முகாமிட்டுள்ளது.

இதுபோல முல்லைத்தீவின் வடக்கு பகுதியில் முத்தியங்காடு என்ற அடர்ந்த காட்டுப்பகுதி வரை ராணுவம் முன்னேறி இருப்பதாகவும் அந்த இடத்தை விடுதலைப்புலிகள் காலி செய்து ஓடி விட்டதாகவும் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. வேறு சில இடங்களில் விடுதலைப்புலிகள் எதிர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலை வரை பல்வேறு இடங்களில் விடுதலைப்புலிகளின் 31 உடல்களை ராணுவம் கைப்பற்றியது. அதில் பெண்களும் உண்டு. டி௫6 ரக துப்பாக்கிகள், இலகுரக இயந்திர துப்பாக்கிகள், ஆர்.பி.ஜி. லாஞ்சர்கள், கண்ணிவெடிகள், ரேடியோ கருவிகள் போன்ற ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தகவல்களை, தேசிய பாதுகாப்பு தகவல் மையம் தெரிவித்தது.

உலகத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தொடக்கவிழா மாநாடு

உலகத் தமிழர் பேரமைப்புடன் இணைந்த இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்கள் : உலகத் தமிழர் பேரமைப்புடன் இணைந்த இந்திய - இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தொடக்கவிழா மாநாடு நேற்று, திருவள்ளுவர் ஆண்டு 2040 தை 5-ம் தேதி ஞாயிறு காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை தஞ்சை, இராசராசன் மணி மண்டபம் அருகில் உள்ள தமிழரசி மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.Image

உலகத் தமிழர் பேரமைப்பு

உலகில் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தமிழர் அமைப்புகளை ஒருங்கிணைத்து உலகளாவிய அளவில் மாபெரும் தமிழர் கூட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. முதன் முதலாக உலகத் தமிழர்களுக்கான அமைப்பு, கொடி, பண், உடை, வங்கி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

காலை முதல் இரவு 11.00 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன், தோழர் தியாகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் மகேந்திரன் ஆகியோரோடு பல அரசியல் பிரமுகர்கள், தமிழ் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இலங்கைத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து பல்வேறு அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் நாடு முழுவதும் குரல் கொடுத்து வரும் இந்த வேளையில் உலக தமிழர் அமைப்புக்களுடன் இந்திய இலங்கை தமிழ் அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து இந்த மாநாட்டை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இத்திட்டம் முழுமை பெற அதிகாலை தமது மகிழ்ச்சிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. இந்நிகழ்ச்சியின் காணொளி விரைவில் அதிகாலையில் பிரசுரிக்கப்படும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஜார்க்காண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் முதல்-மந்திரியாக இருந்தார்.

சிபுசோரன் சமீபத்தில் தான் இங்கு முதல்-மந்திரி பதவிக்கு வந்தார். அப்போது அவர் எம்.எல்.ஏ.வாக இல்லை. முதல்-மந்திரியாக பதவி ஏற்பவர் 6 மாதத்தில் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்று சட்ட விதி உள்ளது.

எனவே அவர் அங்கு தாமர் சட்டசபை தொகுதி யில் நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார். எனவே முதல்-மந்திரி பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

அதற்கு பதிலாக புதிய முதல்-மந்திரிகளை தேர்வு செய்வதில் கூட்டணி கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் ஜார்கண்ட் அரசியலில் குழப்பம் நிலவியது. அங்கு ஏற்பட்ட நிலைமையை கவர்னர் சையது சிப்தே ரசி ஆய்வு செய்தார். அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்ததால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தார்.

இதுபற்றி முடிவு எடுக்க இன்று மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. கவர்னர் சிபாரிசை ஏற்று அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தனர். சட்டசபையை முடக்கி வைக்கவும் முடிவு செய்தனர்.

இந்த முடிவு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் அறிவிப்பை முறைப்படி வெளியிடுவார்.

ஈழப் பிரச்சனை: திருமா,ராமதாஸுக்கு கலைஞர் கடும் கண்டனம்

ஈழப் பிரச்சனை தொடர்பாக திருமாவளவன் மற்றும் டாகடர்.ராமதாஸ் கூறியுள்ள கருத்துக்களுக்கு கலைஞர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல் - அமைச்சர் கருணாநிதி எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

50 ஆண்டு கால வேதனை வரலாறு கொண்ட இலங்கைத் தமிழர் பிரச் சினையில் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தக் கருத்து என்றும், அதே நேரத்தில் தனித்தனி கட்சிகளின் அணுகுமுறை என்றும், பல்வேறு கோணங்களில் மக்களுக்கு திசைகள் அறிவிக் கப்பட்டு, அவர்களைத் திண் டாட்டத்திலும், திகைப்பிலும் தள்ளி விடப்படுகிற செயல் களுக்குப் பஞ்சமில்லாமலே நடைபெற்று வருகின்றன.

அனைத்துக் கட்சிகளை ஒருங்கிணைத்து அறவழியில் எத்தனை எழுச்சியைத் தமிழ் மக்கள் வாயிலாக உணர்த்த வேண்டமோ, அந்த வழிகளில் எல்லாம் உணர்த்தி விட்டு, பிரதமரையே சந்தித்து, வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கை சென்று முயற்சி மேற்கொள்வது என்ற திட்டத்துடன் இந்த அறப்போரில் ஒரு அத்தியாயம் முடிவுற்றது.

ஆனால் அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படாத தற்கான காரணங்களை முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளின் நடவடிக்கைகள் காரணமாக, இது ஏதோ இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கும் பிரச்சினை என்றில்லாமல், காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச் சினை என்ற கோணத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி, வெற்றி தோல்வி, ஆட்சி மாற்றம் என்பன போன்ற அரசியல் கட்சி தத்துவப் பிரச்சினைகளில் இலங்கைத் தமிழர் பிரச்சினையையும் ஒரு சில தலைவர்கள் இணைத்துக் குழப்புவது, இலங்கைத் தமிழர் பாது காப்பு பிரச்சினையை விட்டு, வெகு தொலைவு போய் விட்டதாகவே தெரிகிறது.

வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை சென்று வருவதற்கு இயலாத காரணம் எதுவும் இருந்தாலும் அதனையும் வெளிப்படையாகத் தெரி வித்திருக்கலாம். அல்லது எது தக்ககாலம், நேரம் என்பதையாவது எடுத்துரைத்திருக்கலாம். அப்படியெதுவும் நடைபெறாதது, மாநில அரசைப் பொறுத்தவரையில் வேதனையான நிலையாக உணரக் கூடியதுதான்.

இப்போது வெளியுறவுத் துறைச் செயலாளர் இலங்கை சென்று ராஜபக் சேவை சந்தித்துப்பேசி விட்டு வந்துள்ளார். அதன் விபரங்களும் சரியாக வெளி வரவில்லை. ஒரு வேளை பிறகு வரக்கூடும். கடந்த காலத்து ஜெய வர்த்தனே-ராஜீவ் ஒப்பந்தம் பரிசீலிக்கப்படலாம் என்பது போன்ற செய்திகள் உள்ளனவே தவிர, அது வரையில் போர் நிறுத்தம் என்று கூட அறிவிக்கப் படவில்லை.

போர், சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ற பெயரால் அப்பாவித் தமி ழர்கள் அன்றாடம் அங்கே உயிர் விட்டுக் கொண் டிருக்கிறார்கள். ஜெய வர்த்தனே-ராஜீவ்காந்தி உடன்பாடு பற்றிப் பேசி முடிக்கிற வரையில் போர் நிறுத்தப்படுகிற முயற்சியை மேற்கொள்வதில் பெரிய தவறு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.

அந்த ஒப்பந்தம் பற்றிய கருத்துக்களையும், உடன் பாடு பற்றிய எண்ணங்களையும், ஒப்புதலையும் இலங்கைத் தமிழர்கள் மீது இங்கிருந்து நாம் திணித்திடவும் முனைவ தில்லை என்ற நிபந்தனையுடன் அணுகுவதே ஆரோக்யமானது மட்டுமல்ல, அமைதி வழியும், அமைதி நிலையும் இலங்கையில் "மறு பிறவி'' எடுப்பதற்கு ஏற்றதுமாகும். இது எப்படி உருவாகும்ப எப்படித் தீர்வாகும் என்ற வினாக்களுக்கு விடை கிடைப்பதற்கு முன்னர் இப்போது நம்மைப் பொறுத்தவரையில் நமது தமிழ் மாநில அரசைப் பொறுத்த வரையில்- இதனை மையமாக வைத்து ஏதேனும் விஷப் பரிசோதனைகளில் இறங்கி இதனை வீழ்த்தி விட்டுத் தாங்கள் ஆட்சிக்கு வந்து

விடலாமா என்றும் அவர்களோடு சேர்ந்து நாமும் பலன் பெற முடியுமா என்றும் சில மூளைகள் யோசனையில் ஈடுபட்டிருக்கின்றன.

அம்மையார் ஜெயல லிதாவின் அறிக்கைகளில் இந்த ஆண்டு முடிவதற்குள் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி மலரும் என்றும், சட்டமன்றத்துக்கும் எப் படியாவது தேர்தல் வரவழைக்க வேண்டும் என்பது தான் அவரது விருப்பம் என்றும், விரைவில் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கும் அவர் எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருப்பதாக தனது தொண்டர்களுக்கு உறுதி அளிப்பது எதற்காக என்று எல்லோர்க்கும் புரியு மென நம்புகிறேன்.

மாநிலத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்திட வேண்டிய கழக ஆட்சியை, இது போன்ற பிரச்சினைகளில் வன்முறை அராஜகம் போன்ற கிளர்ச்சிகளை உசுப்பி விட்டு, கலைத்து விடலாம் என்று அவர் கருதுகின்றார். அப்படிக் கலைத்தால் இலங்கைத் தமிழர் பிரச்சி னைக்காக, நாம் மூன்றாவது முறையாக ஆட்சியை இழக்க நேரிடலாம்.

திட்டமிட்டு, இந்த அம்மையார் நடத்திட முனையும் ``அரக்கு மாளிகை சதி'' யை நாம் புரிந்து கொண்டு தானிருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக நாம் மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஜனவரி 12-ம் நாள் என்னிடம் விவரித்து முடிவெடுக்க வேண்டுமென்று என் வீட்டுக்கு வந்த டாக்டர். ராமதாசு, கி.வீரமணி, தொல். திருமாவளவன் ஆகிய மூவரும், ``முதல்வர் எடுக்கிற முடிவை ஏற்று அவ்வாறு திட்டம் வகுப்போம்'' என்று தான் உறுதி அளித்தனர்.

உடனடியாக டெல்லியுடன் பேசுமாறு வேண்டினர். நானும் அன்று திருமங்கலம் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையைக் கூட கவனிக்க நேரமில்லை. அந்த மூவருடனும் அந்தச் சமயத்திலும் ஒரு மணி நேரம் என்கிற அளவுக்கு பேசி, அனுப்பி வைத்தேன்.

ஆனால் என்னைக் கலந்தே எதுவும் நடவடிக்கை என்று சென்ற வர்கள், என்னைக் கலந்து பேசாமலே அந்த மூவரில் ஒருவர், நண்பர் தொல்.திருமாவளவன் தன்னிச்சையாக உண்ணாவிரதம் என அறிவிக்கப்பட்ட நிலையில், உண்ணாவிரதப் பந்தலில், சிங்கள அரசை விட இங்குள்ள காங்கிரஸ் கட்சியுடன் தான் தமக்குப் போராட்டம் என்பது போல விரிவுரைகள் ஆற்றிக் கொண்டிருந்தனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையின் உயிரோட்டத்தை எப்படி அங்கே போராளிகளுக்குள் நடந்த சகோதர யுத்தம் பல வீனப்படுத்தி யதோ, அதைப் போலவே, இலங்கைத் தமிழர்களுக்காக வாதாடிடும் நமக்குள்ளேயும் ``சகோதர யுத்தங்கள்'' எல்லாம் மொத்தப் பிரச் சினையை மூளியாக்கி விடுகிற கதை நடப்பதற்குத் தான் காரணமாகி வருகின்றன.

எப்படியோ, மூவர் கூடி முதல்வருடன் பேசி னோமே, அடுத்த நாளே, இப்போது உண்ணா நோன்பு அறிவிக்கிறோமே என்று கூட எண்ணாது, அரசு பேருந்துகள் பல எரிக்கப் பட்டனவே இத் துணை அவசரத்துடன், இப்போது நிறுத்திக் கொண்டிருக்கி றோமே என்பதை சற்றுக் கூட சிந்திக்காமல் ``இலங்கை தேசியக் கொடி எரிப்பு'' என்று திருமாவளவன் அறிவித்திருப்பது ஏன் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் அவருக்குப் புரிகிறதோ இல்லையோ, இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டு மென்று திட்டமிட்டு செயல்படுகிறவர்களுக்கு ஒன்று புரிகிறது. தமிழ் நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை கருணாநிதி நடத்த வேண் டும் என்பதையும், காங்கிரஸ் ஆட்சிக்கு இனி இங்கே இடமே இல்லை என்று சபதம் செய்வதையும், அப்படியொரு ஒட்டு மொத்தமான அராஜகப் புரட்சி மூலமாகவாவது, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி விட முடியாதா என்ற கவலை மிகுந்த ஆவலால் தானே தவிர வேறல்ல உடன் பிறப்பே கேரளத்து மாவலி மன்னனை வீழ்த்தியோர் கதையை மறந்து விட முடியுமா?

கருணாநிதி வீட்டுக்குப் போகவும் தயார், தமிழர்களின் ஒட்டுமொத்த நல் வாழ்வுக்காக காட்டுக்குப் போகவும் தயார்.

அது இலை தழை நிறைக் காடாகவும் இருக்கலாம், அல்லால் இடு காடாகவும் இருக்கலாம், எதுவாயினும் ஏற்பதில் எனக்கொரு மகிழ்ச்சியே! அதுவும் என் நாட்டுக்காக-நண்பர்களினால் கிடைத்தால், இரட்டிப்பு மகிழ்ச்சியே!

முதலில் மூவரும் கலந்து யோசிப்போம்-அதில் ஒரு முடிவெடுப்போம் என்பது பின்னர் தனித்தனியே முடி வெடுத்து அறிவித்து அதற்கேற்ப செயல்படுவது, என்னையே இறுதியாகப் பழி கூறத்திட்டமிடுவது நல்ல அரசியல் தந்திரங்களாக இருக்கலாம்.

அதற்கு நான் ஒருவன் மயங்கி பலிக்கடா ஆகத்தயாராக இருக்கலாம். ஆனால் அறிஞர் அண்ணா அவர்கள் வளர்த்து எம்மிடம் அளித்து விட்டுப் போன இந்த இயக்கத்தை ஆம், ஒரு கோடி உறுப்பினர் கொண்ட இந்த இயக்கத்தை பலியிட முனைவோருக்குத் துணை போக நான் தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அமெரிக்க அதிபராக ஒபாமா நாளை பதவியேற்பு : வாஷிங்டன் விழாக்கோலம்

உலகின் மிகப்பெரும் வல்லரசாக திகழும் அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டு சாதனை படைத்துள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த பாரக் ஒபாமா நாளை பதவியேற்கிறார். இதனை அடுத்து வெள்ளை மாளிகை அமைந்துள்ள வாஷிங்டன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

அமெரிக்காவின் 44-வது அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஒபாமா தம்மை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைனைவிட கூடுதலான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதன் மூலம் அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெற்றுள்ளார். ஒபாமா பெற்ற இந்த வெற்றியின் மூலம் ஜார்ஜ் புஷ் தலைமையிலான குடியரசு கட்சியின் 8 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா நாளை பதவியேற்க உள்ளார். அதிபர் பொறுப்புகளை ஒபாமாவிடம் புஷ் ஒப்படைக்கிறார். ஒபாமாவுடன் அவரது அமைச்சரவை சகாக்களும் நாளை பதவியேற்க உள்ளனர்.

இந்த பதவியேற்பு விழாவுக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஒபாமாவின் பதவியேற்பு விழாவை காண ஏராளமான மக்கள் வாஷிங்டனில் குவிந்துள்ளனர்.இந்த பதவியேற்பு விழாவுக்கு 750 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது.

பதவியேற்பு விழா துவக்கத்தை குறிக்கும் வகையில் வாஷிங்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க லிங்கன் நினைவிடத்தில் நேற்று இரவு இசைக் கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் குவிந்திருந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய பாரக் ஒபாமா, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகள் மிகவும் சவாலானவை என்று கூறினார்.

அமெரிக்கா சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்ட ஒபாமா, இவற்றை எதிர்கொள்ள அமெரிக்கர்கள் தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த சவால்களை சமாளிக்க ஒரு மாதம் ஆகலாம். அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம். இதில் சில பின்னடைவுகள் கூட ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.

பொருளாதார நெருக்கடி உள்பட அமெரிக்கா சந்தித்து வரும் சவால்களை சந்திப்பது எளிதான பணியல்ல என்றும், இதற்கு அமெரிக்கர்கள் தயாராக வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சீமானுக்கு ஜாமீன்

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக திரைப்பட டைரக்டர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டம் ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவநாயக்கன்பட்டி பகுதியில் படப்பிடிப்பில் இருந்த டைரக்டர் சீமான், மேட்டூரில் வீட்டில் இருந்த கொளத்தூர் மணி, சென்னையில் இருந்த மணியரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தார்கள்.

கைது செய்யப்பட்ட டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் ஈரோடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு அசோகன் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் சார்பில் வக்கீல் பா.பா.மோகன் ஈரோடு மாஜிஸ்திரேட்டு 1 வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டிருந்தார்.

சீமான் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டன ஊர்வலங்கள் போன்ற செயல்களில் ஈடுபடுட்டனர்.

இந்நிலையில் ஜாமீன் கேட்டு மூவரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் ராஜீவ் சிலை அவமதிப்பு : கே.வி.தங்கபாலு கடும் கண்டனம்

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சிலை அவமதிப்பு சம்பவத்த்ற்கு தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.வி.தங்கபாலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலை, புதுச்சேரியில் அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் கூடினார்கள். பின்னர், சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை கட்சியின் தலைவர் கே.வி.தங்கபாலு தடுத்தார். தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியதால், சத்தியமூர்த்தி பவனுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலை புதுச்சேரியில் அவமதிக்கப்பட்டுள்ளது. இந்த செயல் கடும் கண்டனத்திற்கு உரியதாகும். இந்த சம்பவம் குறித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியத்திடம் கேட்டறிந்தேன். ராஜீவ்காந்தி முன்னாள் பிரதமர் மட்டுமல்லாமல், இந்தியாவையே வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து சென்றவர். இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் முயன்றவர். இலங்கையில் வாழும் தமிழர்களின் சம உரிமைக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர். தமிழர்கள் என்றும் நன்றி உடையவர்கள்.

புதுச்சேரியில் ராஜீவ்காந்தியின் சிலை அவமானப்படுத்தப்பட்டிருப்பது தமிழ் இனத்திற்கே அவமானம். தமிழின துரோகிகள் இதை செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சி இனியும் பொறுத்துக் கொள்ளாது. யாராலும் ராஜீவ்காந்தியின் புகழை குறைக்க முடியாது. தைரியமில்லாதவர்கள் இரவு நேரத்தில் இந்த செயலை செய்துள்ளனர். உடனடியாக புதுச்சேரி அரசு சிலையை அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கே.வி.தங்கபாலு கூறினார்.

திருமாவளவன்,ராமதாசுக்கு கலைஞர் கண்டனம் தெரிவிக்கவில்லை: திமுக விளக்கம்

தொல்.திருமாவளவனுக்கும், டாகடர்.ராமதாசுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் அவ்வாறு ஊடகங்களில் வந்த செய்திக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் திமுக தலைமைக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.


ஈழப்பிரச்சனை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகட்சித் தலைவர் தொல்.திருமாவளன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்துப் பேசிய போது அவரும், பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாசும் பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருப்பதாக இன்றைய மாலை ஏடுகளில் செய்தி வெளியானது. இதற்கு விளக்கம் அளித்து திமுக தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ஈழப்பிரச்சனை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் டாக்டர்.ராமதாசுக்கும், திருமாவளவனுக்கும் கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை என்றும்,மாலை ஏடுகளில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் எரிக்கப்பட்டது மட்டுமே திருமாவின் உண்ணாவிரதப் பலன்: ஜெ.

பேருந்துகள் எரிக்கப்பட்டதும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதும், அப்பாவி மக்கள் அச்சமடைந்ததும்தான் விடுதலைச்சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் உண்ணாவிரதத்தால் கிடைத்த பலன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தற்போது நிலவும் முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக முதல்வர் கருணாநிதியும் திருமாவளவனும் சேர்ந்து நடத்திய நாடகம்தான் உண்ணாவிரதப் போராட்டம்.

இதனால், இலங்கையில் போர் நிறுத்தமும் ஏற்பட வில்லை இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. தமிழகத்தில் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தியதும் தமிழகத்தில் உள்ள மக்களை அச்சுறுத்திக் காயப்படுத்தியதும்தான் இந்தப் போராட்டத்தின் பலன்கள்.

நான்கு நாள்களாக பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் முடிந்த பிறகு, "தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்" என்று காவல்துறை அறிவித்தது. இதிலிருந்தே இதற்குப் பின்னணியில் திமுக இருப்பது தெளிவாகியுள்ளது.

ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக புத்தாண்டு கொண்டாடினார் முதல்வர் கருணாநிதி. இதுபோன்ற கண்துடைப்பு நாடகங்களைக் கண்டு தமிழக மக்கள் இனியும் ஏமாறக்கூடாது.

இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, January 17, 2009

திருமா.உண்ணாவிரதம்:விடுதலை சிறுத்தைகள் பேருந்துகளுக்கு தீ வைப்பு

திருமாவளவன் உண்ணாவிரதம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பெருந்துகளுக்கு தீ வைப்பு, கல் வீச்சு போன்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை மறைமலை நகரில் இன்று 3-வது நாளாக உண்ணாவிரம் இருந்து வருகிறார்.

தமிழ்நாடு முழுவதும் இருந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அங்கு கூடியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில், உண்ணாவிரதம் இருக்கும் திருமாவளவனை காப்பாற்று என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பஸ்களில் ஒட்டப்பட்டுள்ளன.

அழிவின் விளிம்பில் 5 லட்சம் தமிழர்கள், இந்திய அரசே இலங்கை போரை நிறுத்து, அமைதிப்பேச்சு வார்த்தை நடத்து என்ற வாசகங்களும் போஸ் டர்களில் இடம் பெற்றுள்ளன.

இதற்கிடையே கடலூர், மதுரை, சேலம் மாவட்டங்களில் வன் முறைச்சம்பவங்கள் நடை பெற்றன.மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு சிலர் கும்பலாக சென்று ஆங்காங்கே அரசு பஸ்களை கல்வீசி தாக்கினர். இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. மதுரை அண்ணாநகர், செல்லூர் மதுரை புறநகர் பகுதியான ஒத்தக்கடை, குருத்தூர்பட்டி, செக்கானூரணி, கே.புளியங் குளம், அவனியாபுரம் ஆகிய இடங்களில் 15 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன.

மேலும் மதுரை புறநகர் பகுதியில் 3 அரசு பஸ்களுக்கு தீவைக்கப்பட்டன. பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும் நடந்தது. மதுரையில் இருந்து மாத்தூர் சென்ற அரசு டவுன் பஸ்மீது குருத்தூர்பட்டி என்ற இடத்தில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசயது.

இதனால் பஸ்சில் தீப்பிடித்தது. உடனே பயணி கள் அலறியடித்து கீழே இறங்கி உயிர்தப்பினர். இதில் பஸ்சின் இருக்கைகள் சேதம் அடைந்தன.

அலங்காநல்லூரில் இருந்து அழகர் கோவில் சென்ற பஸ்சை சத்திரப்பட்டி அருகே சிலர் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தனர். இதில் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. கும்பல் பஸ்சை மறித்ததும் பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்ததால் தப்பினர்.

இதே போல் பழனியில் இருந்து மதுரைவந்த அரசு பஸ்சை சமயநல்லூர் ரெயில்வே மேம்பாலம் அருகே நேற்று இரவு 15-க்கும் மேற்பட்டவர்கள் வழிமறித்து கல்வீசி தாக் கினர். உடனே பயணிகள் இறங்கி ஓடினர். அதன் பிறகு பஸ் மீது பெட் ரோல் குண்டுகளை வீசினர். இதில் பஸ்சின் இருக்கைகள் எரிந்து நாசமானது.

இதையடுத்து மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது. இரவு நேர பஸ்கள் திடீர் என்று ரத்து செய்யப்பட்டன. இன்று காலையில் மீண்டும் பஸ்கள் ஓடத்தொடங்கின. அப்போது இன்று காலை யிலும் சில இடங்களில் பஸ் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.

போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். தீ வைப்பு மற்றும் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை தேடிவரு கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. பண்ருட்டி மற்றும் கடலூர் பகுதியில் நேற்று முன்தினம் 10 பஸ்கள் கல் வீச்சில் சேதம் அடைந்தன. கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் உடைப்பு தொடர் பாக 20 பேரை போலீ சார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.

கல்வீச்சு சம்பவத்தை யொட்டி கடலூரில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் பெருமபாலான பஸ்கள் நிறுத்தப்பட்டன. பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் 2-வது நாளாக பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் அவ திக்குள்ளாயினர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரில் நேற்று மாலை அரசு பஸ் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய அமைப் பாளர் மாரியப்பன், லெனின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 அரசு டவுன் பஸ்கள் உடைக்கப்பட்டன. இதே போல் அரூரில் இருந்து ஊத்தங்கரை சென்ற தனியார் பஸ் மீது தீர்த்தமலை அருகே சிலர் கல்வீசினர். இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

திருமாவளவன் உண்ணாவிரதம் :3 வது நாளாக தொடர்கிறது

இலங்கையில் உடனே போரை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சாகும்வரை இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
சென்னையை அடுத்த மறைமலைநகரில் இன்று 3-வது நாளாக உண்ணா விரதம் இருந்தார். உண்ணா விரத மேடையிலேயே 2 நாட்களாக படுத்து தூங்கினார். கட்சி தொண்டர் களும் அவருடன் சேர்ந்து மேடையில் தூங்கினார்கள்.

இலங்கை தமிழர்களுக்காக அறப்போராட்டம் நடத்தி வரும் திருமாவள வனை கட்சி தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். டாக்டர் ராமதாஸ், வைகோ, ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் செல்போன் மூலம் வாழ்த்து கூறினார்கள்.

3-வது நாளாக இன்று உண்ணாவிரதத்தை திருமாவளவன் தொடர்ந்தால் மிகவும் சோர்வாக காணப்பட்டார். டாக்டர்கள் குழு மருத்துவ பரி சோதனை செய்தது. அவ ருக்கு 11 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ரத்த அழுத்தம் மட்டும் குறைவாக இருந்தது. ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மருத்துவ குழுவினர் அவரது உடலை பரிசோதித்து வருகிறார்கள்.

இதற்காக டாக்டர்கள் குழு ஒன்று உண்ணாவிரத மேடை அருகில் ஆம்புலன்சுடன் தயாராக இருக்கிறது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். உண்ணாவிரதத்திற்கும் ஆதரவு தெரிவித்து சினிமா இயக்குனர்கள், தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வாழ்த்தி பேசினார்கள்.

பின்னர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக காந்திய வழியில் நான் உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளேன். இதை டெல்லியில் உள்ள காங்கிரசார் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் கலைஞர் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.

ஆனாலும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. மாறாக சிங்கள அரசுக்குதுணை நிற்கிறது. இது தமிழ் இனத்தை இழிவுபடுத்தும் செயலாகும். மத்திய அரசை கெஞ்சி கேட்கிறேன். முல்லைத்தீவில் சாவின் விளிம்பில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 5 லட்சம் தமிழர்கள் உயிருக்காக போராடி கொண்டு இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத்தில் அமைதி திரும்ப வேண்டும்.வ்வாறு அவர் கூறினார்.

சத்யம் இயக்குனர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது

பரபரப்பான சூழ்நிலையில் சத்யம் நிறுவன இயக்குனர்கள் கூட்டம் இன்று ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஆறு புதிய இயக்குனர்களை நியமித்துள்ளது.அக்குழுவின் கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் நிதி நிலை குறித்து முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது.அமெரிக்காவில் பணிபுரியும் ஊழியர்களின் சுகாதார காப்பீட்டுக்கு செலுத்த 150 கோடி ரூபாய் தேவை என்று சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உயரதிகாரி ராம் மைனாம்பதி கோரியிருந்த நிலையில் இன்றைய இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் இயக்குனர் குழுவுக்கு தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

கேபிஎம்ஜி நிறுவனத்தை சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஆடிட்டர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு ஐசிஏஐ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இலங்கை பிரச்சனை - சில நாட்கள் பொறுத்திருப்பதே நல்லது : கலைஞர்

இலங்கை தமிழர் படுகொலை தடுத்து நிறுத்தப்படுமா? என்பதில், மத்திய அரசின் முடிவை அறிய சில நாட்கள் பொறுத்திருப்பதே நல்லது என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏறத்தாழ ஐம்பது ஆண்டு காலத்துக்கு மேலாக இலங்கையில் தமிழின மக்களின் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக தொடங்கப்பட்ட அறப்போர்-தந்தை செல்வா தலைமையில் நடைபெற்று-பல கட்டங்களைச் சந்தித்து இன்று உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி 1956-ம் ஆண்டு சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நான் முன் மொழிந்ததும்-பெரியவர் பூவாளூர் பொன்னம்பலனார் வழிமொழிந்து நிறைவேற்றப்பட்டதுமான தீர்மானம் என்பதைக் கணக்கிடும்போது அந்த வாய்மைப் போரின் வழித்தடத்தில் நானும் நடந்து வந்திருப்பதையும்-அப்படி நடக்கும்போது; வசதி வாய்ப்புகளுக்கேற்ப- இலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும், உரிமைகளுடனும் வாழ்ந்திட என்னால் எந்த அளவுக்கு முடியுமோ; அந்த அளவுக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் அல்லது எதிர்க்கட்சியில் இருந்தாலும் பாடுப்பட்டிருக்கிறேன்-இன்னமும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதையும் உலகெங்கும் இருக்கிற தமிழர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

1983-ம் ஆண்டு இந்த போராட்டத்தின் புரட்சிகரமான திருப்பமாகவும்-தியாகத்தின் சோகச் சின்னமாகவும்- அமைந்தது வெளிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோர் உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்டோர் கொடுமையான முறையில் கொல்லப்பட்ட நிகழ்ச்சியாகும்.

என்னை சென்னை வந்து சந்தித்து இலங்கைப் பிரச்சினை பற்றி விரிவாக எடுத்துரைத்த தந்தை செல்வா 1977-ல் மறைந்த பிறகு, அவருடைய நெருங்கிய நண்பரும்- (சில ஆண்டுகளுக்கு முன்பு 1989-ல் கொல்லப்பட்ட) தமிழ்ப் பெரியவருமான நாவலர் அமிர்தலிங்கம் மற்றும் அவர் துணைவியார் மங்கையர்க்கரசி ஆகியோர்-இலங்கைப் பிரச்சினைகளை விளக்கி, அந்நாட்டில் தமிழ் மக்கள் அமைதியோடு வாழ்ந்திட இந்தியா உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் தூய தூதர்களாக இங்கு வந்து பெரும் பணியாற்றியபோது பிரதமர் இந்திராகாந்தி போன்றவர்களைச் சந்தித்து அவர்களின் அந்த பணிக்கு நானும் துணையாக இருந்து தொண்டாற்றினேன்.

இலங்கையில் தொடர்ந்து தமிழர்களுக்கு சிங்கள அரசும், சிங்களவர்களும் கொடுத்த தொல்லை- புரிந்த கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல என்ற நிலை ஏற்பட; ஏற்பட; இலங்கைத் தமிழ் மக்களிடையே "இப்படி உயிரோடு மெல்ல மெல்லச் சாவதைவிட-ஒரேயடியாகச் சாகலாம் போரில்'' என்று முடிவெடுத்திடும் நிலை உருவாயிற்று.

அதன் விளைவாக இளைஞர்கள்; விடுதலை இயக்கங்கள் சிலவற்றைத் தோற்றுவித்தார்கள். எல்.டி.டி.ஈ. என்றும்-டெலோ என்றும்- இ.பி.ஆர்.எல்.எப். என்றும்-ஈராஸ் என்றும் - டி.யு.எல்.எப். என்றும்- பிளாட் என்றும்- இ.என்.டி.எல்.எப். என்றும்- புரோடெக் என்றும்- டி.இ.எல்.எப். என்றும் - இன்னும் பல பெயர்களில் தோன்றிய அந்த இயக்கங்கள்; ஆயுதம் ஏந்தி சிங்களப்படைகளையும்; சிங்களக் குண்டர்களையும் எதிர்க்கும் போராட்டங்கள்; தொடர்ந்து இல்லாமல் அவ்வப்போது நடைபெற்று இரு தரப்பிலும் உயிர்ப்பலிகளுடன் முடிவுற்றுக் கொண்டிருந்தன.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி நடைபெற்ற போதும், நமது ஆட்சி நடைபெற்ற போதும் அந்த இயக்கங்கங்களையும்- இயக்கங்களின் தலைவர்களையும் அறிந்தவர்களில் நானும் ஒருவன்-நானும், பேராசிரியரும், தமிழர் தலைவர் கி.வீரமணி, பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் இணைந்து நடத்திய மதுரை "டெசோ'' மாநாடு; 4௫௧986 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகவே நடத்தப்பட்டது. அந்த மாநாட்டுக்கு அகில இந்தியத் தலைவர்கள் வாஜ்பாய், என்.டி.ராமராவ், எச்.என்.பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, ஜஸ்வந்த் சிங், ராச்சய்யா, சுப்பிரமணியன் சுவாமி, உன்னிகிருஷ்ணன் மற்றும் பலர் வந்திருந்து கருத்து தெரிவித்து ஆதரவும் அளித்தனர்.

இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைக்கு முடிவு காணவும், தமிழ் மக்கள் உரிமைகளுடன் வாழவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனினும் அந்த மாநாட்டில் போராளிகள் சார்பாக கலந்து கொண்ட பல குழுக்களின் தலைவர்களிடையே ஒற்றுமையில்லை என்பதை வாஜ்பாய் போன்றோர் உணர்ந்து வருந்தி அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள்.

நானும் அவர்களைத் தனியாக அமர வைத்துப் பேசி "தங்களுக்குள் சகோதர யுத்தம் தவிர்ப்போம்-ஒற்றுமையுடன் செயல்படுவோம்'' என்று கைபிடித்து உறுதிமொழி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். உறுதிமொழி வழங்கப்பட்டதும் உண்மை-அதையடுத்து டெலோ இயக்கத்தலைவர் சபாரத்தினம் கொல்லப்பட்டதும் உண்மை. சமருக்கஞ்சா சிங்கங்கள்-சகலகலா வல்லவர்கள்-சதிகளை சாய்ப்பவர்கள் என்றாலும்; சகோதர யுத்தத்தைக் கைவிட ஒப்பாத காரணத்தால்-ஒவ்வொரு இயக்கத்தலைவர்களும் கொலையுண்ட கெடுமை நடந்து-மாபெரும் சக்தியாகப் பெருகியிருக்க வேண்டிய விடுதலைப்படை, பலவீனமுற்றது என்பதை நடுநிலையாளர்கள் மறுத்திட இயலாது.

அவர்களின் சகோதர யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவே நான் வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டும்-வீணாயிற்று அந்த முயற்சிகள். நானும், பேராசிரியரும் இலங்கைப் பிரச்சினைக்காகவே எங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தோம். என் பிறந்த நாள் விழாவில் 3௬௧986 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக உண்டியல் மூலம் நன்கொடையாகக் குவிந்த இரண்டு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாயை எல்.டி.டி.ஈ., தவிர மற்ற அமைப்புகள் என் வேண்டுகோளையேற்று நேரில் வந்து பெற்றுக்கொண்டார்கள். அதற்கு பின்னர் இலங்கையில் அமைதிப்படை- நடவடிக்கை-தமிழகம் வந்த இந்தியப் பிரதமர் இளம் தலைவர்-ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட மிகக் கொடுமையான நிகழ்ச்சி-இத்தனைக்கும் பிறகு; இன்னமும் இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உத்திரவாதம் அளிக்கும் நிலைமை உருவாகவில்லை.

இப்பொழுது இலங்கை ராணுவத்திற்கும்-இயக்கத்தின் தலைவர்கள் அல்லது தளபதிகளுக்கும் நடக்கிற போராட்டமாக நாம் இதை முக்கியமாக எடுத்துக் கொள்ளாமல்-யாருக்கிடையே போர் அல்லது சண்டை எனினும்-அங்கே இலங்கையில் செத்துக்கொண்டிருப்பது அப்பாவித் தமிழர்கள்தானே என்ற தாங்க முடியாத வேதனை நம்மைத் துளைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் நமது கழகமும், மற்றகட்சிகள் சிலவும், 14௰௨008 அன்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்- 24௰௨008 அன்று மாபெரும் மனிதச்சங்கிலி நடத்தினோம்- டெல்லிக்கே 4௧2௨008 அன்று பிரதமரிடம் சென்று அனைத்து கட்சியினரும் முறையிட்டோம். வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு விரைவில் அனுப்பப்படுவார் என்று பிரதமர் கூறினார்.

பிரணாப், இலங்கை செல்லும் நாள் இன்னும் குறிக்கப்படவில்லை. அது நமக்கு ஏமாற்றமேயாகும். இதற்கிடையே பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ், தமிழர் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் என்னை 12௧௨009 அன்று சந்தித்து உடனடியாக பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று வர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

நான் உடனே டெல்லியில் தொடர்பு கொண்டு; பேசுவதாக உறுதி அளித்தேன். நான் அவ்வாறு சொன்னதையேற்றுக் கொண்டு மூவரும் சென்றார்கள். இந்த மூவர் குழுவினர் என்னைச் சந்தித்து விவாதித்தபோது நான் அவர்களிடம் எடுத்துச் சொல்லியவாறு உடனடியாக டெல்லியுடன் தொடர்பு கொண்டு மத்திய மந்திரி தம்பி டி.ஆர்.பாலுவை, பிரதமரை சந்தித்து பேசுமாறு கூறி, அவரும் அவ்வாறு பேசி அதை அக்கறையோடு கவனிப்பதாக பிரதமரும் தெரிவித்து-அதைத் தொடர்ந்து மாநிலங்கள் அவை கழக உறுப்பினரும், என் மகளுமான கனிமொழி; சோனியாகாந்தியிடமும் மத்திய மந்திரி வயலார் ரவிடமும் நிலைமைகளை விளக்கிக் கூறி என்னுடைய கருத்துக்களையும் எடுத்துரைத்த நிலையில்- இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறியிருப்பது ஆறுதலை அளிக்கிறது.

ஆனால் நண்பர் திருமாவளவன் மட்டும்; தன்னிச்சையாக யாரிடமும் அறிவிக்காமல் தானே ஒரு முடிவெடுத்து இந்த பிரச்சினையை வலியுறுத்தி ஒரு உண்ணா நோன்பை துவங்கியுள்ளார். எத்தனையோ பேரணிகள்-கண்டன ஊர்வலங்கள்-பல்லாயிரவர் திரண்ட மாநாடுகள்- உண்ணா நோன்புகள் போன்ற இத்தனையினாலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நமது உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறோம்.

இலங்கைப் பிரச்சினையில் ஐம்பதாண்டு காலமாக என்னால் முடிந்ததையெல்லாம் செய்து விட்டேன், இன்னும் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ஆலோசனைக்கே விட்டுவிடுகிறேன்.

இதனிடையே மத்திய அரசின் வெளி உறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன், இன்றைக்கு இலங்கை சென்றுள்ளதும் முக்கியமானதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, இந்தியப் பேரரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும்-இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா இல்லையா என்பதையும் அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பது தான் நலம் என்றும்-நலமான முடிவுக்கு இந்தியப்பேரரசை நாம் நம்பியிருக்கலாம் என்றும் கருதுகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் 93-வது பிறந்த நாள் விழா : தமிழகம் முழுவதும் கோலாகலம்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 93-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 93-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதை தொடர்ந்து அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஜெயலலிதா இனிப்புகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பிக்கிறார்.

சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், தியாகராயநகர், ராயபுரம், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை அ.தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.

சென்னை கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

தியாகராயநகர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவசிலைக்கு, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் எம்.பி., ஜனநாயக முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில், கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இலங்கை பிரச்சனை: பாமக 20- ந்தேதி ஆர்ப்பாட்டம்

இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் 20-ந் தேதி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜி.கே. மணி கூறியுள்ளார்.

இது குறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் சிங்கள இனவெறி பிடித்த அரசு கொடூரத்தின் உச்சக் கட்டமாக ஈவு இரக்கமின்றி மிருகத் தனமாக வான்வழி குண்டு வீசியும், ராணுவத் தாக்குதல் நடத்தியும், துப்பாக்கியால் சுட்டும் உணவு, மருந்து தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பட்டினிச் சாவு நடத்தியும், பச்சிளம் குழந்தைகள், பெண்கள் என்றும் பாராமல் தமிழ் இனத்தை அழித்து வருகிறது.

பள்ளிகள், ஆதரவற்றோர் விடுதிகள், வீடுகள், மருத்துவமனைகள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என்றும் பாராமல் அனைத்தையும் தகர்த்து ஒட்டுமொத்த தமிழினத்தையே அடியோடு அழித்து ஒழித்து வரும் ராஜபக்சே அரசின் கொடூரமான சர்வாதிகார நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்தும், உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வரும் இலங்கையில் இந்தியா உடனடியாக தலையிட்டு போர் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்-அமைதிப் பேச்சைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ம.க. சார்பில் வரும் 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஊர்வலமாகச் சென்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.

அந்தந்த பகுதியில் உள்ள கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சியின் செயல் வீரர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆங்காங்கே குறிப்பிட்ட இடத்தில் இருந்து முழக்கமிட்டவாறு ஊர்வலமாகச் சென்று தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

Friday, January 16, 2009

பலத்த பாதுகாப்புடன் இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பலத்த பாதுகாப்புடனும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியும் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
ஜல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டி‌க்கு தடை ‌வி‌தி‌க்க‌க் கோ‌ரி இ‌ந்‌திய ‌வில‌ங்குக‌ள் நல அமை‌ப்‌பி‌ன் சா‌ர்‌பி‌ல் அ‌ண்மை‌யி‌ல் தொடர‌ப்ப‌ட்ட வழ‌க்கை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌விசாரணை‌க்கு ஏ‌ற்று‌க்கொ‌ண்டு சில முக்கிய வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.இதனை அடுத்து இ‌ப்போ‌ட்டியை ‌சிற‌ப்பாகவு‌ம், பாதுகா‌ப்பாகவு‌ம் நட‌‌த்துவது கு‌றி‌த்த ஆலோசனை‌க் கூ‌ட்ட‌ம் மதுரை மா‌வ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலக‌த்‌‌தி‌ல் நடைபெ‌ற்றது.அதன்படி இன்று காலை 10 ம‌ணி‌க்கு தொட‌ங்கிய போ‌ட்டி மாலை 5 ம‌ணி வரை நடைபெறு‌கிறது. போ‌ட்டியையொ‌ட்டி கூடுத‌ல் காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் தலைமை‌யி‌ல் 9 துணை‌க் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்க‌ள், 27 ஆ‌ய்வா‌ள‌ர்க‌ள், 65 உத‌வி ஆ‌ய்வாள‌ர்க‌ள், 719 காவல‌ர்க‌ள், 80 ஊ‌ர்‌க்காவ‌ல் படை‌யின‌ர் என சும‌ா‌ர் ஆ‌யிர‌ம் பே‌ர் பாதுகா‌ப்பு‌ப் ப‌ணி‌யி‌ல் ஈடுபடு‌பட்டு‌ள்ளன‌ர்.
போ‌ட்டி‌யி‌ல் ப‌ங்கே‌ற்கு‌ம் இளைஞ‌ர்க‌ள் மது அரு‌ந்‌‌தி‌யிரு‌க்‌கிறா‌ர்களா எ‌ன்பதை‌க் க‌ண்ட‌றிய ஆ‌ய்வு நட‌த்த‌ப்பட்ட ‌பிறகே அவ‌ர்க‌ள் போ‌ட்டி‌யி‌ல் ப‌ங்கே‌ற்க அனும‌தி‌க்க‌ப்பட்டிருப்பதாக போ‌ட்டி அமை‌ப்பா‌ள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.
போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை, சோழவந்தான், வாடிப்பட்டி, பாலமேடு, அவனியாபுரம், கிடாரிபட்டி, மேலூர், அழகர்கோவில், நத்தம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 900 காளைகள் வந்திருந்தன. அவை முறைப்படி பதிவு செய்யப்பட்டு போட்டிக்கு தயார்படுத்தப்பட்டன.
இதேபோல மாடுபிடி வீரர்களாக 500 பேர் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதி முறைகள் கடைபிடிக்கப் படுகிறதா? என்பதை கண்காணிக்க பிராணிகள் நல வாரியத்தினர் வந்திருந்தனர். அவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வீடியோ படமும் எடுத்தனர்.
வாடிவாசலுக்கு வெளியே பதிவு செய்த அடையாள பனியன் அணிந்திருந்த மாடுபிடி வீரர்கள் காத்திருந்தனர். அவர்கள் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை துரத்திச் சென்று திமிலை பிடித்து அடக்க முயன்றனர். ஆனாலும் அந்த காளைகள் தன்னை பிடிக்க வந்த வீரர்களை ஆக்ரோஷத்துடன் முட்டி தூக்கி வீசியது.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடி கொடுக்காமல் சென்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளிக் காசுகள், கட்டில், பீரோ, சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், வேட்டி உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டடு‌ள்ளன‌ர்.

அமெரிக்காவுக்கு ஆபத்து நீங்கிவிடவில்லை: புஷ் இறுதி உரை

அமெரிக்காவுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நீங்கிவிடவில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக பராக் ஒபாம வரும் 20 -ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.இந்நிலையில் நாட்டு மக்களுக்கு புஷ் தொலைக் காட்சியில் பிரியாவிடை உரையாற்றினார்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட அமெரிக்கா பாதுகாப்பாக உள்ளது என்ற போதிலும், எந்த நேரத்திலும் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எதிரிகள் இன்னொரு தாக்குதல் நடத்தும் உறுதியுடன் பொறுமையாக சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக அவர் கூறினார்.கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலை நினைவுகூர்ந்த புஷ், அதன் பின்னர் அமெரிக்காவை பாதுகாக்க தாம் மேற்கொண்ட முடிவுகளையும் பட்டியலிட்டார்.
இந்தப் பிரச்சனைகளை அமெரிக்கா ஒருபோதும் விரும்பவில்லை என்று கூறிய அவர், எனினும் இதனை சமாளிக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றார்.அமெரிக்கா ஒருபோதும் தளர்ச்சி அடையாது, தோல்வி அடையாது யாரிடமும் விழாது என்று புஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
தாம் மேற்கொண்ட சில கடுமையான முடிவுகளை அமெரிக்க மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம் என்ற போதிலும், இந்த முடிவுகளை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதை மக்கள் ஒப்புக் கொள்வார்கள் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.

இந்திய வம்சாவழி பேரா.இராம ரங்கநாதனுக்கு Peter O Donnell விருது

ஹூஸ்டன் ஜன 13 : அறிவியல் ஆராய்ச்சிக்கான அமெரிக்காவின் மிக உயரிய விருதான எடித் (Edith Award), பீட்டர் ஓ டன்னல் விருது (Peter O Donnell Award) இந்த ஆண்டு அமெரிக்காவின் தென்மேற்கு டெக்ஸஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளி பேராசிரியர் டாக்டர் இராம ரங்கநாதனுக்கு கிடைத்துள்ளது.
மனித உடலில் செயற்கையாக புரோட்டீன்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் தென்மேற்கு டெக்ஸஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மையத்தின் இயக்குநராக டாக்டர் ராம ரங்கநாதன் பணியாற்றுகிறார். இவருடன் மேலும் இருவரும் சேர்ந்து இந்த விருதைப் பெறுகின்றனர்.
அறிவியல், மருத்துவம், பொறியியல் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளில் சாதனை படைக்கும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆண்டுதோறும் ஓ டன்னல் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது 25,000 அமெரிக்க டாலர்கள், பாராட்டுச் சான்றிதழ், சிறு உலோகச் சிலை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
சிறந்த ஆராய்ச்சிப் பணிக்காக இந்த விருது பெறும் டாக்டர் இராம ரங்கநாதனை தென்மேற்கு டெக்ஸஸ் பல்கலைக்கழகத் தலைவர் டாக்டர் டேனியல் கே.போடல்ஸ்கி பாராட்டினார். மனித செல்கூறு அறிவியலில் புதிய உத்திகளை வகுப்பதற்கு இராம ரங்கநாதனின் ஆராய்ச்சி பெரிதும் உதவும் என்றும் போடல்ஸ்கி தெரிவித்தார்.
இந்த விருதைப் பெறுவதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு பெரிதும் ஒத்துழைப்பு வழங்கிய தென்மேற்கு டெக்ஸஸ் பல்கலைக்கழகத்துக்கு இராம ரங்கநாதன் நன்றி தெரிவித்தார். ஓ டன்னல் விருதானது தனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம் என்றும் அவர் குறிப்பிட்டார். மனித உடலில் இயற்கையாக உள்ள புரோட்டீன்கள் செயல் இழக்கும்போது அவற்றுக்குப் பதிலாக செயற்கையான புரோட்டீன்களை செலுத்துவதற்கு ரங்கநாதனின் ஆராய்ச்சி வழிவகுத்துள்ளது.

ராமலிங்க ராஜூக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிமன்றம் இன்று முடிவு

இந்தியா மட்டுமல்லாது அகில உலக ஐ.டி.துறையினரையே அதிர்ச்சியில் உறைய வைத்த சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்த்தின் நிறுவனர் மற்றும் நிவாக இயக்குனருமான ராமலிங்க ராஜூ,அவருடைய சகோதரர் ராமராஜூ,முதன்மை நிதி நிர்வாகி வத்லாமணி ஸ்ரீநிவாஸ் ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதை நீதிமன்றம் இன்று முடிவு செய்கிறது.
7 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு உள்ளிட்ட மூன்று பேரின் ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன. . ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராம ராஜு மற்றும் தலைமை நிதி அதிகாரி வத்லாமணி ஸ்ரீநிவாஸ் ஆகியோரது ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
மேலும் அவர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்கின்றனர்.இது தவிர அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி பங்குச் சந்தையை நிர்வகிக்கும் செபி அமைப்பின் சார்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்படுகிறது.
செபி சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுவை தாம் எதிர்க்கப் போவதாக ராஜுவின் வழக்கறிஞர் பரத்குமார் கூறியுள்ளார்.ராஜு ஜாமீனில் வெளிவந்த பிறகு அவரிடம் செபி விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்று தாம் நீதிமன்றத்தில் கூறப்போவதாக அவர் தெரிவித்தார்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் லாபத்தை செயற்கையாக உயர்த்தி 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததை அதன் தலைவராக இருந்த ராமலிங்க ராஜு ஒப்புக் கொண்டு பதவி விலகியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உடனே போர் நிறுத்தம் அவசியம்: இங்கிலாந்து பிரதமர்

இலங்கையில் நிகழும் கொடூரமான படுகொலைகள், வன்முறைகளை நிறுத்த உடனடி போர்நிறுத்தம் தேவை என இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுண் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் நேற்று புதன்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், இலங்கை தொடர்பாக எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பிரதமர் பிரவுன் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து வாஸ் தெரிவிக்கையில், இலங்கை வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்திருந்த ஆயிரம் பொதுமக்களில் 100 பேரை இலங்கை படையினர் குண்டுகளை வீசி கொன்றுள்ளனர். அத்துடன் படையினர் தொடர்பான செய்திகளை வெளியிட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியரை படுகொலை செய்துள்ளனர்,என்று விரிவாக சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக பிரதமர் மேலும் கூறுகையில், இலங்கையில் நிகழும் கொடூரமான வன்முறை தொடர்பாக தான் அக்கறை கொண்டுள்ளதாகவும், உடனடியாக ஐரோப்பிய ஒன்றியம் ஊடாக அங்கு போர் நிறுத்தம் ஒன்று கொண்டு வரப்படவேண்டும் என்பதில் தான் உடன்படுவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக தான் பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சாக்கோர்சி அவர்களுடனும், ஜேர்மனியின் சான்சலர் அஞ்செலா மேர்க்கல் அம்மையாருடனும் கலந்துரையாடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபருடன் சிவசங்கர் மேனன் சந்திப்பு:போர் நிறுத்தம் சாத்தியமா?

இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன் நேற்று இலங்கை சென்றார். அவர் இன்று இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேசுகிறார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதல் உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது.இலங்கை போர் விமானங்கள் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சரமாரி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகின்றன. தரை மார்க்கமாகவும் தமிழர் பகுதிகளுக்குள் ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த தாக்குதல்களில் அப்பாவி தமிழர்கள் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.
விடுதலைப்புலிகளின் தலைமையிடமாக விளங்கிய கிளிநொச்சியை கைப்பற்றி விட்டதாக சமீபத்தில் அறிவித்த சிங்கள ராணுவம், தற்போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு பகுதியை முற்றுகையிட்டு உள்ளது. ராணுவத்தினர் முல்லைத்தீவு பகுதிக்குள் நுழைந்து விடாமல் தடுக்க விடுதலைப்புலிகள் தீவிரமாக போரிட்டு வருகிறார்கள்.
சிங்கள ராணுவத்தினர் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசுவதால் உயிர் தப்புவதற்காக தமிழர்கள் குடும்பம் குடும்பமாக அடர்ந்த காட்டுக்குள் புலம் பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.
அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க, உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்துமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை தமிழக தலைவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து, வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வார் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
ஆனால் அவரது இலங்கை பயணம் குறித்த அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.இந்த நிலையில், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் இலங்கை செல்வார் என்று கடந்த செவ்வாய்க்கிழமை தகவல் வெளியானது.அதன்படி, சிவசங்கர் மேனன் நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்பு புறப்பட்டு சென்றார்.
அங்கு அவர் அதிபர் ராஜபக்சேயை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து, இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். கொழும்பு நகரில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் `சார்க்' மாநாடு குறித்தும் பேச இருக்கிறார்.
இலங்கை வெளியுறவு மந்திரி மற்றும் உயர் அதிகாரிகளையும் சிவசங்கர் மேனன் சந்தித்து பேசுவார்.
இந்நிலையில், வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் இன்று இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்து பேசுவதோடு, அங்கு போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசை இந்தியா சார்பில் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை பயணம் மேற்கொள்ளும் சிவசங்கர் மேனன் போர் நிறுத்தம் பற்றி வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், "இந்திய வெளியுறவுச் செயலர் போர் நிறுத்தத்தை வலியுறுத்த மாட்டார் என்றே கருதுகிறேன்" என்று இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இலங்கை சுற்றுலாத்துறையை பிரபலப்படுத்துவதற்காக டெல்லி வந்துள்ள அவர் செய்தியாளகளிடம் மேலும் கூறுகையில், 'இலங்கையில் நடைபெறவுள்ள தெற்கு ஆசிய மாநாடு குறித்து பேசுவதற்கே மேனன் செல்கிறார்', என்று கூறியுள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவியும், தெற்கு ஆசிய மாநாடு குறித்து இலங்கை அதிகாரிகளிடம் சிவசங்கர் மேனன் பேச்சு நடத்தவே இலங்கை செல்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
இதனால், இலங்கையில் போர் நிறுத்தத்தை இந்தியா சார்பில் சிவசங்கர் மேனன் வலியுறுத்துவது சந்தேகமே எனத் தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு செல்லக்கூடாது: ராமதாஸ் வேண்டுகோள்

"இலங்கை அரசின் பயங்கரவாதம் மற்றும் அதன் இனவெறியை கண்டிக்கும் வகையில், இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடுவதை இந்தியா தவிர்க்க வேண்டும்'' என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலகில் மனிதப் படுகொலைகளை நடத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.
சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்து வரும் இலங்கையின் போர் வெறிக்கு அதன் தமிழ் இன விரோத வெறி தான் காரணம். இலங்கையின் இந்த இனவெறிக்கு எதிராக உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்தியாவில் வாழ்கின்ற 7 கோடி தமிழர்களும் இவர்களோடு சேர்ந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் இலங்கை அரசின் இனவெறியை வன்மையாக கண்டித்து வருகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியினர் இலங்கைக்கு சென்று 5 ஒருநாள் போட்டிகளிலும், வேறு சில போட்டிகளிலும் விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் கிரிக்கெட் வாரிய தலைவராக இருப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவுக்கு தலைவராக இருப்பவரும், தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் இடம் வகிக்கின்ற இந்த சமயத்தில், தமிழினப் படுகொலையை நடத்திக் கொண்டிருக்கும் இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்புவது என்று முடிவு எடுத்ததற்கு எப்படி இணக்கம் தெரிவித்தார்கள்? என்று புரியவில்லை. இது தமிழர்களிடையே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
விளையாட்டுக்களில் அரசியல் பிரச்சினைகளை புகுத்தக் கூடாது என்று சிலர் கூறலாம். ஆனால், அது ஒரு சார்பாக இருக்கக் கூடாது. அண்மையில் பயங்கரவாதிகள் சிலர் மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்காக, இந்திய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இலங்கையில் பல்லாயிரக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கை போர்ப்படையினரின் நடவடிக்கைகளும் ஒரு வகையில் பயங்கரவாதச் செயல்தான். இன்னும் சொல்லப்போனால், இலங்கை போர்ப்படையினரின் பயங்கரவாதம், மிகக் கொடுமையானது.
தென் ஆப்பிரிக்காவின் இனவெறியைக் கண்டிக்கும் வகையில் இந்தியாவும் முன்பு தென் ஆப்பிரிக்காவுடன் எத்தகைய விளையாட்டு உறவுகளையும் வைத்துக் கொண்டதில்லை. அந்த வழிமுறையைப் பின்பற்றி இப்போது, இலங்கை அரசின் பயங்கரவாதம் மற்றும் அதன் இனவெறியை கண்டிக்கும் வகையில், இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடுவதை இந்தியா தவிர்க்க வேண்டும்.
இலங்கையில் சண்டை நிறுத்தப்பட்டு தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு பேச்சு வார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு காணப்பட்டு, இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வராத வரையில் இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்ப மாட்டோம் என்ற முடிவினை கிரிக்கெட் வாரியம் எடுக்க வேண்டும்.
அதற்கு இந்திய அரசும் உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் வரும் காலங்களில் சென்னையில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை தமிழர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் நிலை வரலாம். அத்தகைய நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்திய கிரிக்கெட் வாரியமும், இந்திய அரசும் நல்ல முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திருமங்கலத்தில் எதிர்கட்சிகளுக்கு வாக்குகள் குறைந்தது ஏன்? கலைஞர் பதில்

திருமங்கலம் இடைத்தேர்தலில் வாய்த்துடுக்குத்தனமாக பேசியதால் சில வேட்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் குறைந்துவிட்டன என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கேள்வி:- தி.மு.க.வின் பணபலம், குண்டர் படை பலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை வென்றுவிட்டன என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
பதில்:- இப்படி வாய்த்துடுக்குத்தனமாக பேசியே திருமங்கலம் தேர்தலில் சில வேட்பாளர்கள் வேண்டுமென்றே தங்கள் வாக்குகளை குறைத்துக்கொண்டார்கள். அந்த எதிர்க்கட்சிகளுக்கு இவரே வழிகாட்டியாக ஆகிவிட்டார்.
கேள்வி:- 7-ந்தேதியன்று 5 மணிக்கு பிறகும், தி.மு.க. அமைச்சர்களும், அழகிரியின் குண்டர்களும் தொகுதிக்கு உள்ளே வலம் வந்ததாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
பதில்:- அழகிரியின் பின்னால் தொண்டர்கள்தான் வருவார்கள். யார் பின்னால் குண்டர்கள் வந்தார்கள் என்பது மதுரை மக்களுக்கு தெரியும்.
கேள்வி:- இந்தியத்தேர்தல் ஆணையத்தின் விதிமுறை, கட்டுப்பாடு என்பதெல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தான் போலும் என்று ஜெயலலிதா மத்திய தேர்தல் ஆணையத்தையும் சாடியிருக்கிறாரே?
பதில்:- இந்தியத்தேர்தல் ஆணையத்திற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று சொல்லத் தோன்றினாலும் சொல்ல மனம் வரவில்லை. தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மத்திய தலைமை தேர்தல் ஆணையர், பீகார் அளவிற்கு தமிழகம் கெட்டுவிட்டது என்றும், வன்முறையில் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாடு முதல் இடத்திற்கு வந்துவிட்டதாகவும் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அப்படி சொன்னவரைப் பற்றித்தான் ஜெயலலிதா தனது அறிக்கையில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
3 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று ஜெயலலிதா கூறியவுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்தபோது, அவர் நேர்மையான அதிகாரி என்பதில் இருவேறு கருத்துக்கு இடம் இல்லை என்று சொன்னவர் இதே ஜெயலலிதாதான்.
அதே தேர்தல் அதிகாரி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது என்றும், எந்தவிதமான வன்முறையோ, பண விநியோகமோ நடைபெறவில்லை என்று தெரிவித்த பிறகும், ஜெயலலிதா தன் அறிக்கையில், தி.மு.க. அமைச்சர்கள் பணம், தங்க நாணயம் வாக்காளர்களுக்கு கொடுத்ததாக சொல்லியிருக்கிறார். ஆனால் அதற்கான ஆதாரம் எதையாவது அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரா என்றால் கிடையாது.
கேள்வி:- காவல்துறை, கருணாநிதியின் ஏவல் துறையாகத்தான் இருக்கிறது என்ற ஜெயலலிதாவின் கூற்று பற்றி?
பதில்:- 3 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார் ஜெயலலிதா. தேர்தல் ஆணையம் அந்த 3 அதிகாரிகளையும் 24 மணி நேரத்திற்குள் மாற்றிவிட்டு, தேர்தல் ஆணையம் கூறிய அதிகாரிகளை அந்தத் தொகுதியில் நியமனம் செய்தது. அதற்கு பிறகும் அந்த 3 அதிகாரிகளையும் பணியிலிருந்து நீக்குவதுதான் முதல் வேலை என்றார்.
இப்போது ஒட்டுமொத்தமாக அந்த துறையையே ஜெயலலிதா ஏவல் துறை என்று கூறியிருப்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். காவல்துறையினரும் இதைப்புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி:- ஜெயலலிதா தனது அறிக்கையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் எந்தவிதப் பயனும் இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்:- தேர்தல் ஆணையம் இன்னும் எப்படியெல்லாம் பயன்பட வேண்டுமென்று ஜெயலலிதா எதிர்பார்க்கிறாரோ தெரியவில்லை.
கேள்வி:- இனிமேல் தேர்தலை நடத்துவதை விட தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவித்து விடலாம் என்று ஜெயா சொல்லியிருப்பது பற்றி?
பதில்:- ம.தி.மு.க. நின்று வெற்றி பெற்ற இடத்தை, "பெரிய அண்ணன்'' தோரணையில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரை மட்டும் அழைத்து பேசி அந்த இடத்தை பிடுங்கிக் கொண்டு, அ.தி.மு.க. வேட்பாளரை அந்த அளவிற்கு பேராசையோடு போட்டியிட வைத்தார். தி.மு.க. அணியிலே இருந்த தோழமைக் கட்சிகளையெல்லாம் எவ்வளவு அவசர அவசரமாக அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்? எதைச்செய்த போதிலும், மக்கள்தான் எஜமானர்கள். இப்போதெல்லாம் அவர்களுக்கு உண்மை எது, போலி எது என்பது நன்றாகவே தெரிகிறது.
கேள்வி:- தி.மு.க. பெற்ற வெற்றி வெறும் மாயைதான் என்று தே.மு.தி.க. தலைவர் அறிக்கை விடுத்திருக்கிறாரே?
பதில்:- இவரென்ன? திருமங்கலம் தேர்தலில் இவரது கட்சியையும் சேர்த்து 24 பேர் வெற்றி பெறாதவர்கள் மட்டுமல்ல, தாங்கள் கட்டிய "டெபாசிட்'' தொகையையும் இழந்து விட்டார்களே, அவர்களுக்கு இந்தத் தேர்தல் மாத்திரம் மாயை அல்ல, உலகமே மாயையாகத்தான் தோன்றும்.
கேள்வி:- பிரசாரம் தொடங்கிய நாளிலிருந்து வாக்குப்பதிவு முடியும் நேரம் வரை ஆளுங்கட்சி விதிமுறைகளை மீறியது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராசன் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் குறித்து அறிக்கை கொடுத்துள்ளாரே?
பதில்:- அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சி வரிசையிலே இருந்த மார்க்சிஸ்ட் கம்னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், அப்போது கொடுத்த அறிக்கையை அப்படியே ஞாபகத்திலே வைத்திருந்து இப்போதும் சொல்லியிருக்கிறார். திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒரு மாதம் முன்புவரை தமிழகத்தில் தி.மு.க.வின் தோழமைக் கட்சியாக இருந்து, வாரத்திற் ஒருமுறை சந்தித்து, உரையாடி கொண்டிருந்துவிட்டு, தற்போது திடீரென்று அணியை மாற்றிக் கொண்டு, அ.தி.மு.க. விற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி வாக்கு கேட்க முன்வந்ததை, அந்தக் கட்சியைச் சேர்ந்த அடித்தள தொண்டர்கள் விரும்பவில்லை என்பது தான் உண்மை.
இதே மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது, இதே வரதராசன் அங்கே வந்து பேசினாரே, அப்போது பண பலம், அதிகார பலம், அடியாள் பலம் எல்லாம் இல்லை, இப்போது திடீரென்று வந்துவிட்டதா? எவ்வளவு பெரிய கட்சி? எந்த அளவிற்கு தவறாக அறிக்கைவிட வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது?
கேள்வி:- திருமங்கலம் தொகுதியில் பிரசாரம் செய்தபோது, தி.மு.க.வையும், அதன் தலைவராகிய உங்களையும் 18 ஆண்டுக்காலம் தொடர்ந்து பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த ஒருவர் வாய்க் கூசாமல், கேட்போர் செவிகளை மூடிக்கொள்ளும் அளவிற்கு திட்டித் தீர்த்தாரே, அதைப் பற்றியெல்லாம் நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே?
பதில்:- "நிறை குடம் தளும்பாது; குறை குடம் கூத்தாடும்'' என்ற பழமொழியை கேட்டதில்லையா?

நியுயார்க்:அமெரிக்க விமானம் விபத்து (U.S. Airways) ஹட்சன் நதிக்குள் விழுந்தது

நியுயார்க் லகாடியா ஏர்போர்ட்டிலிருந்து சற்று நேரத்திற்கு முன் சார்லோட் (Charlotte) நோக்கிக் கிளம்பிய 1549 விமானத்தில் எதிர்பாரா விதமாக பறவை மோதியது. இதை சற்றும் எதிர்பாராத விமானி உடனடியாக அருகிலுள்ள விமான நிலையத்துக்குத் தகவல் தந்தார். இருப்பினும் தனது கட்டுப்பாட்டை மீறி விமானம் ஹட்சன் நதிக்குள் விழுந்தது.
தற்போது அமெரிக்காவில் கடும் குளிர்காலமாதலால் ஹட்சன் நதி கிட்டத்தட்ட பனிக்கட்டியாகவே இருந்தது. ஆனால் சாமர்த்தியமாக விமானி பயணிகளுக்குச் சேதமில்லாத வகையில் விமானத்தை இயக்கியதால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. பயணிகளை உடனடியாக மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 150 பயணிகள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீட்புப்படையினர் பயணிகளை மீட்கும் பணியில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.