Wednesday, December 24, 2008

இன்றைய அதிகாலை

இலங்கை : கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் வான் படையினர் தாக்குதல்

Tuya de hun shi (TUYA'S MARRIAGE) - சீனத் திரைப்பட

எந்திரன் படப்பிடிப்புக்கு மோட்டார் சைக்கிளில் மீஞ்சூர் சென்ற ரஜினி

மு.க.ஸ்டாலினுக்கு புதிய பதவி?

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு:ம‌ன்மோக‌ன் சிங் குற்ற‌ச்சாட்டு

புதுவை போலீசார் போராட்டம்:மத்திய ரிசர்வ் போலீசார் 300பேர்

வீட்டுக்கு வந்த வால் நட்சத்திரம்" - புதுவை

கிறிஸ்தும‌ஸ் ப‌ரிசு -

எந்திரன் படப்பிடிப்புக்கு மோட்டார் சைக்கிளில் மீஞ்சூர் சென்ற ராஜினி

மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதமி விருத்து

"வீட்டுக்கு வந்த வால் நட்சத்திரம்" - புதுவை எழில்

ந‌ட்ச‌த்திர‌மாய் வெளிச்சமிடும் அடையாளங்களாய் திகழவேண்டும்!

கிறிஸ்ம‌ஸ் ம‌ர‌ம்....! - ஆல்ப‌ர்ட், விஸ்கான்சின், அமேரிக்கா

பாகிஸ்தான் மீது எவ்வித நடவடிக்கைக்கும் இந்தியா தயார்-பிரணாப்
எச்சரிக்கை

மண் மணம் மாறாத "கோவா'

எருமையில் கமல் நிர்வாணமாக சாவாரி.

ஜனவரி 10 முதல் 'சங்கமம்': கனிமொழி
அறிவிப்பு

இலங்கை : கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் வான் படையினர்
தாக்குதல்

Tuya de hun shi (TUYA'S MARRIAGE) - சீனத் திரைப்பட
விமர்சனம்

"வீட்டுக்கு வந்த வால் நட்சத்திரம்" - புதுவை எழில்

மகரஜோதி - 1 : சிங்கை கிருஷ்ணன்

அருணாச்சல மகிமை - 2 : சிங்கை கிருஷ்ணன்
இந்தியாவின் 'கெடு'நாளை முடிவு: பாகிஸ்தானுடன் போர் மூளுமா?
தலிபான் தீவிரவாதிகளால் தமிழக சமையல்காரர் கடத்தல்

ராஜீவ் காந்தி கொலை - அவிழத் தொடங்கியுள்ள மர்மங்கள்

ரங்கநாத்..... முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில்,ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.
91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் சோனியாகாந்தியின் கருணையால் நளினியின் தூக்கு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. `ராஜீவ்காந்தி படுகொலைக்கு உண்மையான காரணம் என்ன?' என்று அறிவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில்தான் ஒற்றைக்கண் சிவராசன், சுபா உள்பட சில குற்றவாளிகள் கடைசியாக ரங்கநாத்தின் வீட்டில் பதுங்கி இருந்ததால், அவருக்கு இந்தப் படுகொலையின் நிஜப்பின்னணி தெரிய வாய்ப்புள்ளது என்று சோனியாகாந்தி உறுதியாக நம்பியிருக்கிறார். ஏனென்றால், படுகொலைச் சம்பவம் நடந்தபிறகு, பெங்களூருவில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த 21 நாட்களும் அவர்களைச் சுற்றி நடந்த பல்வேறு விஷயங்கள் சோனியாவின் கவனத்திற்குப் போயிருக்கின்றன. இதையடுத்து, ரங்கநாத்தைச் சந்திக்க சோனியா விருப்பப்பட்டிருக்கிறார். அதன்பேரில், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான தமிழ் உணர்வாளர் (முன்பு காங்கிரஸில் பொறுப்பு வகித்தவர்) ஒருவர் மூலம், தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி. ஒருவர் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் எனவும் தகவல்கள் உலா வருகின்றன. டெல்லியில் நடந்த இந்த 'ரகசிய சந்திப்பில்' படுகொலையின் முக்கியமான விஷயங்களை சோனியாவிடம், ரங்கநாத் கூறியதாகவும் சொல்கின்றனர். தற்போது சிறையில் உள்ள 'ராஜீவ் கொலையாளிகள் வெறும் கருவிகள்தான்' என்ற மனநிலைக்கு சோனியா மாறியதற்கும் ரங்கநாத்தின் சந்திப்பைத்தான் முக்கியமானதாகக் கூறுகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். இந்தச் சந்திப்பு குறித்து இதுவரை சோனியாவோ, ரங்கநாத்தோ மீடியாக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. சோனியாவும், 'எனது கணவர் கொலையில் தொடர்புடையதாகச் சொல்லப்படுபவர்களை தூக்கில் போட எமக்கோ, எமது குழந்தைகளுக்கோ சிறிதும் விருப்பமில்லை' என தனது நிலையைத் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க :

Friday, October 17, 2008

“தாம்பத்யம்” - நவநீ

திண்ணை-யில் பிரசுரமான எனது சிறுகதை :
“ஒன்னெ மட்டும் நான் சந்திக்கலேன்னா என்னிக்கோ ஆத்துலயோ, ஒரு கொளத்துலயோ விழுந்து செத்துருப்பேன் சிவகாமி. அந்தப் பகவானாப் பாத்து ஒன்னெ எங்கிட்ட கொண்டுவந்து சேத்துருக்கார். ஏதோ முன் ஜென்மப் பந்தம்! இல்லாட்டி நான் ஒன்னெ சந்திச்சுருப்பேனா சொல்லு. ஒனக்கு ஒன்னும் ஆகாது சிவகாமி! ஒன்னோட கையிலதான் என்னோட உயிரு போகணும்னு அந்தப் பகவான் ஏற்கனவே எழுதிட்டான் சிவகாமி” என்று துக்கம் தொண்டை அடைக்க, பெட்டில் படுத்திருந்த சிவகாமியின் கைகளைத் தன் ஒரு கையால் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் அவள் தலையை வருடிக்கொண்டிருந்தார் பரமசிவம்.
டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு, “சுகர் கொஞ்சம் ஹை-யா இருக்கு, ப்ரஷரும் நார்மலா இல்ல, அதான் ஒங்களுக்கு மயக்கம் ஜாஸ்தியா வருதும்மா, மெடிசின்ஸ் தர்றேன்…. எடுத்துக்கங்க, சாப்பாடு நான் சொன்னபடி சாப்பிடுங்க, எல்லாம் சரியாய்டும், நத்திங் டு வொர்ரி, கண்ணெவிட மேலாக் கவனிச்சுக்க ஒங்க கணவர் பக்கத்துல இருக்கறச்ச நீங்க ஒர்ரி பண்ணலாமா? ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணப்படாது, சரியா?” என சிரித்த முகத்தோடு, சிவகாமியிடம் கூறிவிட்டு, “டேக் கேர் மிஸ்டர் பரமசிவம்” என்று சொல்லிச் சென்றார் டாக்டர்.

“சிவம் நான் ஒண்ணு சொன்னாத் தப்பா நெனைக்க மாட்டீங்களே? எனக்கு இப்படி அடிக்கடி ஒடம்பு சரியில்லாம வர்றத நெனச்சா மனசுக்கு ரொம்பப் பயமா இருக்கு. யாருக்கும் தெரியாம நம்ம காம்பவுன்ட்-ல இருக்கற முப்பாத்தம்மன் கோயில்ல வச்சு எனக்கு ஒரு மாங்கல்யம் கட்டிடுறீங்களா? நான் நிம்மதியா மாங்கல்யத்தோட, பொட்டும், பூவுமா நித்ய சுமங்கலியாப் போய்ச் சேருவேன்… சிவம்! செய்வீங்களா?” - என்று கலங்கிய கண்களை தன் முந்தானையால் துடைத்துக்கொண்டே சொன்னாள் சிவகாமி.

பதறிப்போன பரமசிவன் “என்ன சிவகாமி நீ! பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுற! ஒங்கண்ணுக்கு முன்னாடிதானே டாக்டர் சொல்லிட்டுப்போனாங்க, நீ நல்லாருப்பெ சிவகாமி! ஒனக்கு ஒன்னும் செய்யாது சிவகாமி! மாங்கல்யந்தானே! சரி கவலய விடு, நீ சொன்னமாதிரியே நான் வர்ற வெள்ளிக்கிழமை ஒங்கழுத்துல தாலி கட்டுறேன் சரியா? நீ எனக்குன்னே பொறந்தவ சிவகாமி. விசாலம் செத்த அன்னைக்கே, அவகூட நானும் போய்ச்சேந்துருக்கணும், பகவான் என்னெ ரொம்பச் சோதிச்சுட்டார். ஆனா விசாலம் என்னெத் தனியா விடக்கூடாதுன்னு, ஒன்னோட ரூபத்துல வந்து எங்கூடவே வாழ்ந்துகிட்டு இருக்கா, நாம ரெண்டு பேரும் இன்னும் ரொம்ப நாள் உயிரோட இருப்போம்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே

“ஐயா! ஒங்களுக்குப் போன் வந்திருக்காம், ஆபீஸ்ல கூப்படுறாங்க! ஆயாம்மாள் வந்து சொல்லிச் சென்றாள்.

“ஹலோ! என்னப்பா! சௌக்யமா இருக்கேளா? பணமெல்லாம் டைமுக்கு வந்து சேந்துருக்குமே! நான் ஒரு ப்ராஜக்ட் விசயமா சைனா வந்தேன். கொஞ்சம் டைம் கெடச்சது, அதான் ஏர்போர்ட்ல இருந்து பேசுறேன். நான் யு.எஸ். போனதும் கால் பண்றேன், ஒடம்பப் பாத்துக்கங்க! முடிஞ்சா இந்த இயர் என்ட்-ல பசங்களுக்கு சம்மர் வெகேசனுக்கு சென்னை வர்றதா இருக்கோம். கன்ஃபாம் ஆனா சொல்றேம்பா, வேற ஒண்ணும் சேதி இல்லயே!” ஒரே மூச்சில் மகன் ஸ்ரீகாந்த் எதிர்முனையில்.

“….ம்ம்…ம்.. இல்லப்பா” பரமசிவம் சொல்லி முடித்தவுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

பரமசிவம் ஒரு ரிடையடு தாசில்தார். நேர்மையான, கௌரமான மனிதர். தனது மனைவி விசாலம். குழந்தையே இல்லாமல் தவமாய் தவமிருந்து திருமணமாகிப் பதினான்கு வருடங்களுக்குப்பின் பெற்றெடுத்த ஒரே பிள்ளை ஸ்ரீகாந்த். மகன், தனக்கு இது வேண்டுமென்று நினைக்கும்போதே அவன் கண் முன் கொண்டுவந்து அதை நிறுத்தியிருப்பார் பரமசிவம். அளவுக்கு மீறிய சுதந்திரம் பிள்ளைக்குக் கொடுத்தவர். படித்தவராயிற்றே! கேம்பஸ் இன்டர்வியு மூலமாகவே வேலை கிடைத்துத் தற்போது அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் ஸ்ரீகாந்த் ஒரு முறை இந்தியா வந்திருந்தபோது தனது பெற்றோரிடம், தான் ஒரு இந்திய வம்சாவழிப் பெண்ணை விரும்புவதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும், அனுமதி கேட்பதற்குப் பதிலாக தகவல் சொன்னான். சற்று அதிர்ச்சியுற்றாலும், அதனைப் புரிந்துகொண்ட பரமசிவமும் விசாலமும் மகனின் மனம் புண்படக்கூடாதென்பதற்காக ‘சரி’ என்று ஒப்புக்கொண்டனர்.

திரும்ப அமெரிக்கா சென்ற ஸ்ரீகாந்த், மூன்று மாதங்கள் கழித்து, பெற்றோரை அமெரிக்கா அழைத்துச்செல்வதற்கான, விசாவில் தாமதம் ஏற்படுகிறதென்பதால், அதுவரை பொறுக்கமுடியாத வம்சாவழிப்பெண், எங்கே வேறொரு கை மாறிவிடுமோ என்று திருமணத்தை முடித்துவிட்டு வழக்கம்போலப் பெற்றோருக்குத் தகவல் சொன்னான். இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமலும், தன் கணவர் இவற்றையெல்லாம் நினைத்து மனதுக்குள்ளேயே வேதனைப்படுவதையும் பார்க்கப் பொறுக்காமல், பல நாள், இதுபற்றியே பேசிப்பேசிக் கவலையடைந்த விசாலம் அவளுக்கே தெரியாமல் ஒருநாள் தூக்கத்திலேயே போய்ச்சேர்ந்துவிட்டாள். விசாலமும் தன் பிள்ளையும்தான் இந்த உலகம் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே இருந்த பரமசிவம் தனியாளாய் தவித்து நின்றார்.

அதுவரை கலங்காத பரமசிவம் தன்னையும் மீறிக் கதறிக் கதறிக் கண்ணீர்விட்டுத் தானும் உயிரை விட்டுவிடுவோம் என்று நினைக்கையில்,
“அப்பா ஒங்களவிட்டா எனக்கு யாருப்பா இருக்கா? என்னெ மன்னிச்சுருங்கப்பா, அம்மா என்னெ நெனச்சு ரொம்பக் கவலப்பட்டே போய்ச்சேந்துட்டாங்கப்பா, நீங்களாவது இனிமே எங்ககூட இருங்கப்பா” என்று தன் மகன் தன்னைக்கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது, தான் கூடிய விரைவில் தன்னை அமெரிக்கா அழைத்துச் செல்வதாகச் சொல்லிக் கொஞ்சம் ஆறுதலாகப் பேசியதும் பரமசிவன் மனம் மாறிவிட்டார்.

ஆனால் நடந்த கதை வேறு, விசா எல்லாம் தயார் செய்துகொண்டு அழைத்துப்போகும்வரை, தன்னைத் தனியாக விட்டால் அம்மாவையே நினைத்து ரொம்பக் கவலைப்பட்டு எதுவும் செய்து கொள்வார் என்ற அக்கறையில், இப்போது தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தில் கொண்டுவந்து சேர்த்துவிட்டுச் சென்றவன்தான். வருடங்கள் 7 ஆகிவிட்டது. வாரம் தவறாமல் மகனிடமிருந்து போன் வரும். ஆனால் விசா இன்னும் வந்தபாடில்லை. பரமசிவனும் இதுவரை அதுபற்றிக் கேட்டதும் இல்லை. தனக்கு மாதாமாதம் வரும் பென்சன் பணத்தையும், மகன் அனுப்பும் பணத்தையும் கூட அந்த இல்லத்துக்கே அவர் கொடுத்துவிடுவதால், அனைவருக்குமே பரமசிவத்தின்மேல் மதிப்பும் மரியாதையும் அதிகம். பரமசிவத்தின் ஆலோசனையின் பேரில் இப்போது முதியவர்கள் மட்டுமல்லாது ஆதரவற்ற சில குழந்தைகளையும் அந்த இல்லம் தத்தெடுத்துக்கொண்டது.

பரமசிவன் முதியோர் இல்லத்துக்கு வருவதற்கு முன் இருந்தே சிவகாமி அங்கு இருக்கிறாள். கிட்டத்தட்ட இவர்கள் இருவரும்தான் அங்கு நெடுநாட்களாக இருப்பவர்கள். இல்ல நிர்வாகத்தினர் தவிர அனைவருமே இவர்களைக் கணவன் மனைவி என்றே நினைத்துக்கொண்டிருந்தனர். சிவகாமி எங்கு பிறந்தாள். பெற்றோர் யார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஏன்? அவளுக்கே தெரியாது. இந்த இல்லத்தை நடத்தும் புலம் பெயர்ந்த இந்தியர்கள், கல்கத்தாவில் அவர்களின் கிளையில் இருந்து சிவகாமியை அவளது முப்பதாவது வயதில் சென்னைக்கு அனுப்பிவைத்தார்கள். இங்கு இந்த இல்லத்தில் முக்கியமான பணிகளையெல்லாம் கவனித்துவருகிறாள். தான், கல்கத்தாவில் சிவராத்திரியன்று கண்டெடுக்கப்பட்டு, அங்குள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில் ஒப்படைக்கபட்டதாகவும், அங்கு அடிக்கடி வந்து போகும் அன்னைத் தெரசாதான் தனக்குச் சிவகாமி என்று பெயரிட்டதாகவும், தனக்கென்று யாருமில்லையென்றும், தான், ஒரு ஆதரவற்ற பெண் என்பதையும் சிவகாமி பரமசிவனிடம் சில வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் அன்பாகப் பழகினர். ஒருவருக்கு வேண்டியதை இன்னொருவர் செய்துகொண்டு, மிக அமைதியான சூழலில் வாழ்ந்தனர். பரமசிவத்துக்குக் கிடைக்கவேண்டிய மன அமைதி, நிம்மதி இந்த இல்லத்தில் கிடைத்ததாகவே உணர்ந்தார். அதனால்தான் அமெரிக்கா செல்வது பற்றித் தன் மகனிடம் அவர் இதுவரை பேசியதே இல்லை.

பரமசிவனைச் சிவகாமி தன்னுடைய 50-வது வயதில் சந்தித்தாலும், தனக்குப் பரமசிவன் மேல் அளவுகடந்த மரியாதை, இதுவரை உணராத ஒரு பாச உணர்வு. இத்தனை வருடங்களுக்குப் பிறகு தனக்கு ஏதோ நெருங்கிய சொந்தம் கிடைத்தது போன்ற ஒரு தெளிவு. தனக்கென்று கடவுள் இவரை அனுப்பியிருக்கிறார் என்றெல்லாம் ஏதேதோ மனதுக்குள் தோன்றிற்று. காதல், காமம், உறவு, இல்லறம், பிரிவு இவையெல்லாம் சிவகாமிக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்தது கருணை ஒன்றே! தியானம், பக்தி, படிப்பு இவைகள்தான் வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருந்த சிவகாமிக்கு தன்மீது பரமசிவம் காட்டும் அக்கறை, பொறுப்பு, பாசம், பரிவு, பகிர்தல் இவையெல்லாம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பிறகு அந்தப்பாச உணர்வுகளை மனம் தேட ஆரம்பித்தது. இருவருக்குமே இந்த வயதில் எது தேவையோ அந்தத் தேவைகள் ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கிடைத்ததை மனப்பூர்வமாக, ஆத்மார்த்தமாக உணர்ந்தனர். தத்தம் உணர்வுகளைச் சரியான அலைவரிசையில் பகிர்ந்துகொள்வதும், புரிந்துகொள்வதும் இருந்துவிட்டால் அந்த உறவில் ஏற்படும் பலமே வீரியம் மிக்கதுதான். அது அங்கு இரட்டிப்பானது. எப்போதும் இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள். ஒன்று கோவிலில் இருப்பார்கள் அல்லது அங்குள்ள சிறிய பூங்காவில் குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

சிவகாமி முதன்முறையாக அழுதது அன்னைத் தெரெசாவின் மறைவின்போதுதான். இரண்டாவது முறையாக இன்றுதான் அழுதிருக்கிறாள். தனக்கு உடல்நிலை மோசமாகி அடிக்கடி படுத்த படுக்கையாகி விடுவதால், எங்கே? தான் பரமசிவத்தை விட்டுப் பிரிந்துவிடுவோமோ என்று எண்ணித் தனக்கு மாங்கல்யம் கட்டச்சொல்லும்போதுதான் அழுதிருக்கிறாள். கடவுளிடம் இந்தக் கன்னியுள்ளம் வேண்டுவதெல்லாம்
“நான் மறுபடியும் சிவகாமியாகவே பிறக்கவேண்டும். பரமசிவனின் மனைவி ஆவதற்காகவாவது பிறக்கவேண்டும். ஆனால் ஒரு ஆதரவற்ற அனாதையாக மறுபடிப் பிறக்கவே கூடாது” என்பதுதான்.

இன்று சிவகாமி மிகவும் தெளிவான முகத்தோடு காணப்பட்டாள். வெள்ளிக்கிழமையும் வந்தது. அங்குள்ள பிள்ளைகளும், முதியோர்களும் புத்தாடையிலும் இனிப்புகளிலுமாக குதூகளித்து அனைவரும் பேசிக்கொண்டனர். “சிவகாமிப்பாட்டிக்கும் பரமசிவம் தாத்தாவுக்கும் பொன்விழாவாம். அந்தத் தாத்தாவுக்கு 75 வயசாச்சாம். சீக்கிரமே 100-வது வயசுக்கல்யாணமும் கொண்டாடணும், அப்பத்தானே எங்களுக்கெல்லாம் நெறைய ஸ்வீட், ட்ரெஸ் எல்லாம் கெடைக்கும்... ஹையா.. ஜாலி.... பெஸ்ட் ஆப் லக் தாத்தா!’’ தனக்கு 75 வயது ஆகாவிட்டாலும் அனைவரிடமும் அவ்வாறு சொல்லி, எந்த உறவுகளுமே இல்லையென்றாலும், அந்த இல்லம்தான் உலகம் என்று ஆயிரமாயிரம் கனவுகளோடு துள்ளிக்குதிக்கும் கள்ளம் கபடமற்ற பிஞ்சு உள்ளங்களின் முன்னிலையிலும், வாழ் நாளெல்லாம் தான் பெற்ற பிள்ளைகளுக்காக மெழுகாக உருகித் தன்னை அர்ப்பணித்துவிட்டுக் கடைசிக்காலத்தில், எப்பொழுது ஆதரவும், பரிவும், பாசமும் அவர்களுக்குத் தேவையோ அப்பொழுது, பெற்ற பிள்ளைகளாலேயே சுமையென நினைத்துத் தூக்கி வீசப்பட்ட அந்த ஆதரவற்ற முதியோர்களும் வாழ்த்துவதைவிடவா வேறொருவர் வாழ்த்திவிட முடியும்? அந்த அற்புத உலகத்தைத் தமதாக்கிக் கொண்டு அவர்களின் ஆசீர்வாதத்தோடு, வாழ்க்கை, இல்லறம் என்றால் என்னவென்றே தெரியாமல், பாசம், பரிவு, கருணை இவைகளே வாழ்க்கை என்று எண்ணி வேறு எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழ்ந்து மறைந்த அந்த அன்னைத் தெரசாவைப் போன்றே வெள்ளை உள்ளம் படைத்த அந்தக் கன்னி சிவகாமியின் கழுத்தில் பரமசிவன் தாலியைக் கட்டித் தன் சொந்தமாக்கிக்கொண்டு அந்த இல்லத்துக்குள்ளேயே இருவரும் தன் சொந்தங்களான அந்தப் பிஞ்சுக்குழந்தைகளோடு குழந்தைகளாக அடைக்கலம் புகுந்தனர். http://www.thinnai.com/?module=displaystory&story_id=10810164&format=html
நன்றி : திண்ணை

Friday, July 4, 2008

'தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறது காங்கிரஸ்' அத்வானி

மழை மேகங்களுக்காக நாம் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். தேர்தல் மேகங்கள் தென்படுகின்றன. தொடைதட்டும் ஓசைகள் அரசியலில் கேட்கத்தொடங்கிவிட்டன.

தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்கிறார் காங்கிரஸ் தலைவி. தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறது காங்கிரஸ் என்கிறார் அத்வானி. வாயில் வருவதெல்லாம் கோதைக்கு பாட்டு என்கிற மாதிரி லாலு சொல்லுகிறதெல்லாம் ஜோக்காகிப்போய்விட்டது. கனவில் கூட அத்வானி பிரதமராக முடியாது என்கிறார் லாலு. இடதுசாரிகளை பார்லிமெண்டில் எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகிக்கொண்டிருக்கிறது. சமாஜ்வாதியின் சகாயத்தினால் ஆட்சி சரிந்துபோகாது என்று தெரிகிறது.

மத்தியில் தேர்தல் மேகங்களால் தமிழ்நாட்டிலும் குளிர்காற்று வீசத்தொடங்கிவிட்டது. 'அண்ணன் எப்போது வெளியேறுவான்...திண்ணை எப்போது காலியாகும்' என்று நான்கு வருடங்களாக காத்திருக்கிறது பிரதான எதிர்க்கட்சி.

'பசித்தவனுக்கு குழம்பெல்லாம் வேண்டாம்' என்கிற மாதிரி கிடைக்கிற ஆட்களை கட்சிக்குள் கொண்டுவரும் வேலையை எப்போதோ தொடங்கிவிட்டது அம்மாவின் அணி.

'இரண்டிலொன்றில் இணையமாட்டோமா...இரண்டொரு இடங்களாவது கிடைக்காதா' என்று கணக்குபோடும் நடிகர்களின் அண்மைக்கால கட்சிகள்...
'சூடிய பூவாக இருந்தாலும் பரவாயில்லை. வாடிய பூ வேண்டாம்' என்று ஏதாவதொரு நடிகரின் துணையைத் தேடும் திராவிடக்கட்சிகள்...
"கட்சியாக இருப்பவர்களுக்குத்தான் கவலை. குழுக்களாக இருக்கும் எங்களுக்கென்ன கவலை.
சொந்தக் காரியம் ஜிந்தாபாத். இருக்கவே இருக்கிறது டெல்லி காட்டும்பாதை" என்கிறது காமராஜ் ஆட்சி என்கிற சொப்பனத்தில் இருக்கும் காங்கிரஸ்.

பதவிசுகம் அனுபவித்து விட்ட பாட்டாளிகளோ காற்று வீசும் திசைக்காக காத்திருக்கிறார்கள்.

மாநிலத்தில் அமையப்போகும் அணிகள் மத்தியில் அமையப்போகும் அணிகளுக்காக காத்திருக்கின்றன. வளைந்து போனாலும் வழியோடு போகணுமல்லவா?
இயங்கிக்கொண்டிருக்கும் 'லாபி' கள் இப்போது ஓவர்டைம் செய்து கொண்டிருக்கின்றன. "மத்தியிலும் பதவி வேண்டும். மாநிலத்திலும் பதவிவேண்டும். அதுமாதிரி ஏதாவது பாரப்பா..?"
இது அதிகார மையங்களின் கட்டளை. 'ஃபீலர்'களின் வாகனங்களுக்கு பெட்ரோல் கூடுதலாக தேவைப்படுகிறது.

தேர்தல் லாவணியில் கேள்விகளும் எதிர்க்கேள்விகளும் சாதாரணமாக இருக்கப்போவதில்லை. பதவி சுகத்தில் இருந்தவர்களுக்கு முள்ளாய் குத்தும் கேள்விகள் தயாராகிவிட்டன. விலைவாசி ஏன் உயர்ந்தது? விலைவாசியைக் குறைக்க காங்கிரஸ் என்ன செய்தது? நீயும்தானே ஆட்சியில் இருந்தாய்? நீ என்ன செய்துவிட்டாய்? நீ ஏன் ராஜினாமா செய்யவில்லை?

மதுக்கடையை ஏன் திறந்தாய்?
மணல்கொள்ளையில் ஆதாயமா?
பதுக்கலைப்பார்த்து ஏன் பதுங்கிப்போனாய்? இப்படிப்போகும் கேள்விகள்.


அன்னாடங்காச்சி பகல் கஞ்சி குடித்துவிட்டு அரைத்தூக்கத்தில் இருந்தார். மாலைநேரக்கல்லூரிக்குப் போன அவருடைய மகன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.,

"ஏண்டா, காலேஜுக்கு போவலை?"
"இல்லேப்பா, காலேஜு இல்லை."
"என்னடா ஆச்சு?'
"சாயந்திர காலேஜுக்கு வாத்தியாரெல்லாம் இன்னும் போடலியாம். லெக்சரர் எல்லாம் வந்தப்புறம் வாங்கன்னு எளுதிப்போட்டிருக்கு"
"எப்போ வருவாங்களாம்?"
"அரசாங்கத்துலேந்து ஆர்டர் போட்டு புது லெக்சரர் போடணுமாம்.
அடுத்தவாரம் வந்து பாருங்கன்னு சொல்லிட்டானுக."
"யாருடா சொன்னது?"
"பிரின்ஸ்பால்தான்"
"அது என்னடா பிரின்ஸ்பாலெ மரியாதெ இல்லாமெ பேசுறே?"
"காலேஜுலே எல்லாரும் அப்பிடித்தான் சொல்லுவானுக. அது பலக்கமாயிப்போச்சு"
"ஏய்...அது என்னடா பலக்கம்...? பழக்கம்னு சொல்லுடா?"
"இப்போதானே செம்மொழி கட்டிடம் தொறந்திருக்காங்க. கொஞ்சநாள் போவட்டும். கத்துக்குடுவேன்."
- அன்னாடங்காச்சி

Wednesday, June 25, 2008

அண்ணா பல்கலைகழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்?

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனத்தில், வேந்தரான ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தற்போதைய துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்போகிறாரா? அல்லது அரசு தரப்பு நிர்பந்தத்துக்கு பணிந்து புதிய துணைவேந்தரை நியமிக்கப்போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டி.விஸ்வநாதனின் பதவிக்காலத்துக்குப் பின் அடுத்த துணைவேந்தரை நியமிக்க பரிந்துரை செய்யும் குழுவை நியமனம் செய்திருந்தனர். குழுவில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தங்கவேலு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.எஸ். பழனிச்சாமி, சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, உலகத் தரத்திற்கு அதன் செயல்பாடுகளை உருவாக்கியவர் விஸ்வநாதன்.

இவரது பதவிக்காலம் வரும் 27-ம் தேதியுடன் முடிவ டைகிறது. விஸ்வநாதனின் பதவியை நீட்டிப்புச்செய்யவோ, புதிய துணைவேந்தரை பரிந்துரைக்கவோ 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள், அரசுத் தரப்பில் மிரட்டப்படுவதாக புகார் எழுந்தது.

அரசுத் தரப்பிலிருந்து புதிய துணைவேந்தருக்கான பட்டியலையும் குழுவினரிடம் அளித்துள்ளனர். ஆனால் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தங்கவேலு, எஸ்.பி.தியாகராஜன் ஆகியோர் தற்போதைய துணைவேந்தர் விஸ்வநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி பரிந்துரைக்கவே விரும்பினர்.

ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவும் தற்போதைய துணை வேந்தர் விஸ்வநாதன் பதவியை நீட்டிக்கவே விரும்புகிறார் என்றும் கூறப்படுகிறது.

அதனால் தேர்வு மற்றும் பரிந்துரைக் குழுவினர் மிரட் டப்பட்டு அரசு தரப்பில் அளிக்கப்படும் பட்டியலில் உள்ள 3 பேரை புதிய துணைவேந்தர் பதவிக்குப் பரிந்துரை செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க அதிகாலை இணைப்பில் http://www.adhikaalai.com/index.php?/en/சிறப்புக்கட்டுரை/சிறப்புக்கட்டுரை/அண்ணா-பலகலைகழகத்தின்-அடுத்த-துணைவேந்தர்-யார்

Thursday, June 19, 2008

கனிமொழிக்கு, பைபிள், குரான் பற்றி பேசும் துணிச்சல் உள்ளதா?" - இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன்

பகவத் கீதையை மேற்கோள் காட்டும் கனிமொழிக்கு, பைபிள், குரான் பற்றி பேசும் துணிச்சல் உள்ளதா என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : பெண்கள் சீரழிந்து கெட்டுப் போவதால்தான் வர்ண ஆசிரம தர்மம் அழிந்து தேவையற்ற சந்ததிகள் பிறக்கின்றனர் என்று பகவத் கீதையில் உள்ளதாக பொருள் சொல்லி இருக்கிறார் கனிமொழி.

தந்தையைப் போலவே மகளும் தெரியாத விஷயத்தை பற்றி ஆவேச விளக்கம் சொல்லியிருக்கிறார். கீதையை மேற்கோள் காட்டுவதோ, உபநிஷத்தை, மகாபாரதத்தை, ராமாயணத்தை, பைபிளை, குரானை மேற்கோள் காட்டுவது என்பதோ தடை செய்யப்பட்ட ஒன்றல்ல.

உலகத்தின் அத்தனை மரபுகளும், மதங்களும், கோட்பாடுகளும், கொள்கைகளும், இலக்கியங்களும், படைப்புகளும், ஒரு மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிக்கையில் கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார்.

கீதையைக் கூறிய கனிமொழி, பைபிள், குரான் போன்ற நூல்களில் மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டி ருக்கும் உதாரணங்களைக் கூறத் தயாரா? அப்படி மேற்கோள் காட்டினால் அவரை துரத்தி, துரத்தி, துரத்தி விரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பார்கள். அல்லது வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் போல நாடு கடத்தி இருப்பார்கள். முதலமைச்சரின் மகள் என்ற திமிரோடு பேசுவதை கனிமொழி நிறுத்திக் கொள்ளவேண்டும்.

கனிமொழிக்கு தைரியம் இருக்குமேயானால் பகவத் கீதை பற்றி விஷயம் தெரிந்தவர்களோடு விவாதிக்க தயாரா? அப்படியானால் அவருக்கு வசதியான தேதி, பொது இடம் குறிப்பிடட்டும்.

Monday, May 12, 2008

சாருநிவேதிதா-வுக்கு எச்சரிக்கை : அமிர்தம் சூர்யா

எழுத்தாளர் ஜெயமோகனை விமர்சிப்பது; எதிர்வினை புரிவது; வழக்கு தொடுப்பது; மன்னிப்பு கேட்க சொல்லி உரிமை காப்பது எதுவும் தவறில்லை. ஆனால் இம்மாதிரியான விசயங்களை யார்? எதன் பொருட்டு? எந்த அரசியலின் அடிப்படையில் சொல்கிறார்கள்? அதனில் உண்மையில் விகிதாச்சாரம் என்ன? என்பதுதான் அதன் கேள்வி.
'ஜெயமோகனின் சுயமோகம்' என்ற தலைப்பில் சாருனிவேதிதா எழுதியிருப்பதை படித்தபின் நமக்கு புலப்படுவது......

ஜெயமோகனின் சுயமோகத்தை சொல்லிக்கொண்டெ இடையிடையே தனது புகழை, பயணத்தை, தனது பெருமையான கட்-அவுட்டுகளை நடுவதற்காக நட்டுக்கொண்டே தனது மோகத்தை பரைசாற்றி கொள்கிறார் சாரு. உண்மையில் ஜெயமோகன் இருக்கையில், கட்டிப்பிடித்து முத்தமிட்டுக்கொள்வதும், காலச்சுவடு போனதும் கிண்டலடித்து புத்தகம் போடுவதும் தனது தற்புகழ்ச்சிக்காக விலைபோவதும் கேவலமான ஒன்று.

மனுஷ்யபுத்திரனுக்கு ஜெயமோகன் தேவைப்பட்டார், ஜெயமோகனுக்கு உயிர்ம்மை தேவைப்பட்டது. அதனால் காலச்சுவடு எதிரியானது. உயிர்மையின் கருத்து ஒவ்வாமை மற்றும் அரசியல் லாப சமரசம் இவற்றால் ஜெயமோகன் காலச்சுவடு போனார். ஜெயமோகனுக்கு காலச்சுவடு தேவைபட்டது. முன்பு காலச்சுவட்டில் இருந்த சாரு இப்போது உயிர்ம்மை சார்பில் நின்று தாக்குகிறார்.

இது கருத்தியல் மற்றும் படைப்பை முன்வைத்து நிகழும் யுத்தமல்ல. உயிர்ம்மை-காலச்சுவடு- க்கு இடையேயான நிறுவனப்போர். இது முழுக்க முழுக்க வியாபாரம். அதன் பொருட்டான அரசியல் மற்றும் அவர்களின் இருப்பையும் தக்கவைத்துக்கொள்ள, சம்மந்தபட்ட வியாபார போட்டி. அதனூடாக சாரு தன்னை கட் அவுட்டாக நிறுத்திக்கொள்ள இது ஒரு காழ்ப்பு-பிரதி என்பதாக கவிகள், விமர்சகர்கள் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் கருத்தாக ஒரு கோட்டத்தில் முன்வைக்கபட்டுள்ளது.

பக்கம் 53-ல் மனுஷ்யபுத்திரனை அவருடைய பிறவி குறையை கேலி செய்து ஜெயமோகன் எழுதியதாக சாரு எழுதியுள்ளார். இது அபத்தமானது. சொல்புதிது இதழில் வெறொருவர் எழுதியது. இதழில் பிரசுரமானதாலேயே அது ஜெயமோகன் எழுதியாகாது. பக்கம் 52-ல் தமிழ் பண்பாட்டை கீழ்த்தரமாக ஜெயமோகன் பேசிவிடுகிறார் என்கிறார் சாரு. மேலும் அவர் எழுத்தை படித்தால் அசிங்கத்தை மிதித்ததுபோல் இருக்கிறது என்கிறார்.

சபாஷ்.....

Tuesday, May 6, 2008

ஓர் ஈழக்குழந்தையின் இதயம் வெடிக்கும் கடிதம்! - அண்ணன் கை.அறிவழகன்

(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது).

நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே?

குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா? எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்......

என் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்து வீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் "மஸ்தானா, மஸ்தானா"-வின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும். அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா?

அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்.....

அப்போதே எழுதவேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல் ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்... அதனால் தான் எழுதவில்லை........ ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது.....அதுமட்டுமல்ல, இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது. ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே? கட்டுரையைத் தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/ஓர்-ஈழக்குழந்தையின்-இதயம்-வெடிக்கும்-கடிதம்-அண்ணன்-கை.அறிவழகன்

Monday, May 5, 2008

"ஜெயகாந்தன்... அவன் அப்படித்தான்" - பாரதிராஜா

எழுத்தாளர் ஜெயகாந்தனின் 75-வது பிறந்த நாள் விழாவில் இயக்குனர் பாரதிராஜா ஆற்றிய உரையின் ஒலி வடிவம் கேட்க..... இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/-ஜெயகாந்தன்-...அவன்-அப்படித்தான்-பாரதிராஜாஒலிவடிவில்

Saturday, May 3, 2008

இந்தியர்களைவிட 5 மடங்கு அதிகம் சாப்பிடுபவர்கள் அமெரிக்கர்கள்

உலக அளவில் உணவுப் பொருட்களின் விலைவாசி கூடியதற்கு இந்தியர்களும் சீனர்களும் அதிகமாய் சாப்பிடுவதால்தான் என்று அமெரிக்க அதிபர் புஷ் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியத் தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே புஷ்ஷின் கருத்து உண்மைதானா? என்ற பொருளாதார புள்ளி விவர ஆய்வில் பல்வேறு நிஜங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.


அரிசி, கோதுமை மற்றும் உணவு தானியங்கள் போன்றவற்றை ஒரு தனி மனிதன் உட்கொள்ளும் அளவை எடுத்துக்கொண்டால் இந்தியர்களைவிட அமெரிக்கர்கள் 5 மடங்கு அதிகம் என்று அமெரிக்க விவசாயத் துறையின் 2007- ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. வருடம் ஒன்றுக்கு சராசரியாக இந்தியர் ஒருவர் 178 கிலோ கிராம் தானியத்தைத்தான் சாப்பிடுகிறார். ஆனால் அமெரிக்கர்கள் வருடத்திற்கு 1,046 கிலோ கிராம் தானியத்தை தின்று தீர்க்கின்றனர்.


சீனர்களைவிட மூன்று மடங்கும் ஐரோபியர்களைவிட இரண்டுமடங்கும் அதிகமாக அமெரிக்கர்கள் உணவு உட்கொள்கின்றனர்.


உண்மையில் அமெரிக்கர்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. அதனால்தான் அவர்களின் சாப்பாட்டு அளவும் அதிகரித்துள்ளது. 2003-ல் அமெரிக்கர் ஒருவரின் தனி நபர் உணவு தானியக் கொள்முதல் 946 கிலோ கிராமாக இருந்தது. ஆனால் 2007 -ஆம் அண்டில் இந்த அளவு 1046 கிலோவாக உயர்ந்துள்ளது. இதை இந்தியர்களுடன் ஒப்பிடும்போது 5 மடங்கு அதிகமாக அமெரிக்கர்கள் உட்கொள்கின்றனர். இந்த ஒப்பீடு வெறும் தானியங்களுக்கு மட்டுமல்ல. எல்லாவிதமான உணவுப் பொருட்களையும் வாங்குவதில் அமெரிக்கர்கள்தான் முன்னணியில் உள்ளனர்.இந்தியாவின் தனிநபர் ஒருவர் வருடத்துக்கு 38 கி.கி.பாலை மட்டுமே குடிக்கின்றனர். சீனர்கள் 17 கி.கி. பாலை மட்டுமே அருந்துகின்றனர். ஆனால் அமெரிக்கர்களோ 78 கி.கி.பாலை குடித்து தீர்க்கின்றனர். அதேபோல் காய்கறியின் அளவு வருடத்துக்கு 11 கி.கி. யை மட்டும் இந்தியர்கள் சாப்பிடுகின்றனர்.

ஆனால் அமெரிக்கர்களோ 41 கி.கி. யை சாப்பிடுகின்றனர். இந்தியாவில் ஏராளமானோர் காய்கறிகளைத்தான் விரும்பிச் சாப்பிடுகின்றனர். அதில் அவர்களுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடுகிறது. ஆனால் அமெரிக்கர்களோ அசைவ உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.ஆண்டு ஒன்றுக்கு ஓர் அமெரிக்கர் 42.6 கி.கி மாட்டிறைச்சி சாப்பிடுகிறார். ஆனால் இந்தியாவில் இதன் அளவு 1.6.கி.கி.அதே போல் கோழியை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவின் தனி நபர் ஒருவர் 45.4 கி.கி. போட்டுத் தாக்குகிறார். ஆனால் இந்தியர் ஒருவர் 1.9.கி.கி மட்டுமே சாப்பிடுகிறார். இப்படி அதிர்ச்சி அளிக்கும் உணவு தானிய ஒப்பீடுகள் கிழக்கத்திய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்குமிடையே நிலவி வருகிறது. இதன் உண்மை புரியாமல் உணவு தானிய விலைவாசி உயர்வுக்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் புஷ் கதைவிடுகிறார். மேற்கண்ட புள்ளி விவரங்கள் எல்லாம் அமெரிக்க விவசாயத் துறை வெளியிட்டதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

புஷ்ஷூக்கு பொருளாதார அறிவு கிடையாது : இந்தியத் தலைவர்கள் கண்டனம்

விலைவாசி உயர்வுக்கு இந்தியர்கள் அதிகமாக சாப்பிடுவதே காரணம் என்று அதிபர் புஷ் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு உட்பட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இதே நிலைமை நீடிக்கிறது. விலைவாசியை கட்டுப்படுத்த தவறி விட்டதாக மத்திய அரசை கண்டித்து பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே இந்தியா மற்றும் சீனாவில் அதிக அளவில் உணவு பொருட்கள் பயன் படுத்துவதால் விலை அதிகரித்து விட்டதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி கண்டலீசா ரைஸ் தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், வாஷிங்டன் அருகே ஒரு பொருளாதார மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் புஷ், `உலகம் முழுவதும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள் அதிக அளவில் உணவு பொருட்களை சாப்பிடுவதால் அவற்றின் தேவை அதிகரித்து விலைவாசி உயர்ந்து விட்டது' என்றார்.
புஷ்சின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதாவது:- இந்தியாவில் உணவு பொருட்கள் பயன்படுத்துவதில் மாற்றம் ஏற்பட்டதாலேயே விலைவாசி அதிகரித்து விட்டதாக அதிபர் புஷ் கருதுவது முற்றிலும் தவறானது. இந்தியா, உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு அல்ல. அது ஏற்றுமதி செய்யும் நாடு. வளர்ந்த நாடுகளில் பயோ-டீசல் உற்பத்திக்காக பெரும்பாலான விளைநிலங்களை ஒதுக்கியதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ஆகும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின்போது, இந்தியாவின் உணவு தன்னிறைவுக்காக முதலாவது பசுமைப் புரட்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் இருந்து இந்தியா பின்வாங்கவில்லை. இரண்டாவது பசுமை புரட்சி திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தியை 4 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மணீஷ் திவாரி தெரிவித்தார்.
மத்திய வர்த்தக துறை இணை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "அதிபர் புஷ்சுக்கு ஒருபோதும் பொருளாதார அறிவு சிறப்பாக இருந்தது கிடையாது. தற்போது, மீண்டும் ஒருமுறை அதை நிரூபித்து இருக்கிறார். இந்தியாவில் உணவு பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதால் உலக அளவில் விலைவாசி உயர்ந்து விட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது'' என்றார்.
பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:- ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் மத்திய மந்திரிகளின் பொறுப்பற்ற அறிக்கைகளுக்கு அதிபர் புஷ், முழு வடிவம் கொடுத்து இருக்கிறார். விலைவாசி உயர்வு குறித்து மத்திய மந்திரி பிரபுல் படேல் கூறியபோது கூட, 'மக்களின் உணவு பழக்க மாற்றத்தால் விலைவாசி அதிகரித்து விட்டது' என்று இதே போன்ற கருத்தை தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி என்பது, அத்தியாவசிய பொருட்களின் அதிகப்படியான தேவையோடு இணைந்தது ஆகும். தேவையான அளவு உணவு பொருட்களை வினியோகம் செய்வதோடு, விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதும் அரசின் பொறுப்பு. இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கூறுகையில், "இந்தியாவில் அதிக அளவு உணவு பொருட்கள் பயன்படுத்துவது குறித்து புஷ் எதுவும் சொல்லத் தேவையில்லை. அவருடைய நாட்டில் அவருக்கு நிலவும் பிரச்சினைகளை முதலில் கவனிக்க வேண்டும். இந்தியாவின் பிரச்சினையை நாங்களே சமாளிப்போம். இதுபோன்று அசிங்கமான முறையில், இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்'' என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், "உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளே காரணம் என்று ஐ.நா.சபை தெளிவாக கூறியுள்ளது. எனவே, அதிபர் புஷ்சின் கருத்து முட்டாள்தனமானது'' என்று கூறினார்.

இந்தியர்கள் நிறைய சாப்பிடுவதால்தான் விலைவாசி உயர்வு : ஜார்ஜ் புஷ்

இந்தியர்கள் வயிறு நிறைய சாப்பிடுவதால்தான் உலக அளவில் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.

இ‌ந்‌தியா போ‌ன்ற நாடுக‌ளி‌ன் பொருளாதார வள‌ர்‌ச்‌சி ந‌ல்லதுதா‌ன் ஆனா‌ல், அதனா‌ல் அ‌திக‌ரி‌த்து‌ள்ள உணவு தா‌னிய‌ங்க‌ளி‌ன் தேவையே உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்‌வி‌ற்கு‌க் காரண‌ம் எ‌ன்றும் அவ‌ர், கூ‌றியு‌ள்ளா‌ர். இதுகு‌றி‌த்து ‌மிசெள‌ரி‌யி‌ல் நட‌ந்த பொருளாதார‌ மாநாடு ஒ‌ன்‌‌றி‌ல் பே‌சிய ஜா‌ர்‌ஜ் பு‌ஷ், "வள‌ர்‌ந்துவரு‌ம் நாடுக‌ளி‌ன் பொருளாதார வள‌ர்‌ச்‌சி‌யினா‌ல் உலகள‌வி‌ல் தேவை அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. இது உ‌ங்களு‌க்கு‌ம் (அமெ‌ரி‌க்க தொ‌ழில‌திப‌ர்க‌ள்) ந‌ல்லது. ஏனெ‌னி‌ல் இ‌ந்த நாடுக‌ளி‌ல் உ‌ங்க‌ளி‌ன் சர‌க்குகளை ‌வி‌ற்‌கி‌றீ‌ர்க‌ள். வள‌ர்‌ச்‌சி இ‌ல்லாத இட‌த்‌தி‌ல் உ‌ங்க‌ள் சர‌க்குகளை ‌வி‌ற்பது ‌மிகவு‌ம் கடின‌ம்.

வேறு‌விதமாக‌ச் சொ‌ல்ல வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌‌ல், உலக‌‌த்‌தி‌ல் எ‌வ்வளவு வள‌ர்‌ச்‌சி உ‌ள்ளதோ அ‌வ்வளவு வா‌ய்‌ப்புகளு‌ம் உ‌ள்ளன. அத‌ற்கே‌ற்றவாறு தேவைகளு‌ம் அ‌திக‌ரி‌க்‌கி‌ன்றன. எடு‌த்து‌க்கா‌ட்டி‌ற்கு ஒரு சுவார‌‌சியமான ‌விசய‌த்தை‌ப் பா‌ர்‌க்கலா‌ம். இ‌ந்‌தியா‌வி‌ல் 35 கோடி ம‌க்க‌ள் நடு‌த்தர வகு‌ப்பை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் ஆவ‌ர். இது அமெ‌ரி‌க்காவை ‌விட அ‌திகமாகு‌ம். அதாவது இ‌ந்‌தியா‌வி‌ன் நடு‌த்தர வகு‌ப்பு ம‌‌‌க்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அமெ‌ரி‌க்கா‌வி‌ன் ஒ‌ட்டுமொ‌த்த ம‌க்க‌ள் தொகை‌யி‌‌ன் இர‌ண்டு மட‌ங்காகு‌ம். இதனா‌ல் வள‌ர்‌ச்‌சி அ‌திமாகு‌ம்போது தேவை அ‌திக‌ரி‌க்‌கிறது. இ‌ந்‌தியா‌வி‌ல் ‌உ‌ள்ள நடு‌த்தர வகு‌ப்‌பின‌ர் ந‌‌ல்ல ச‌த்தான உணவுகளை வா‌ங்கு‌ம்போது, ப‌ற்றா‌க்குறை ஏ‌ற்ப‌ட்டு உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை அ‌திக‌ரி‌க்‌கிறது" எ‌ன்றா‌ர்.

உணவு‌ப் பொரு‌‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்‌வி‌ல் பருவ‌நிலை மா‌ற்ற‌த்‌தி‌ன் ப‌ங்கை ப‌ட்டிய‌லி‌ட்ட அவ‌ர்,எ‌ரிச‌க்‌தி‌த் தேவைகளு‌க்கு தா‌னிய‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்துவதுதா‌ன் மு‌க்‌கிய‌க் காரண‌ம் எ‌ன்பதை மறு‌த்தா‌ர். "உண‌வு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்‌வி‌ல் எ‌த்தனா‌லி‌ன் ப‌ங்கு இரு‌ப்பதை மறு‌ப்பத‌ற்‌கி‌ல்லை. ஆனா‌ல், அது ம‌ட்டுமே மு‌க்‌கிய‌க் காரண‌ம் அ‌ல்ல. எ‌ரிபொரு‌ட்‌க‌ளி‌ன் ‌விலை உய‌ர்வு‌ம் உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்‌வி‌ற்கு மு‌க்‌கிய‌க் காரணமா‌கு‌ம். ‌நீ‌ங்க‌ள் ஒரு உழவராக இ‌ரு‌‌ந்தா‌ல், நீ‌ங்க‌ள் எ‌ரிபொருளு‌க்கு‌ச் செலவ‌ழி‌க்கு‌ம் தொகையை ‌நீ‌ங்க‌ள் ‌வி‌ற்கு‌ம் பொரு‌ட்க‌ளி‌ன் ‌மீது வை‌ப்‌பீ‌ர்க‌ள். இ‌ல்லை எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் பா‌தி‌க்க‌ப்படு‌வீ‌ர்க‌ள். நீ‌ங்க‌ள் டீசலு‌க்கு அ‌திகமாக‌ச் செல‌விடு‌ம்போது‌ம், உர‌ங்களு‌க்கு அ‌திகமாக‌ச் செல‌விடு‌ம்போது‌ம் ‌நீ‌ங்‌க‌ள் ‌வி‌ற்கு‌ம் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலையு‌ம் அ‌திக‌ரி‌க்‌கிறது. அதாவது உழவ‌ர்க‌ளி‌ன் அடி‌ப்படை‌ச் செலவுக‌ள் அ‌திக‌ரி‌க்கை‌யி‌ல் உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலையு‌ம் உய‌ர்‌கிறது" எ‌ன்றா‌ர் பு‌ஷ். "அமெ‌ரி‌க்கா‌வி‌ல் உணவு‌ப் ப‌ற்றா‌க்குறை இ‌ல்லை. ஆனா‌ல் நம‌க்கு‌ம் ‌விலை உய‌ர்வு‌ப் ‌பிர‌ச்சனை உ‌ள்ளது. நா‌ம் அ‌திகமாக‌ச் செல‌விட வே‌‌ண்டியு‌ள்ளது. உலகள‌வி‌ல் உணவு‌ப் ப‌‌ற்றா‌க்குறை அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. ப‌சி‌யி‌ல் வாடு‌ம் ம‌க்களு‌க்கு உணவு ‌கிடை‌க்க நா‌ம் உதவ வே‌ண்டு‌ம். அமெ‌ரி‌க்கா எ‌ப்போது‌ம் ப‌சியை‌த் ‌தீ‌ர்‌க்கு‌ம் ப‌ணி‌யி‌ல் ‌மிகவு‌ம் பெரு‌ந்த‌ன்மையுட‌ன் நட‌ந்து கொ‌ண்டு‌ள்ளது" எ‌ன்று‌ம் பு‌ஷ் கூ‌றினா‌ர்.

தங்கக்காசு மோசடி : நடிகை ரோகினிக்கு தொடர்பு?

தங்ககாசு தருவதாக சங்கலி தொடர் திட்டத்தில் கைவரிசை காட்டிய மோசடி கும்பலை வடசென்னை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். அதில் நடிகை ரோகினிக்கும் பங்கிருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரோகினியிடம் போலீசார் விசாரனை நடத்த உள்ளனர். சென்னையில் காந்த படுக்கை விற்பனையில் லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி சங்கிலி தொடர் திட்ட மோசடி யில் ஈடுபட்ட கும்பலை பல வருடங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அது போல இப்பொழுது தங்க காசு சங்கிலித் திட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-



சென்னை பெரம்பூர் ராமச்சந்திரன் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 33). இவர் வட சென்னை இணை போலீஸ் கமிஷனர் ரவியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் இண்டர் நெட்டில் விளம்பரம் ஒன்று பார்த்தேன். குறைந்த முதலீட்டில் தங்ககாசு விற்பனையில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டிருந்தது.



நான் தொடர்பு கொண்டபோது அந்த நிறுவன பெண் ஒருவர் தங்ககாசு விற்பனை திட்டம் பற்றி கூறினார். அதன்படி ரூ.33 ஆயிரம் கட்டினேன். 6 கிராம் தங்கம் தரப்படும். நாம் 2 பேரை சேர்த்து விட வேண்டும். அதில் ஒருவரின் முதலீட்டு பணம் சேர்த்து விடும் நபருக்கு வந்து விடும். இப்படி சங்கலி தொடர்போல் சேர்த்து கொண்டே செல்லலாம். இதன் மூலம் ஏராளமான தங்க காசும், லட்சக்கணக்கில் பணமும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்.

அதை நம்பி நான் வட்டிக்கு பணம் வாங்கி ரூ.70 ஆயிரம் வரை கட்டினேன். ஆனால் எதிர்பார்த்தபடி தங்ககாசும் வரவில்லை. பணமும் வரவில்லை. சங்கிலி தொடர் திட்டம் ஒரு மோசடி வேலை என்பது தெரிந்தது.

இது பற்றி சேத்து பட்டில் உள்ள அவர்களது நிறு வனத்தை அணுகி கேட்டால் பணம் தராமல் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். என்னை போலவே ஓட்டேரி, புளியந்தோப்பு பகுதியிலும் நூற்றுக்கணக்கான நபர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறி இருந்தார்.

இணை கமிஷனர் ரவி உத்தரவின் பேரில் செம் பியம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்தனர். உதவி போலீஸ் கமிஷனர் ராஜாராம் மற்றும் போலீசார் சேத்துபட்டில் உள்ள தங்ககாசு சங்கிலி தொடர் திட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தியதில் மோசடியில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து தங்ககாசு நிறுவன பொது மேலாளரும், பெண் தொழில் அதிபருமான புஷ்பம் மேலாளர், அரிபிரபாகர், சுரேஷ், சந்திர சேகர், அகஸ்டின், விஜயா உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சங்கிலி தொடர் திட்டத்தில் நடிகை ரோகிணிக்கும் பங்கு உண்டு என புகார் கூறப் பட்டிருப்பதை தொடர்ந்து அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

புஷ்பத்திடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடி கும்பலின் தலைவன் விஜயபாஸ்கரன் என் பதும் பாங்காக்கில் இருந்து இண்டர்நெட் மூலம் போலி விளம்பரங்களை கொடுத்து கோடிக்கணக்கில் மோச டியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Friday, May 2, 2008

பிரியங்கா - நளினி சந்திக்கவில்லை : சிறை அதிகாரி பகீர் தகவல்

சிறையில் ராஜீவ் காந்தி கொலையாளியான நளினியை பிரியங்கா சந்திக்கவில்லை என வேலூர் சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் ராஜசௌந்தரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவையே ஆச்சரியப்பட வைத்த சம்பவங்களில் ஒன்று நளினி- பிரியங்கா சந்திப்பு. அச்சந்திப்பு பற்றி எல்லா ஊடகங்களும் பரபரப்புச் செய்திகள் வெளியிட்டிருந்தன. ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தியும், மார்ச் 19-ல் வேலூர் சிறையில் நளினியை சந்தித்துப் பேசியதை ஒப்புக் கொண்டார்.
அப்பொழுது என்ன பேசிக் கொண்டார்கள்? எப்படி எல்லாம் நளினி, பிரியங்காவின் உணர்ச்சிப் பூர்வமான சந்திப்பு நிகழ்ந்தது… பிரியங்கா மனம் விட்டு அழுதது, சோனியாவுக்கு நளினி இனிப்பு பலகாரம் செய்து வைத்திருந்தது…இதனால் தன்னுடைய கணவர் முருகனுக்கும் நளினிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது...இருவரும் தற்கொலைக்கு முயன்றது...இப்படி பக்க கணக்கில் இருவரின் சந்திப்பு பற்றி நாடே அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் பேசிக் கொண்டது. இவர்களின் சந்திப்பு கிட்டத்தட்ட 10 நாட்கள் நாட்டின் எல்லா ஊடகங்களையும் ஆக்கிரமிப்பு செய்திருந்தது.


ஆனால் இப்பொழுது முழுப் பூசணியை சோற்றுக்குள் அமுக்குவது மாதிரி இச்சந்திப்பு நிகழவே இல்லை என சிறைக் கண்காணிப்பாளர் முரண்பட்ட அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு நிக்ழந்தா? இல்லையா? என்பது பற்றி சென்னை வக்கீல் ராஜ்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சிறைக் கண்காணிப்பாளருக்கு விண்ணப்பித்திருந்தார்.

இது பற்றி தெரிந்தவுடன் பிர்யங்காவிடம் டெல்லி பத்திரிகைகள் கேள்வி எழுப்பியது. அவரும் சந்திப்பை ஒத்துக் கொண்டார்.ஆனால் சிறைத்துறை வட்டாரம் அப்பொழுது தகவல் ஏதும் அளிக்கவில்லை.அதற்கான் பதிலை இப்பொழுது தெரிவித்துள்ளது.

"மார்ச் 14 மற்றும் மார்ச் 19 ந் தேதிகளில் நீங்கள் கேள்வி எழுப்பி இருக்கும்படியான எவ்விதச் சந்திப்பும் நிகழவில்லை." என தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி விண்ணப்பித்திருந்த மனுவுக்கு பதில் அளித்துள்ளது சிறை நிர்வாகம்.

சிறைத் துறையின் இந்தப் பகீர் தகவலை அடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மேல்முறையீடு செய்யப் போவதாக நளியின் வழக்குரைஞர் துரைசாமி கூறி உள்ளார்.

வேலுர்ர் சிறை பதிவேட்டில் ப்ரியங்கா- நளியின் சந்திப்பு பற்றி பதிவு செய்யப்படவில்லை. எனவே இசசந்திப்பு நிகழவில்லை என சிறைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.எனவே நளினி- பிரியங்கா சந்திப்பு பற்றி பல்வேறு சந்தேகங்களும் கிளம்பியுள்ளன. இதனை அடுத்து அடுத்தகட்ட பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது.

சந்தன வீரப்பனுக்கு சிலை

தமிழ்நாடு போலீசாருக்கு மிகப் பெரும் சவாலாக திகழ்ந்த `மாயாவி' வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் மேட்டூர் அணை அருகே மூலக்காடு வனப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் வீரப்ப னுக்கு நினைவு மண்டபம் கட்ட அவரது மனைவி முத்து லட்சுமி திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக முத்துலட்சுமி கூறியதாவது:-
எனது கணவர் வீரம் மிக்கவர், அதே சமயத்தில் ஏழை-எளியவர்களிடம் பரிவுடன் பழகி வந்தார். நயவஞ்சக செயல் மூலம் அவரை கொன்று விட்டனர்.

மூலக்காட்டில் அவர் சமாதி உள்ள இடத்தில் நான் நினைவகம் கட்ட உள்ளேன். இதற்கான பணிகள் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும். அந்த இடத்தில் எனது கணவரின் முழு உருவ வெண்கல சிலை ஒன்றையும் நிறுவ போகிறேன்.

எனது கணவர் தமிழக எல்லையை காக்கும் வகையில் செயல்பட்டு வந்தார். இதை இப்போது தான் எல்லைப் பகுதி மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். தினம், தினம் என் கணவர் சமாதிக்கு வந்து மண் எடுத்துச் செல்கிறார்கள்.என் கணவர் ஆத்மாவை அவர்கள், "எல்லைச்சாமி'' ஆக பார்க்கிறார்கள்.

இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.

தர்மபுரியிலும் "மாயாவி'' வீரப்பனுக்கு சிலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மக்கள் தொலைக்காட்சியில் வீரப்பன் தொடரை இயக்கி வரும் டைரக்டர் ஜி.கவுதமன் யோசனையின் பேரில், பா.ம.க. நிர்வாகி சிவகுமார் இந்த சிலையை உருவாக்கி வருகிறார்.
இதுபற்றி சிவகுமார் கூறு கையில், "2 லட்சம் ரூபாய் செலவில் வீரப்பனுக்கு சிலை செய்து வருகிறேன். தர்மபுரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தாத்த நாயக்கன் பட்டியில் என் சொந்த நிலத்தில் இந்த சிலை நிறுவப்படும்'' என்றார்.

அடுத்த மாதம் (ஜுன்) வீரப்பன் சிலை திறப்பு விழா தர்மபுரியில் நடக்க உள்ளது. இதில் டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை தமிழ்சங்க நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனில் குடியேற ஒசாமா பின்லேடன் மகனுக்கு தடை

பின்லேடன் மகன் ஒமர், இங்கிலாந்து நாட்டு மனைவியுடன் வசிப்பதற்காக அந்த நாட்டில் குடியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.பின்லேடன் மகன் ஒமர் ஒசாமா பின். 27 வயதான அவர் எகிப்தில் வசித்தபோது, அந்த நாட்டை சுற்றிபார்க்க வந்த ஆங்கிலேய பெண் ஜேன் பெலிக்ஸ் பிரவுன் என்ற பெண்ணைச் சந்தித்தார். இந்த சந்திப்பு காதலாக மாறியது. ஜேன் தன்னை 25 வயது மூத்தவர் என்பது கூட ஒமருக்கு பெரிய குறையாக தெரியவில்லை. இருவரும் கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு எகிப்து நாட்டில் இருவரும் குடும்பம் நடத்தத் தொடங்கி உள்ளனர்.
ஒமரின் மனைவி முஸ்லிம் மதத்துக்கு மாறினார். தன் பெயரையும் செய்னா அல்சபா பின்லேடன் என்று மாற்றிக்கொண்டார். இருவரும் இங்கிலாந்து நாட்டுக்கு சென்று வாழ திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ஒமருக்கு விசா கேட்டு செய்னா மனு செய்து உள்ளார். விசா கிடைக்கும் வரை இருவரும் எகிப்து நாட்டில் தங்குவது என்று முடிவு செய்து உள்ளனர். ஒமருக்கு விசா வழங்குவதற்கு இங்கிலாந்து அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர் அந்த நாட்டுக்குள் நுழைவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் தடை விதித்து உள்ளது. அவர் இங்கிலாந்து நாட்டுக்கு குடியேறினால் அது பொதுமக்களுக்கு கவலை அளிக்கும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.ஒமர் தன் தந்தைக்கு தொடர்ந்து விசுவாசமாக இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்து உள்ளன என்றும் அதிகாரிகள் ஒமரிடம் கூறி உள்ளனர்.தனக்கு விசா வழங்கப்படாததை எதிர்த்து ஒமர் அப்பீல் செய்து இருக்கிறார். என் தந்தையை காரணம் காட்டி எனக்கு விசா வழங்காதது தவறு என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள செஷைர் நகரில் என் பிரிட்டிஷ் மனைவியுடன் வசிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று அவர் கேட்டு இருக்கிறார்.

'தசாவதாரம் படத்தை தடை செய்வோம்' - இந்து அமைப்பு போர்க்கொடி

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கமலஹாசன் நடித்த தசாவதாரம் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் அறிவித்துள்ளார்.
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் நேற்று ராமேசுவரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் நிலையில் இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணை முழுமையாக நிறைவடையும் வரையில் ராமர் பாலம் பகுதியில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் சினிமாவில் சைவ, வைணவ சமயங்களுக்கு இடையே 16-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோதலை காட்சியாக்கி இருக்கிறார்கள். அப்போது இந்து கடவுள்களின் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சியையும் அவர்கள் சேர்த்திருப்பதாக தெரிகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் இந்த படத்தை வெளியிட விடமாட்டோம். தியேட்டர் முன்பு போராட்டம் நடத்துவோம்.

பிரியங்கா-நளினி சந்திப்பு அரசியலில் சில சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

காங்கிரஸ் ஆட்சியில்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது அதேபோல `தீன்பிகார்' என்ற தீவை வங்காளதேசத்திற்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்திய பகுதிகளை பிற நாடுகளுக்கு விட்டுக் கொடுப்பது தேச பாதுகாப்புக்கு நல்லதல்ல. இந்த நிலை மாற மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

"அரைகுறை" மல்லிகா ஷெராவத் மீது போலீசில் புகார்

முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடிகை மல்லிகா ஷெராவத் குட்டை பாவாடை அணிந்து மனதை புண்ணாக்கி விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கனிராஜன், பெரியமேடு போலீசில் கொடுத்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:- நான் இந்து மக்கள் கட்சியின் தென்சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளராக இருக்கிறேன். தேச நலனுக்காகவும், கலாச்சார நெறிமுறைக்காகவும் இந்த அமைப்பு பாடுபடுகிறது. கடந்த ஏப்ரல் 25-ந் தேதி ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் தசாவதாரம் சினிமாவின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி, ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். குடும்பப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் நாகரீகமாக உடையணிந்தபடி வந்திருந்தனர்.
ஆனால் மல்லிகா ஷெராவத் என்ற இந்தி நடிகை தமிழ் கலாசாரத்தை மீறி, தமிழக மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் அரைகுறை ஆடையணிந்து, அதாவது குட்டை பாவாடை அணிந்து வந்திருந்தார். இதனால் தமிழ் பண்பாளர்கள் பலர் முகம் சுளித்தனர்.
முதல்-அமைச்சர் எதிரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து அவமரியாதை செய்தது மட்டுமல்லாமல், ஆபாசமாக அறுவருக்கத் தக்க சேஷ்டைகளையும் செய்தார். இதை டி.வி., பத்திரிகைகளில் பார்த்து மனம் புண்பட்டு விட்டது. தமிழ் கலாச்சாரத்தில் பற்று உள்ளவர்களுக்கு இது மன வேதனையையும் அவமானத்தையும் அளித்தது. கீழ்த்தரமான எண்ணங்களை உண்டு பண்ணும் வகையில் அவரது உடை அமைந்திருந்தது.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. எனவே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மல்லிகா ஷெராவத் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் வழக்கு தொடரவும் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கனிராஜனின் வக்கீல் ராம் மனோகரனிடம் கேட்ட போது, "இந்த பிரச்சினை தொடர்பாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்றும் கனிராஜனை அழைத்து இன்று (2-ந் தேதி) விசாரணை நடத்துவதாக பெரியமேடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்" என்று குறிப்பிட்டார்.

Friday, March 21, 2008

பிரியங்கா ரகசியமாக தமிழகம் வந்தாரா? இல்லையா? நீடிக்கிறது மர்மம்

பிரியங்கா காந்தி தமிழகத்துக்கு ரகசியமாக வந்து சென்றாரா? இல்லையா? என்பதில் மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது. அப்படி அவர் வந்திருந்தால் அது எப்படி மற்றவர்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பு இருக்கும்! அவர் தமிழகம் வந்தாரா? இல்லையா? ஏன் வந்தார்? எப்படி ரகசியாமாய் வர முடிந்தது? எனப் பல்வேறு ஊகங்களும் தமிழக அரசியல் வட்டாரத்தில் கொடிக் கட்டிப் பறக்கிறது. வேலூர் ஸ்ரீ நாராயணி பீடம் அமைத்துள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா தனது மகனுடன் புதன் கிழமை வந்தது உண்மைதான் என்று மத்திய புலனாய்வுத் துறை (ஐ.பி) அதி காரிகள் கூறினர். ‘புதன்கிழமை காலை தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பிறகு கார் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பிறகு வேலூர் ஸ்ரீபுரம் பொற் கோயிலுக்கு கார் மூலம் வந்தார். அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர் பொற்கோயிலில் இருந்தார். ஸ்ரீலட்சுமி நாராயணியை தரிசனம் செய்தார். பின்னர் அவர் கார் மூலம் சென்னை சென்று மாலையில் தில்லி புறப்பட்டார்' என்று மத்திய உளவுத் துறையினர் குறிப்பிட்டனர்.
ஆனால், உள்ளூர் காவல்துறை அதிகாரிகளும், கோயில் நிர்வாகமும் தொடர்ந்து மறுத்து வருகின்றன. புதன்கிழமை பிற்பகல் பிரியங்கா தனது மகன் மற்றும் இன்னொரு உறவினருடன் வருவதாக வந்த தகவலையடுத்து வேலூர் பத்திரிகையாளர்கள் ஸ்ரீபுரத்தில் குவிந்தனர். ஆனால் பாகாயம் காவல்நிலைய காவலர்கள் நான்கு பேர் மட்டுமே இருந்தனர். பத்திரிகையாளர்கள் காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு பிரியங்கா வருகிறாராமே என்று கேட்கத் தொடங்கிய பின்னரே ஒரு டிஎஸ்பி அந்த இடத்திற்கு வந்தார்.

ஆனால், முக்கிய விருந்தினர் மாளிகைகள் அனைத்தும் மிக முக்கிய விருந்தினர் தங்குவதற்கென மத்திய புலனாய்வுத் துறையினர் தங்கள் பாதுகாப்பில் எடுத்துக்கொண்டனர். மத்திய உளவுத் துறை அதிகாரிகள் அனைவரின் கைபேசி, தொலைபேசி அனைத்தும் செயலிழக்கப்பட்டிருந்தன.
வியாழக்கிழமை காலையில்தான், பிரியங்கா வந்தது உண்மை என்று உயர் அதிகாரிகள் கூறினர். ஆனாலும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் நாங்கள் யாருமே அவரைப் பார்க்கவில்லை. நீங்கள்தான் (பத்திரிகைகள்தான்) சொல்கிறீர்கள் என்று கூறினர்.

அவர்கள் சொல்லும் காரணங்கள்:
1. தமிழகத்தில் ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு, முக்கிய விருந்தினரை குறிப்பாக ராஜீவ் குடும்பத்தினரைபொது வழியில் அழைத்துச் செல்லும் முடிவை தமிழக காவல்துறை மேற் கொள்ளாது. சிறப்பு வழியில் அழைத்துச் செல்லும்போது, தரிசனம் செய்யும் வரிசையை நிறுத்தி வைப்பது வழக்கம்.
2. புதன்கிழமை அவ்வாறு தரிசனம் நிறுத்தப்தப்படவில்லை. சில மாதங்களுக்கு முன் முதல்வர் கருணாநிதி காரிலேயே வந்து சுற்றிப் பார்த்ததை நினைவு கொள்ளுங்கள். பிரியங்கா முகம் இந்தியாவில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்தக் கோயிலுக்கு தினமும் குறைந்தது 50 ஆயிரம் பேர் வருகிறார்கள். குறிப்பிட்ட அந்த நேரத்தில் 10 ஆயிரம் பேர் கோயில் வளாகத்தில் இருந்திருப்பார்கள். இவர்களில் ஒருவர்கூட காணமுடியாதபடி, உயரமான பெண்மணியாகிய பிரியங்கா யார் கண்ணிலும் படாமல் வந்து சென்றிருப்பாரா? அவர் வடஇந்திய பெண் போல முக்காடிட்டு வந்திருந்தாலும் அவரது உயரம் மற்றவர் கவனத்தைக் கவருமே.

3. ஸ்ரீபுரத்தில் யார் கண்ணிலும் படா விட்டாலும், ஸ்ரீபெரும்புதூரில் தந்தை யின் சமாதியில் அஞ்சலி செலுத்தியதைக்கூட யாரும் பார்த்திருக்க மாட்டார்களா? பொற்கோயிலில் செல்போன் தடை செய்யப்படுகிறது. ராஜீவ் நினைவு மண்டபத்தில் செல்போன் தடைஇல்லை. சிட்டிசன் ஜர்னலிசம் செய்வோர் செல்போனில் ஒரு படம் எடுத்திருக்க வாய்ப்பில்லையா?

4. அவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த வர் என்பதால் ரகசியம் காக்கப்பட்டது என்பது பொருந்தாது. அவர் ராஜீவ் காந்தியின் மகள். அரசியல் வாரிசு.மதம் கடந்தவர். இந்த வருகையை வெளிப்படுத்துவதால் இந்து மதத்தின ரின் வாக்குகள் கிடைக்குமே.

5. உள்துறை செயலகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் அவர் தமிழகத்திற்கு வர முடியாது. அப்படி வந்திருந்தாலும், அவர் புறப்பட்டுச் செல்லும்போதாகிலும், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் முதல்வரின் மகள் கனிமொழியாகிலும் விமான ஓடுதளத்திற்கே சென்று ஒரு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்திருக்க மாட்டாரா? இத்தனை காரணங்களைச் சொல் லும் அந்த காவல்துறை அதிகாரிகள் சொல்லும் விளக்கம்- இதை ரகசியம் கசியும் திசை அறியும் ஒரு ஒத்திகை நிகழ்வு என்றே கருத வேண்டியிருக்கி றது என்பதுதான்.

கோயில் அறங்காவலர்கள் குழு பிரியங்காவுடன் போட்டோ எடுத்துக் கொண்டதாகவும் பேச்சு நிலவுகிறது.

யார் சொல்வது நிஜம்? ஒருவேளை, நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஒரு பெண் பிச்சை போட்டது அவரது வாழ்க்கைப் புத்தகத்தில் தெரியவந்ததைப் போல, பிரியங்காவின் சுயசரிதையில் தெரிய வருமோ, பொற்கோயில் வருகையும்!

(மேற்கண்ட பரபரப்புச் செய்தியை ‘தினமணி’ நாளிதழ் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.)
1. ரஜினிகாந்தை முதல்வராக்க திட்டம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=776&Itemid=52
2. குசேலன் படப்பூஜை மற்றும் "தி நேம் இஸ் ரஜினிகாந்த்" புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்கள்
http://www.adhikaalai.com/index.php?option=com_banners&task=click&bid=11
3. மறைந்த எழுத்தாளர் சுஜாதா பற்றி நடிகர் கமலஹாசன்
http://www.youtube.com/watch?v=fey2zzRU_eo
4. மறைந்த எழுத்தாளர் சுஜாதா பற்றி பேரா.கு.ஞானசம்பந்தன்
http://www.dailymotion.com/video/x4o76w_gnanasambanthansujatha2_news
5. தமிழ் இனத்தை அழிக்கும் தளபதிக்கு இந்தியாவில் வரவேற்பா? புலிகள் கண்டனம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=777&Itemid=52
6. பா.ம.க: உள்ளே? வெளியே? இன்று அதிரடி முடிவு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=778&Itemid=52
7. கூட்டையே கலைக்கவேண்டாம் - பாரதிகல்யாண்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogcategory&id=99&Itemid=147