தங்ககாசு தருவதாக சங்கலி தொடர் திட்டத்தில் கைவரிசை காட்டிய மோசடி கும்பலை வடசென்னை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். அதில் நடிகை ரோகினிக்கும் பங்கிருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரோகினியிடம் போலீசார் விசாரனை நடத்த உள்ளனர். சென்னையில் காந்த படுக்கை விற்பனையில் லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி சங்கிலி தொடர் திட்ட மோசடி யில் ஈடுபட்ட கும்பலை பல வருடங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அது போல இப்பொழுது தங்க காசு சங்கிலித் திட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அது பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை பெரம்பூர் ராமச்சந்திரன் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 33). இவர் வட சென்னை இணை போலீஸ் கமிஷனர் ரவியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் இண்டர் நெட்டில் விளம்பரம் ஒன்று பார்த்தேன். குறைந்த முதலீட்டில் தங்ககாசு விற்பனையில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
நான் தொடர்பு கொண்டபோது அந்த நிறுவன பெண் ஒருவர் தங்ககாசு விற்பனை திட்டம் பற்றி கூறினார். அதன்படி ரூ.33 ஆயிரம் கட்டினேன். 6 கிராம் தங்கம் தரப்படும். நாம் 2 பேரை சேர்த்து விட வேண்டும். அதில் ஒருவரின் முதலீட்டு பணம் சேர்த்து விடும் நபருக்கு வந்து விடும். இப்படி சங்கலி தொடர்போல் சேர்த்து கொண்டே செல்லலாம். இதன் மூலம் ஏராளமான தங்க காசும், லட்சக்கணக்கில் பணமும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்.
அதை நம்பி நான் வட்டிக்கு பணம் வாங்கி ரூ.70 ஆயிரம் வரை கட்டினேன். ஆனால் எதிர்பார்த்தபடி தங்ககாசும் வரவில்லை. பணமும் வரவில்லை. சங்கிலி தொடர் திட்டம் ஒரு மோசடி வேலை என்பது தெரிந்தது.
இது பற்றி சேத்து பட்டில் உள்ள அவர்களது நிறு வனத்தை அணுகி கேட்டால் பணம் தராமல் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். என்னை போலவே ஓட்டேரி, புளியந்தோப்பு பகுதியிலும் நூற்றுக்கணக்கான நபர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறி இருந்தார்.
இணை கமிஷனர் ரவி உத்தரவின் பேரில் செம் பியம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்தனர். உதவி போலீஸ் கமிஷனர் ராஜாராம் மற்றும் போலீசார் சேத்துபட்டில் உள்ள தங்ககாசு சங்கிலி தொடர் திட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தியதில் மோசடியில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து தங்ககாசு நிறுவன பொது மேலாளரும், பெண் தொழில் அதிபருமான புஷ்பம் மேலாளர், அரிபிரபாகர், சுரேஷ், சந்திர சேகர், அகஸ்டின், விஜயா உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சங்கிலி தொடர் திட்டத்தில் நடிகை ரோகிணிக்கும் பங்கு உண்டு என புகார் கூறப் பட்டிருப்பதை தொடர்ந்து அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
புஷ்பத்திடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடி கும்பலின் தலைவன் விஜயபாஸ்கரன் என் பதும் பாங்காக்கில் இருந்து இண்டர்நெட் மூலம் போலி விளம்பரங்களை கொடுத்து கோடிக்கணக்கில் மோச டியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment