Monday, January 12, 2009

திமுகவை கட்டிக்காக்கும் பொறுப்பு அழகிரிக்கு தரப்படும் : கலைஞர் உறுதி

மு.க.அழகிரிக்கு கழகத்தை கட்டிக் காக்கும் முக்கிய பொறுப்பு தரப்படும் என்று திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து நடந்த வரவேற்பு விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.
Imageமதுரை மாவட்டம், திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான் அமோக வெற்றி பெற்றுள்ளார். இவர் முதல்-அமைச்சர் கருணாநிதியைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக மதுரையில் இருந்து நேற்று சென்னை வந்தார். இவருடன் தேர்தல் பணிக்குழு தலைவர் மு.க.அழகிரி, உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் வந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெற்றி பெற்ற வேட்பாளர் லதா அதியமான் திறந்த வேனில் மு.க.அழகிரி, அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

ஆங்காங்கே கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இவர்கள் அண்ணா அறிவாலயம் வந்ததும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றார்கள். அண்ணா அறிவாலயத்தில் இருந்த முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் லதா அதியமான் ஆசிபெற்றார். இந்த விழாவில், முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

தி.மு.க 1957-ம் ஆண்டிலேயிருந்து அறிஞர் அண்ணாவால் ஆணையிடப்பட்டு, தேர்தல்களிலே ஈடுபட்டு பெருவாரியான வாக்குகளை பெற்றும், பெறாமலும், முறையே வெற்றியை, தோல்வியை சந்தித்திருக்கிறது.

ஆனால், இதுவரையில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வரலாற்றை இன்றைக்கு நாம் உருவாக்கியிருக்கிறோம் என்றால் அது தம்பி அழகிரியின் கை வண்ணம், செயல் வண்ணம், அவருக்கு துணையாக பணியாற்றிய தம்பி ஸ்டாலினுடைய செயல் திறன், அங்கே மாவட்டக்கழக செயலாளர்களாக இருக்கின்ற தளபதி, மூர்த்தி ஆகியோருடைய உழைப்பு, இந்த பலனை அளித்துள்ளதை நாம் காண்கிறோம்-வெற்றியின் அறுவடையாக.

முதலில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், மற்ற கட்சிக்காரர்கள் குறிப்பாக அ.தி.மு.க.வினர், அதோடு இப்போது புதிதாக கூட்டு சேர்ந்திருக்கின்ற எனதருமை கம்யூனிஸ்டு கட்சிகளின் தோழர்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து இந்த தேர்தலிலே அழகிரி இந்த வட்டாரத்திலேயே இருக்கக்கூடாது என்று சிந்தித்து, அதை செயற்படுத்த தேர்தல் ஆணையத்து அதிகாரிகள் வரையிலே சென்றார்கள்.

இப்போதுதான் எனக்கு புரிகிறது. அழகிரிக்கு அப்போது கண்ணிலே ஒரு சிறு புண் ஏற்பட்டு, நானும் அவனுடைய தாயாரும் மிகவும் வலியுறுத்தி, மதுரையிலே கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ள, அழகிரியும் சம்மதித்திருந்தார். அப்போது நான் இந்தப் பணியை, தேர்தல் பணிக்குழு தலைவர் என்ற பணியை தந்த போது, நினைவுபடுத்தினார்-என்னை தேர்தல் பணிக்குழு தலைவராக நியமிக்கிறீர்களே, நீங்கள் தானே கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ளச் சொல்லியிருந்தீர்கள், எனவே நான் அந்த சிகிச்சைக்கு செல்ல வேண்டும், ஆகவே எனக்கு ஓய்வு கொடுங்கள் என்று பத்திரிகை மூலமே கேட்டார்.

இப்போது தான் எனக்கு புரிகிறது. மாற்றுக் கட்சிக்காரர்கள், எதிர்க்கட்சிக்காரர்கள்-அழகிரி அங்கே இருக்க தேவையில்லை என்று சொல்வதற்குக் காரணம்-நாங்களாகவே தோற்பதற்குத் தயாராக இருக்கிறோம், யாரும் இங்கே வந்து எங்களை தோற்கடிக்க வேலை செய்ய வேண்டாம் என்று அவர்கள் எண்ணியது தான் போலும் என்று எனக்கு இப்போது தான் புரிகிறது.

திருமங்கலம் இடைத்தேர்தலின் வரலாறு என்ன? நான் நம்முடைய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் அறிக்கை ஒன்றைப் பார்த்தேன். அவர் சொல்லியிருக்கிறார். இடைத்தேர்தல் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ இறந்துவிட்டால், அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவரோ, அந்தக் கட்சியிலே இருந்து ஒருவரை அவருக்குப் பதிலாக, அந்த இடத்தில் நியமித்துவிட்டால் அந்தக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கியதாக ஆகி விடும், தேர்தல் நடந்து வீண் தகராறுகள் இல்லாமலே முடிந்து விடும் என்று அவர் சொல்லியிருக்கிறார். நல்ல கருத்துத் தான்.

நல்ல கருத்துக்களை ஜெயலலிதா ஏற்றுக் கொள்வாரா? அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் ஏற்றுக் கொள்ளாதது மாத்திரமல்ல, அந்தக் கட்சியிலே உள்ளவரை மாற்றாக நிற்க வைப்பதற்கு பதிலாக, என் கட்சியிலே உள்ளவரை வேட்பாளராக நிறுத்துகிறேன் என்றார்.

லட்சியப் பிடிப்புள்ளவர், மொழிப் போராட்ட வீரர், இளவரசன் என்பார் - ஈழப்பிரச்சினையிலே கூட தீவிரமான நண்பர் - அவர் இறந்த இடத்தில் அ.தி.மு.க. சார்பாக ஒருவரை நிறுத்தி வைத்து அவருக்கு வாக்களிக்க வேண்டுமென்று சொன்னதற்கு என்ன காரணம்?

அகில இந்திய அளவிலே உருவாகி வருகின்ற மூன்றாவது அணியின் தலைவர்களை எல்லாம் கவர, அவர்கள் இந்த அணியிலே சேர, சி.பி.எம்., சி.பி.ஐ., ஆகிய கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு தமிழகத்திலும், வேறு பல மாநிலங்களிலும் உள்ள கட்சிகளை எல்லாம் தோற்கடித்து, தான் பிரதமராக வந்துவிட வேண்டும் என்ற எண்ணம், பீங்கான் கோப்பைகள் உடைந்து சிதறியதைப் போல - பிரதமர் பதவி, ஜெயலலிதாவைப் பொறுத்தவரையிலே இப்போது உடைந்து சிதறிவிட்டது என்பதற்கு இந்த இடைத்தேர்தலில் விளைந்திருக்கின்ற முடிவுதான் அடையாளம்.

எதற்கு மூன்றாவது அணி? இந்த மூன்றாவது அணியிலே யார் யார் இருக்கப் போகிறார்கள்? கம்யூனிஸ்டுகள் இருப்பார்கள், ஜெயலலிதா இருப்பார். ஏனென்றால் இவர்களுக்கெல்லாம் ஒரே கொள்கை. வித்தியாசமே கிடையாது. எல்லோருக்கும் ஒரே கொள்கை. சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமென்று சி.பி.எம். சொன்னால், ஆமாம் வேண்டும் என்று ஜெயலலிதா சொல்வாரா? சொல்ல மாட்டார்.

அது ராமர் பாலத்தை இடிக்கின்ற வேலை. சேது சமுத்திரத் திட்டத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லக் கூடிய ஜெயலலிதாவும்-மதவாதத்திற்கு வக்காலத்து வாங்குகின்ற ஜெயலலிதாவும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் - மத வாதத்திற்கு எதிரான ஒரு அணியை அமைப்பதாக சொன்னால், அதை யாராவது நம்புவார்களா?

மக்கள் நம்புவார்கள் என்று மனப்பால் குடித்து, இவர்கள் இந்த அணியை அமைத்தார்கள். ஆனால், அணி முழுமை பெறவில்லை.

நாம் இந்தத் தேர்தலிலே மாற்றுக் கட்சிகளை மாத்திரமா சமாளிக்க வேண்டியிருந்தது. தேர்தல் நடத்துகின்ற தேர்தல் ஆணையம் நம்மை எந்த அளவிற்கு படாதபாடு படுத்தியிருக்கிறது. எண்ணிப் பார்க்க வேண்டாமா? அதையும் கடந்து நாம் இந்தத் தேர்தலிலே வெற்றி பெற்றிருக்கிறோம். நான் தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை, மறுப்பு தெரிவிக்கவில்லை. அந்த ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் ஆணையம் மாத்திரம் இந்த அளவிற்கு கெடுபிடி செய்யாமல் இருந்தால், இந்த அளவிற்கு நம்மை மிரட்டாமல் இருந்தால் நமக்கு தொல்லை கொடுக்காமல் இருந்தால், அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்றெல்லாம் அவர்களுக்குச் சொல்லாமல் நமக்கு மாத்திரம் சொன்னார்களே, அதைப்பற்றி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும், நாம் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்க முடியாது. அவர்களுடைய மிரட்டலால், அதிகாரத்தால், கெடுபிடியால்தான் ஒரு நான்காயிரம், ஐந்தாயிரம் வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெற வேண்டிய இந்த இடைத்தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலே வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால், நம்முடைய நன்றியும் வணக்கமும் தேர்தல் ஆணையத்திற்கு சொல்ல வேண்டும்.

தம்பி அழகிரியைப் பற்றி நம்முடைய பொதுச் செயலாளர் பேராசிரியரும், மற்ற நண்பர்களும் தம்பி ஸ்டாலினும் இங்கே எடுத்துச் சொன்னார்கள். நாளைக்கு பத்திரிகையிலே போடுவார்கள் - என்ன? அவரைக் கூப்பிட்டு வரவேற்பெல்லாம் நடத்திவிட்டீர்கள், என்ன பொறுப்பு கொடுக்கப் போகிறீர்கள்? என்றெல்லாம் கேட்பார்கள். பொறுப்பாக இருப்பவருக்கு பொறுப்பு ஏன்? என்பது தான் கேள்வி. இப்போது பொறுப்பு இல்லாவிட்டால் தானே பொறுப்பு தர வேண்டும். இருந்தாலுங்கூட அப்பா எப்படி கிண்டல் அடித்து கழற்றி விடுகிறார் பார்த்தாயா என்று அழகிரி சொல்லக்கூடும், சொல்லக் கூடிய ஆள்தான்.

காத்திரு தம்பீ அழகிரி! கட்டளை வரும். நானும் பேராசிரியரும் கலந்து பேசி, அந்த கட்டளை பிறப்பிக்கப்படும். அது நீ கழகத்தைக் காப்பாற்றுகின்ற கட்டளையாக அமையும். உன்னுடைய பலம் என்ன? வலிவு என்ன? என்பதையும் அறிவேன். உன்னுடைய குணம் என்ன என்பதையும் அறிவேன். ஆகவே உன்னுடைய குணம் பார்த்து, வலிவு பார்த்து, நலம் பார்த்து, பலம் பார்த்து, நிச்சயமாக தர வேண்டிய நேரத்தில் நானும், பேராசிரியரும் கலந்து பேசி தீர்மானிப்போம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

மக்களவை தேர்தலில் பிரியங்கா? : காங்கிரஸ் ஆலோசனை

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தியை களமிறக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என அந்த மாநில காங்கிரஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல வருடங்களாகவே பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அவர் போட்டியிட்டால் தேர்தலில் கட்சிக்கு மிக பலம் வாய்ந்ததாக அமையும் என்றும் காங்கிரஸார் விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் உ.பி காங்கிரஸாரின் கோரிக்கை வலுவடைந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸாரின் கோரிக்கை குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனிடம் தில்லியில் செய்தியாளர்கள் திங்கள்கிழமை கேள்வியெழுப்பியபோது அவர் அளித்த பதில்:

மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தியை களம் இறக்குவது குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது. தேர்தலில் அவர் போட்டியிட்டால் கட்சிக்கு மிகுந்த பலன் கிடைக்கும். மேலும் ஒரு சரியான, மிக நல்ல தேர்வாக அவர் இருப்பார் என்றார். பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, மொராதாபாத் தொகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்காவின் தாயார் சோனியா காந்தி ராய் பரேலி தொகுதியிலும், பக்கத்து தொகுதியான அமேதியில் அவரது சகோதரர் ராகுல் காந்தியும் எம்.பி.யாக உள்ளனர்.

பிரியிஙா தேர்த்லில் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு நன்மை பயக்கும் என்று காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.எனவே இந்த தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது ஓராளவு உறுதியாகி வருகிறது.

Sunday, January 11, 2009

காங்கிரசின் பச்சைத்துரோகமும் தி.மு.கவின் ஒட்டுத் துரோகமும்!

காங்கிரசு கட்சியானது தமிழினத்திற்குத் தொடர் துரோகங்களைச் செய்து வருகிறது என்பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவர். கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவில் காங்கிரசினும் தமிழினத்திற்கின்னல் விளைத்தார் எவரேனும் காட்டலரிது.1956-ல் தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று மாற்றச்சொல்லி அறவழியில் உண்ணா நோன்பிருந்தார் சங்கரலிங்கனார். 76 நாள்கள் நோன்பிருந்தும் காங்கிரசின் வஞ்ச மனம் கனியவில்லை. இறுதியில் காலமானார் சங்கரலிங்கனார். இத்தனைக்கும் சங்கரலிங்கனாரும் ஒரு காங்கிரசுக்காரர்தான். காந்தியாருடன் தண்டியாத்திரை சென்றவர் அவர்.தமிழ், தமிழர் என்று வந்தால் காங்கிரசு கட்சிக்கு காங்கிரசுக் காரரும் பகையாவர் என்பதற்கு இது சான்று. அந்த சூக்குமம் புரிந்ததால்தான் எந்தத் தமிழ்நாட்டுக் காங்கிரசுக்காரரும் தமிழ் தமிழர் என்று பேசுவதில்லை என்பதை ஓர்க. வெள்ளையர் போனபின்னர் தமிழ்நாட்டிற்காக, தமிழருக்காக உயிர் ஈந்த இவரோடு காங்கிரசின் கணக்கு தொடங்கி குறி வைத்து தமிழினத்தை அது அழித்து வருகிறது.


"தமிழ், தமிழர் என்று வந்தால் காங்கிரசு கட்சிக்கு காங்கிரசுக் காரரும் பகையாவர்"

1965-ல் இந்தி மொழியை தமிழர்களிடம் வலிந்து திணித்த காங்கிரசு, அதற்கெதிராக கிளர்ந்த தமிழ் மக்களை, காவற்துறையாலும், அரணம் கொண்டும் சுட்டுப் பொசுக்கியது. அந்தக் கொடுமையான 1965 ஆம் ஆண்டின் பிப்ரவரி 8-க்கும் 12-க்கும் இடையேயான 5 நாள்களில் மட்டும் சுடப்பட்டுக் கொல்லப் பட்டவர்கள் 63 பேர். பிப்ரவரி 12 ஆம் நாள் மட்டும் கொல்லப் பட்டவர்கள் 31 பேர். பலரின் சோதனைகளும் வேதனைகளும் வெளியே வரவில்லை. திராவிடக் கட்சிகளாய் இருந்தவை சொன்ன கொல்லப் பட்டோர் எண்ணிக்கை 145. அண்ணா என்ற சிறந்த தலைவரும், அவருக்குப் பெரியவராகப் பெரியாரும் இருந்து, இராசாசி, டி.டி.கே போன்றோரெல்லாம் இந்தி திணிப்பை எதிர்த்தபோதும், காங்கிரசின் தமிழ்ப் பகைமைக்கு, இரத்த வெறிக்குப் பலியானவர்கள் நூற்றுக்கும் மேல். ஒவ்வொரு தமிழரைக் கொன்ற போதும், "இந்தி தெரியாவிட்டால் நீ இந்தியனே இல்லை" என்று சொல்லிக் கொன்று போட்டன காங்கிரசின் வடக்கு மூளைகள்! அந்தப் பகையோடு 1967-ல் இடுப்பொடிந்து போன காங்கிரசு 1987-ல் தமிழீழத்தில் திலீபன் உண்ணா நோன்பிற்குக் காரணமாய் இருந்து அவர் உயிரையும் காவு வாங்கியது. காங்கிரசை காந்தியார் கலைக்க வேண்டும் என்று சொன்னது அதன் இரத்த வெறியை அறிந்ததனால் இருக்கக் கூடும். தமிழகத்தில் சங்கரலிங்கனாரையும், தமிழீழத்தில் திலீபனையும் பலிவாங்கியது காங்கிரசு. காந்தியம் பேசும் காங்கிரசிடம் அறப்போராட்டங்களும் செல்லாது என்பதற்கு தமிழினத்தின் மேல் அது தொடுத்த இந்தத் தாக்குதல்கள் காட்டா நிற்கின்றன. தொடரும் அதன் தமிழின இரத்த வேட்கையே, 1987-ல் ஒன்னே கால் இலக்க அரணத்தை அனுப்பி, தமிழீழத்தில் 8000 பேரைக் கொன்றதும், கண்ணில் பட்ட மகளிரை சீரழித்ததும். மற்று, 2004ல் ஆட்சிக்கு வந்த காங்கிரசு கருணாநிதியுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டு, மெல்ல மெல்ல தமிழீழத்தில் நடந்த பேச்சு வார்த்தைகளைக்கெடுத்து, தமது இத்தாலி வழி தொடர்புகளாலும், இந்தியாவின் பல்வேறு துறைசார் தொடர்புகளாலும் தமிழீழ மக்களை உலக அரங்கில் தனிமைப் படுத்தி, சிங்களன் துணையோடு இன்றைக்குப் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று வருகிறது.

தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9668&lang=ta&Itemid=62

Tuesday, January 6, 2009

அதிகாலை இன்றைய செய்திகள்

ஐயப்ப பக்தர்கள் தங்குவதற்கு மசூதியில் இடமளிக்கும் முஸ்லிம்கள்
சபரிமலை ஜன 07 : திருச்சூர் அருகே உள்ள ஒரு மசூதியில் ஐயப்ப பக்தர்கள் தங்குவதற்கு முஸ்லிம் மக்கள் வசதி செய்து கொடுக்கும் சம்பவம், மத நல்லிணக்கத்திற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9497&lang=ta&Itemid=52
சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி: பழ.நெடுமாறன்
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9461&lang=ta&Itemid=52
பாகிஸ்தான்:"நாங்களும் போருக்குத்தயார்"-ஷெர்ரி ரெஹ்மான் (Sherry Rehman)
இஸ்லாமாபாத் ஜன 06 : பழி சுமத்தும் விளையாட்டை இந்தியா முதலில் நிறுத்தவேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்க எப்படி முயற்சிக்கலாம் என்பதை விட்டுவிட்டு பாகிஸ்தான் மீது எப்படியெல்லாம் பழிசுமத்தலாம் என்பதில் மட்டுமே இந்தியா கவனமாக இருக்கிறது
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9453&lang=ta&Itemid=52
சென்னையில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் விழா: பிரதமர் இன்று வருகை
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று (புதன்கிழமை) டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9460&lang=ta&Itemid=52
லாரிகள் வேலை நிறுத்தம் :உரிமங்களை அரசிடம் ஒப்படைக்க உரிமையாளர்கள் தயார்
மத்திய அரசு எச்சரிக்கையை மீறி லாரிகள் வேலை நிறுத்தம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. வெளிமாநில லாரிகள் வராததால் சர்க்கரை மூட்டைக்கு ரூ.40 உயர்ந்தது.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9459&lang=ta&Itemid=52
இலங்கை பிரச்சனை - மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: நல்லகண்ணு
இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தொடரும் என்று, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9458&lang=ta&Itemid=52
வெளிநாட்டு விமானக்கட்டணம் குறைக்கப்படமாட்டாது : ஜெட் ஏர்வேஸ்
மும்பை ஜன 07 : வெளிநாட்டு விமானக்கட்டணம் தற்போது குறைக்கப்படமாட்டாது என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கச்சா எண்ணைய் விலை அதிகரிப்பு : கடந்த வருடம் கச்சா எண்ணையின் விலை ஒரு பேரலுக்கு 140 டாலருக்கு மேல் உயர்ந்தது.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9455&lang=ta&Itemid=52
அபுதாபியில் முதன்முறையாக இலவச பேருந்து சேவை
அபுதாபி ஜன 07 : குறிப்பாக வளைகுடா நாடுகளில் போக்குவரத்துப் பிரச்சினைகளை சந்திப்பது பெரும்பாலும் புலம்பெயர்ந்து அங்கு வாழும் வெளிநாட்டவர்களே. காரணம் அங்கு நிரந்தரமாக வசிப்பவர்கள் அனைவருமே கார் போன்ற வாகனங்கள் சொந்தமாக வைத்திருப்பவர்கள்தான்.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9469&lang=ta&Itemid=52
இஸ்ரேலிய‌ தாக்குத‌ல் : ச‌வுதி அரேபியாவில் ர‌த்த‌தான‌ முகாம்க‌ள்
மனிதர்களுக்குள் பாகுபாடு, பிரிவினை போன்றவைகள் இருப்பினும் ஆபத்துக் காலங்களில் தேவையறிந்து செய்யும் சேவைகளில் இரத்ததானம் என்பது விலை மதிப்பற்ற ஒரு தானம் என்பது நாமனைவரும் அறிந்ததே!
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9466&lang=ta&Itemid=52
திருமங்கலம் பிரசாரம் இன்றுடன் முடிகிறது
திருமங்கலம் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை (ஜன.7) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9468&lang=ta&Itemid=52
பாகிஸ்தான் அரசின் கொள்கையே தீவிரவாதம்தான்: பிரதமர் குற்றச்சாட்டு
பாகிஸ்தான் அரசின் கொள்கையே தீவிரவாதம்தான் என்றும் மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், பாகிஸ்தான் அரசு அமைப்புகளின் உதவியுடன் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு ஆதாரம் கிடைத்து உள்ளதாகவும் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9463&lang=ta&Itemid=52
Honey, I Shrunk the Kids - திரைப்பட விமர்சனம்
Wayne Szalinski என்ற குறும்பு விஞ்ஞானி ஒருவர் செய்யும் விஷப்பரிட்சைகளால் குழந்தைகள் சுறுங்கி எறும்பை விட சிறியதாய் உருமாறி விடுவதே Honey, I Shrunk the Kids வெளி வந்தது 1989. பொருட்களை மிகச் சிறியதாய் உருமாறச் செய்யும் ஒரு நவீன கருவி கண்டுபிடிக்கிறார் Wayne Szalinski.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9451&lang=ta&Itemid=71
Honey I Blew Up the Kid - திரைப்பட விமர்சனம்
விஞ்ஞானி Wayne Szalinski. ஆனால் இந்த முறை மின்சாரம் மூலம் பொருட்களை மிகப்பெரியதாய் உருமாறும் கருவியை கண்டுபிடிக்கிறார். இந்த முறையும் சரியாக வேலை செய்யவில்லை.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9450&lang=ta&Itemid=71

Monday, January 5, 2009

சேதுசமுத்திரமும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம்! - நாக.இளங்கோவன்

சிங்களரை ஆதரித்தும், தமிழரை எதிர்த்தும், அழித்தொழித்தும் படு நாசம் புரியும் தமிழ்க் குலப் பகைவரான காங்கிரசுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கேட்டால், கருணாநிதியும் தமிழக மக்கள் பலரும் காங்கிரசோடு ஒப்புறவாய் இருந்து தமிழக நலன்கள் பலவற்றையும் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று சொன்னதுண்டு. அப்படி என்ன பெரிதாய்ச் செய்தாய், செய்யப் போகிறாய் என்றால் செம்மொழி என்பார்கள்; அப்புறம் 5,6 பாலங்கள் என்பார்கள்; அப்புறம் வேறு சில சில்லரை விதயங்களைச் சொல்லி, அண்ணாவின் கனவான சேது சமுத்திரத்தை நிறைவேற்ற வேண்டும் என்பார்கள்.

கன்னடத்தான் வெளிப்படையாகச் சொல்லிவிட்டான் - 'எங்கள் கட்சி தமிழர்களை ஒழிக்க முழுமனதோடு சிங்களவனுக்கு உதவுகிறது' என்று. சிங்களனின் கட்சியாகிவிட்ட காங்கிரசின் தயவும், அக்கட்சியின் எந்த உதவியும் இனி தமிழகத்திற்குத் தேவையில்லை. காங்கிரசே அந்நியன் கட்சியாக, பகைவனின் கட்சியாகப் போய்விட்ட பின்னர் அந்தக் கட்சி தமிழகத்தில் எதுவும் செய்யமுடியாமல் ஒழிந்து போக வேண்டும். அது மட்டுமல்ல, அவர்கள் தயவால் தமிழருக்குப் பயன் எதுவும் தேவையில்லை. தமிழனுக்கு இன்னும் கொஞ்சம் மானமும் சூடு சொரனையும் இருக்கவே செய்கிறது.என்னையும் உள்ளிட்ட பலர் சேது சமுத்திர திட்டத்தினை எதிர்பார்த்தவர்கள்தான். தமிழக மக்களின் ஞாயமான எதிர்பார்ப்புதான் அது என்பதில் ஐயமில்லை.ஆனால், சிங்களனின் கைப்பாவைகளும், துரோகிகளுமான சோனியா காந்தி், மன்மோகன், ப.சிதம்பரம் இவர்களால் இந்த சேது சமுத்திரத் திட்டம் தமிழர்களுக்கு நடை பெற வேண்டாம். இவர்களினால் இந்தத் திட்டம் தமிழ்நாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்ற போதிலும், இதையெல்லாம் வைத்து கருணாநிதியோ மற்ற தமிழக அரசியல்வாதிகளோ காங்கிரசிற்குப் போவார்களே ஆனால், அது தமிழ் மக்களுக்கு அவமானம். சேது சமுத்திரம் என்பது தமிழ்நாடு மேலும் வளர்ச்சி பெற நடைபெறுகின்ற ஒரு முனையல். அவ்வளவுதான். தமிழ் இனமே புல் பூண்டு இல்லாமல் காங்கிரசுக் காரர்களால் அழிக்கப் படும்போது, அந்தப் பேரழிவைச் செய்யும் காங்கிரசுக்கட்சியின் தயவால் எந்த ஒரு பயனும் தமிழகத்திற்கு வேண்டியதில்லை. சேது சமுத்திர முனையல் இல்லாவிடில் தமிழகத்தில் எதுவும் குடி முழுகிப் போகப் போவதில்லை. ஒரு இனம் உயிர் வாதையில் இருக்கும்போது உயிர் காப்பது முக்கியமா? அல்லது அந்த உயிர்களை வாங்கும் காங்கிரசுக்கட்சியை நக்கிக் கொண்டு இருப்பது முக்கியமா?தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் சேது சமுத்திர திட்டம் என்பது ஒரு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் சேது சமுத்திர திட்டம் என்பது ஒரு சிறு மயிர்! அந்த மயிரைப் பிடுங்க காங்கிரசுக்காரன் தேவையில்லை!தமிழ் மக்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ச் சிந்தனைக் களங்கள் எவ்வளவு விரைவாக காங்கிரசைப் புறக்கணிக்கின்றனவோ, எவ்வளவு விரைவாக காங்கிரசை ஆதரிப்பவரைப் புறக்கணிக்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவாவது தமிழ் மக்களில் சிலரேனும் உயிர் பிழைப்பார்கள்.தமிழ் நாட்டில் தமிழன் உயிருக்குப் பாதுகாப்பு தரும் கட்சிதான் நிலைக்க வேண்டும். அழிப்பவர்களின் கட்சி மக்கள் மனதில் இருந்து அழிந்து பட வேண்டும். தமிழ் மக்களைச் சாகடிக்கும் காங்கிரசுக்காரர் ஒவ்வொருவரும் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் அரசியல் முகவரி இல்லாமல் போகவேண்டும். 1972-ல் இடுப்பொடிந்து போன காங்கிரசே! உன் வேரிழந்து, விழுதிழந்து சவலையாய் நாயாய்திரிவாய் தமிழ்நாட்டில்; காத்திரு!
- நாக.இளங்கோவன்

Wednesday, December 24, 2008

இன்றைய அதிகாலை

இலங்கை : கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் வான் படையினர் தாக்குதல்

Tuya de hun shi (TUYA'S MARRIAGE) - சீனத் திரைப்பட

எந்திரன் படப்பிடிப்புக்கு மோட்டார் சைக்கிளில் மீஞ்சூர் சென்ற ரஜினி

மு.க.ஸ்டாலினுக்கு புதிய பதவி?

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு:ம‌ன்மோக‌ன் சிங் குற்ற‌ச்சாட்டு

புதுவை போலீசார் போராட்டம்:மத்திய ரிசர்வ் போலீசார் 300பேர்

வீட்டுக்கு வந்த வால் நட்சத்திரம்" - புதுவை

கிறிஸ்தும‌ஸ் ப‌ரிசு -

எந்திரன் படப்பிடிப்புக்கு மோட்டார் சைக்கிளில் மீஞ்சூர் சென்ற ராஜினி

மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதமி விருத்து

"வீட்டுக்கு வந்த வால் நட்சத்திரம்" - புதுவை எழில்

ந‌ட்ச‌த்திர‌மாய் வெளிச்சமிடும் அடையாளங்களாய் திகழவேண்டும்!

கிறிஸ்ம‌ஸ் ம‌ர‌ம்....! - ஆல்ப‌ர்ட், விஸ்கான்சின், அமேரிக்கா

பாகிஸ்தான் மீது எவ்வித நடவடிக்கைக்கும் இந்தியா தயார்-பிரணாப்
எச்சரிக்கை

மண் மணம் மாறாத "கோவா'

எருமையில் கமல் நிர்வாணமாக சாவாரி.

ஜனவரி 10 முதல் 'சங்கமம்': கனிமொழி
அறிவிப்பு

இலங்கை : கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் வான் படையினர்
தாக்குதல்

Tuya de hun shi (TUYA'S MARRIAGE) - சீனத் திரைப்பட
விமர்சனம்

"வீட்டுக்கு வந்த வால் நட்சத்திரம்" - புதுவை எழில்

மகரஜோதி - 1 : சிங்கை கிருஷ்ணன்

அருணாச்சல மகிமை - 2 : சிங்கை கிருஷ்ணன்
இந்தியாவின் 'கெடு'நாளை முடிவு: பாகிஸ்தானுடன் போர் மூளுமா?
தலிபான் தீவிரவாதிகளால் தமிழக சமையல்காரர் கடத்தல்

ராஜீவ் காந்தி கொலை - அவிழத் தொடங்கியுள்ள மர்மங்கள்

ரங்கநாத்..... முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில்,ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.
91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் சோனியாகாந்தியின் கருணையால் நளினியின் தூக்கு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. `ராஜீவ்காந்தி படுகொலைக்கு உண்மையான காரணம் என்ன?' என்று அறிவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில்தான் ஒற்றைக்கண் சிவராசன், சுபா உள்பட சில குற்றவாளிகள் கடைசியாக ரங்கநாத்தின் வீட்டில் பதுங்கி இருந்ததால், அவருக்கு இந்தப் படுகொலையின் நிஜப்பின்னணி தெரிய வாய்ப்புள்ளது என்று சோனியாகாந்தி உறுதியாக நம்பியிருக்கிறார். ஏனென்றால், படுகொலைச் சம்பவம் நடந்தபிறகு, பெங்களூருவில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த 21 நாட்களும் அவர்களைச் சுற்றி நடந்த பல்வேறு விஷயங்கள் சோனியாவின் கவனத்திற்குப் போயிருக்கின்றன. இதையடுத்து, ரங்கநாத்தைச் சந்திக்க சோனியா விருப்பப்பட்டிருக்கிறார். அதன்பேரில், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான தமிழ் உணர்வாளர் (முன்பு காங்கிரஸில் பொறுப்பு வகித்தவர்) ஒருவர் மூலம், தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி. ஒருவர் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் எனவும் தகவல்கள் உலா வருகின்றன. டெல்லியில் நடந்த இந்த 'ரகசிய சந்திப்பில்' படுகொலையின் முக்கியமான விஷயங்களை சோனியாவிடம், ரங்கநாத் கூறியதாகவும் சொல்கின்றனர். தற்போது சிறையில் உள்ள 'ராஜீவ் கொலையாளிகள் வெறும் கருவிகள்தான்' என்ற மனநிலைக்கு சோனியா மாறியதற்கும் ரங்கநாத்தின் சந்திப்பைத்தான் முக்கியமானதாகக் கூறுகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். இந்தச் சந்திப்பு குறித்து இதுவரை சோனியாவோ, ரங்கநாத்தோ மீடியாக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. சோனியாவும், 'எனது கணவர் கொலையில் தொடர்புடையதாகச் சொல்லப்படுபவர்களை தூக்கில் போட எமக்கோ, எமது குழந்தைகளுக்கோ சிறிதும் விருப்பமில்லை' என தனது நிலையைத் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க :