Tuesday, February 3, 2009

ராமலிங்க ராஜுவை விசாரணை செய்ய செபிக்கு அனுமதி;உச்ச நீதிமன்றம்

சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜுவை விசாரணை செய்ய செபி அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


Imageசத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனத்தில் கோடிக்கணக்கில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அதன் நிறுவனர் ராமலிங்க ராஜு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சத்யம் கம்யூட்டர்ஸ் மோசடி தொடர்பாக ராமலிங்கராஜூ, அவரது சகோதரர் ராமராஜூ ஆகியோரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு பங்கு வர்த்தக கட்டுப்பாட்டு அமைப்பான `செபி' ஐதராபாத் கோர்ட்டிலும்,ஆந்திரப் பிரதேச ஐகோர்ட்டிலும் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதை எதிர்த்து, செபி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், ராஜுவை விசாரிக்க செபி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, செபி விசாரணை அதிகாரி சுனில் குமார், 4-ந் தேதி முதல் 3 நாட்கள் விசாரணை நடத்த அனுமதிக்கும்படி சஞ்சலக்குடா சிறை சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டது. இதையேடுத்து ராமலிங்கராஜூ மற்றும் ராமராஜூ ஆகியோரிடம் `செபி' அதிகாரி சுனில் குமார் நாளை விசாரணை நடத்துகிறார்.

No comments: