Tuesday, February 3, 2009

இவரெங்கே? சிங்களக் கோவணமாகிப் போனாரோ? - நாக.இளங்கோவன்

மாலன் போன்றவர்களே முத்துக்குமார் தீக்குளிப்பிற்குக் காரணம்! இந்திய, தமிழகச் செய்தி மிடையத்தின் (மிடையம்=media) பெரும் பகுதி ஏறத்தாழ வெளிநாட்டு முதலாளிகளிடம் முழுமையாக அடங்கிவிட்டன என்றே புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதேபோல, இந்திய, தமிழகச் செய்தி மிடையகாரர்களும் தமது வணிகத்தையும் வருவாயையும் பெருக்க வெளிநாட்டு உள்நாட்டு சக்திகளோடு உறவாடுகிறார்கள் என்பதும் வெளிப்படையாகப் பேசப்படுகின்ற செய்தி.

Image

காட்டாக, இந்துராமுக்கு சிங்களன் சிங்கள இரத்தினம் என்ற பட்டம் கொடுத்தது. பட்டம் மட்டும்தானா கொடுத்திருப்பான்!? அதேபோல சில ஏடுகளை/இதழ்களை படிப்பவர்களைக் கணக்கிட்டுப் பார்த்தால் இலாபமே இராது. இந்து ஏடே நட்டத்தில்தான் ஓடிக்கொண்டிருந்தது. அப்படி இலாபம் இல்லாத ஏடுகள் எப்படி நெடுநாளாக ஓடுகின்றன என்று அரசாங்கம் ஆராய்ந்தால் பல நல்ல செய்திகள் வெளிவரும். இப்படிப்பட்ட இதழ்களில் முதலாளிகளின் காலரிப்பு கையரிப்புக்கு சொறிந்து விட்டுக் கொண்டும், கூடவே தமது ஆசைகளை தீர்த்துக் கொள்ளவும் அலைகின்றவர்களை இணைய உலகிலும் நிறைய காணலாம்.

இந்துராமுக்கு சிங்கள இரத்தினம் என்ற பட்டம் கிடைக்கையில் தமக்கு ஒரு சிங்களத் தகரம், சிங்கள ஓடு, சிங்களக் கோவணம் என்று ஏதாவது ஒரு பட்டம் கிடைக்காதா என்று அலைகின்ற கூட்டம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்துராம் வழிகாட்டி விட, இதழாளர்களில் சிலர் சிங்களனின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கிக் கிடக்கிறார்கள். அது கிடைக்காதென்றாலும் உள்நாட்டு அரசியல்வாதிகளும் இன்றைக்கு மிடைய முதலாளிகள் அல்லவா? அவர்களின் எண்ண ஓட்டத்திற்கு தம் இதழியல் தொழிலைச்செய்பவர்களும் நிறைய.

சிங்களன் என்றில்லை - எள்முனையளவு உள்ள மாலத்தீவுக்கு வேண்டுமானாலும் ஆதரவாக அரசியல் செய்ய ஆள்கள் உண்டு. வேசிகளை வைத்துத் தொழில் செய்பவனுக்கும் அவனின் வேசிகளின் அதிசயங்கள் பற்றியும் மக்களுக்கு சுவை குன்றாமல் எழுதியதுதான் இணையத்தில் எழுதும் சில இதழாளர்களின் தலைமுறை இதழியலுக்கும் குமுகத்திற்கும் செய்த பெரிய பங்களிப்பு. அரசியல்வாதிகள் செய்யும் தவறையெல்லாம் ஞாயப்படுத்தி ஞாயப்படுத்தி இவர்கள் பிழைப்பை ஓட்டி - ஒரு அருமையான சனநாயகக் குமுகத்தை தீவிரவாதக் குமுகமாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படி சிங்களர்கள் தமிழர்களின் உயிரை அழிக்கிறார்களோ, அதே போல உணர்வும், அறிவும் இல்லாத தமிழ்நாட்டு இதழாளர்கள் சிலர் தமிழ்நாட்டினை அழிக்கிறார்கள். இப்படி ஒரு தலைமுறையை மூளை மழுங்கடித்து, இன்றைக்கு ஒரு தமிழனுக்குக் காசாவில் என்ன சரவல், ஈராக்கில் என்ன சரவல் என்று தெளிவாகத் தெரிந்திருந்தும், ஈழத்தில் என்ன சரவல் என்று இன்றைக்கெல்லாம் அங்கங்கே வகுப்பு எடுக்க வேண்டிய நிலைக்கு ஆக்கி விட்டார்கள்.

அமெரிக்காவில் ஒபாமா வெல்வார் என்று கணிக்க முடிந்த தமிழ் மக்களால் தமிழ்நாட்டில் கருணாநிதி எப்படியெல்லாம் ஏமாற்றுவார் என்று கணிக்க முடியவில்லை. காங்கிரசு கட்சி எவ்வளவு ஆழமான சதி வலையைப் பின்னியது என்று தமிழர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. உள்ளே நோய் கொண்டு உடையாய் பகட்டினைப் பூசிய வேசிகளின் வலையில் சிக்கிய நல்லோரைப் போல தமிழ்க் குமுகத்தை சிங்கள இரத்தினங்களும் சிங்களக் கோவணங்களும் ஆக்கிவிட்டு, முத்துக்குமாரின் தீக்குளிப்பிற்குக் காரணம் கண்டு பிடித்துக் கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள் மானம் கெட்டவர்கள்.


Image

அடக்குமுறையை ஊக்குவித்து, பொய்களையும் பித்தலாட்டங்களையும் செய்து மக்களை ஏமாற்றி ஏமாற்றி இன்று ஒரு பெரிய தமிழ்க் குமுகத்தில் ஈழச்சரவலை அறிந்து கொள்வது கூட சட்டப்படி குற்றம் என ஆக்கியவர்களில் பெரும்பங்கு வகிப்பவர்கள் இந்த சிங்களக்கோவணங்கள்தான். அப்படியான அடக்குமுறைக் குமுகத்தில் தனது குரலால் ஒன்றும் ஆகாது என்ற கையாலாகாத நிலையில் உயிர் விட்டவர்கள் முத்துக்குமார், இரவி போன்றவர்கள். அந்த அடக்குமுறையையும் அறியாமையையும் வளர்த்தவைகள் சிங்களக் கோவணமாகிப் போன இதழாளர்கள். தமிழ்க் குமுகத்தை பொய்களில் சிக்க வைத்து, அறியாமையில் சிக்க வைத்த பாவத்தைச் செய்தவர்கள் இந்தக் கோவணங்கள்.

சிங்களனே சிங்களப் பத்திரிக்கையாளரைக் கொல்கிறான். என்றைக்காவது மாலன் தனது சன்னல் வழியே அதனைப் பார்த்துக் கண்டித்தது உண்டா?

சிங்கள பக்சர்கள் சி.என்.என், பிபிசி போன்ற மிடையங்களை மிரட்டுகிறார்கள். பத்திரிக்கையாளரான மாலன் அதனைக் கண்டித்ததுண்டா?

தமிழர்களை அழிக்கின்ற சிங்களன் தமிழர் பகுதிகளுக்கு எந்த மிடையக்காரனும் போகக் கூடாது என்று தடை போட்டுவிட்டான். பத்திரிக்கையாளரான மாலன் அதனை ஏற்றுக் கொள்கிறாரா?

இப்படி சிங்களத்தான் செய்யும் அடாவடிக்கெல்லாம் தோது பாடிக் கொண்டு, தமிழினப் போராட்டததை, இனவாதையை கொச்சைப் படுத்தும் இவரை என்ன சொல்வது?

ஈழத்தமிழர் சரவலைத் தமிழக அரசியல்வாதிகள் உணர்ச்சியுடன் பேசுவதும் பிழை; அதேபோல ஊடகங்கள் ஈழத்தமிழர் பற்றியும் எழுதுவதும் தவறு என்கிறார் மாலன்.

From - http://jannal.blogspot.com/2009/01/blog-post_30.html

//அவரைத் தற்கொலைக்கு உந்தியதில், இலங்கைப் பிரச்சினை நெருப்பில் குளிர்காய முயன்ற தமிழக ஊடகங்களுக்கும் பங்குண்டு//

//இப்போது பிரபாகரன் பற்றிய தொடர், இலங்கை அரசியல் வரலாறு, குட்டிமணி ஜகன் பற்றிய பழைய தொடரின் மீள்பிரசுரம் எனக் கடை விரித்திருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊடகங்களின் அக்கறை எதன் மீது எனப்புரியும்//

ஈழம் பற்றிய இந்தத் தொடர்களில் எல்லாம் சரியான செய்திகளைச் சொல்கிறார்களா என்பது வேறு விதயம். ஆனால் மாலனுக்கு அதுவே வலிக்கிறது.

இலங்கை வரலாறையும், குட்டிமணி வரலாறையும் தமிழ் மக்கள் தெரிந்து கொள்கிறார்களே என்று ஆதங்கப்படுகிறார். தமிழக மக்கள் அறியாமையில் இருந்து வெளி வந்து விடுவார்களோ என்று கவலைப்படுகிறார்.

இவர் ஒரு இதழாளரா?

சன்னல் பதிவில் ..... முத்துக்குமார் தீக்குளிப்பைப் பற்றிய மாலனின் விமர்சனம் ஒரு அவல அவமானச் சின்னம். சிங்களக் கோவணமாகத் துடிக்கும் மாலன் திருந்தவேண்டும். சாகும் தமிழினத்தின் பாவமெல்லாம் அழுகுரல் ஓலமெல்லாம் சிங்களனையும் அவனது இரத்தினங்களையும் கோவணங்களையுமே சேரும்!

No comments: