Tuesday, February 3, 2009

முத்துக்குமரன் தீக்குளிப்பு திட்டமிட்ட சம்பவம் : சுப்ரமணிய சாமி

முத்துக்குமரன் தீக்குளிப்பு திட்டமிட்ட சம்பவம் என திடீரென்று சுனாமி வருவதுபோல் சில அதிரடிச் சந்தேகங்களோடு பிரபல சுப்ரமணிய சுவாமி தற்போது தமிழகத்தில் அறிக்கைகளை விட்டுள்ளார்.

முத்துக்குமரனின் தீக்குளிப்புச் சம்பவம் திட்டமிடப்பட்டு, அவரைத் தீக்குளிக்கச் செய்து, யாரோ காப்பாற்றிவிடுவதாகச் சொல்லி, இறுதியில் காப்பாற்றாமல் விட்டுவிட்டதாகவும், அவருடைய இறுதிக்கடிதங்கள் அவரால் எழுதப்பட்டதல்ல, இலங்கைத் தமிழர்கள் யாரோ எழுதியுள்ளனர் என்றும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார். மேலும், விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி உறுப்பினர் பா.நடேசன் சாட்டிலைட் போன் மூலமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் செல் போனில் பேசியுள்ளார் எனவும், இதனை வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் கண்டுபிடித்துக் கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நவீன் சாவ்லா மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் ஊழல் செய்துள்ளார், அவர் பதவி விலகவேண்டும் என்றும், பிப்ரவரி 4-ம் தேதி நடைபெறும் 'பந்த்' (பந்த் என்று இதுவரை யாரும் சொல்லவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) சட்டத்துக்குப் புறம்பான செயல், எனவே 'பந்த்'-தில் ஈடுபடுபவர்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என்றும் பல்வேறு 'பஞ்ச்' டயலாக்-குகளுடனும், அதிரடி அறிக்கைகளையும் விடுத்துள்ளார். சுப்ரமணியாசாமி யார் என்பதை தமிழக மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய அவசியம் திடீரென ஊடகங்களுக்கு ஏன் வந்ததென்று சற்று குழப்பமாகவே உள்ளது.

1 comment:

ஸ்வாதி said...

அதானே பார்த்தேன்...எங்கே ஆளைக் காணோமே என்று.. சுப்பிரமணியசாமி வந்திட்டார்... வழமை போல... :) தன் இருப்பை காட்டிக் கொள்ள அடிக்கடி இப்படி ஒரு அறிக்கை விடத் தானே வேண்டும்?