Wednesday, May 21, 2008
Monday, May 12, 2008
சாருநிவேதிதா-வுக்கு எச்சரிக்கை : அமிர்தம் சூர்யா
'ஜெயமோகனின் சுயமோகம்' என்ற தலைப்பில் சாருனிவேதிதா எழுதியிருப்பதை படித்தபின் நமக்கு புலப்படுவது......
ஜெயமோகனின் சுயமோகத்தை சொல்லிக்கொண்டெ இடையிடையே தனது புகழை, பயணத்தை, தனது பெருமையான கட்-அவுட்டுகளை நடுவதற்காக நட்டுக்கொண்டே தனது மோகத்தை பரைசாற்றி கொள்கிறார் சாரு. உண்மையில் ஜெயமோகன் இருக்கையில், கட்டிப்பிடித்து முத்தமிட்டுக்கொள்வதும், காலச்சுவடு போனதும் கிண்டலடித்து புத்தகம் போடுவதும் தனது தற்புகழ்ச்சிக்காக விலைபோவதும் கேவலமான ஒன்று.
மனுஷ்யபுத்திரனுக்கு ஜெயமோகன் தேவைப்பட்டார், ஜெயமோகனுக்கு உயிர்ம்மை தேவைப்பட்டது. அதனால் காலச்சுவடு எதிரியானது. உயிர்மையின் கருத்து ஒவ்வாமை மற்றும் அரசியல் லாப சமரசம் இவற்றால் ஜெயமோகன் காலச்சுவடு போனார். ஜெயமோகனுக்கு காலச்சுவடு தேவைபட்டது. முன்பு காலச்சுவட்டில் இருந்த சாரு இப்போது உயிர்ம்மை சார்பில் நின்று தாக்குகிறார்.
இது கருத்தியல் மற்றும் படைப்பை முன்வைத்து நிகழும் யுத்தமல்ல. உயிர்ம்மை-காலச்சுவடு- க்கு இடையேயான நிறுவனப்போர். இது முழுக்க முழுக்க வியாபாரம். அதன் பொருட்டான அரசியல் மற்றும் அவர்களின் இருப்பையும் தக்கவைத்துக்கொள்ள, சம்மந்தபட்ட வியாபார போட்டி. அதனூடாக சாரு தன்னை கட் அவுட்டாக நிறுத்திக்கொள்ள இது ஒரு காழ்ப்பு-பிரதி என்பதாக கவிகள், விமர்சகர்கள் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் கருத்தாக ஒரு கோட்டத்தில் முன்வைக்கபட்டுள்ளது.
பக்கம் 53-ல் மனுஷ்யபுத்திரனை அவருடைய பிறவி குறையை கேலி செய்து ஜெயமோகன் எழுதியதாக சாரு எழுதியுள்ளார். இது அபத்தமானது. சொல்புதிது இதழில் வெறொருவர் எழுதியது. இதழில் பிரசுரமானதாலேயே அது ஜெயமோகன் எழுதியாகாது. பக்கம் 52-ல் தமிழ் பண்பாட்டை கீழ்த்தரமாக ஜெயமோகன் பேசிவிடுகிறார் என்கிறார் சாரு. மேலும் அவர் எழுத்தை படித்தால் அசிங்கத்தை மிதித்ததுபோல் இருக்கிறது என்கிறார்.
சபாஷ்.....
Tuesday, May 6, 2008
ஓர் ஈழக்குழந்தையின் இதயம் வெடிக்கும் கடிதம்! - அண்ணன் கை.அறிவழகன்
குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா? எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்......
அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்.....
Monday, May 5, 2008
"ஜெயகாந்தன்... அவன் அப்படித்தான்" - பாரதிராஜா
Sunday, May 4, 2008
Saturday, May 3, 2008
இந்தியர்களைவிட 5 மடங்கு அதிகம் சாப்பிடுபவர்கள் அமெரிக்கர்கள்
உலக அளவில் உணவுப் பொருட்களின் விலைவாசி கூடியதற்கு இந்தியர்களும் சீனர்களும் அதிகமாய் சாப்பிடுவதால்தான் என்று அமெரிக்க அதிபர் புஷ் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியத் தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே புஷ்ஷின் கருத்து உண்மைதானா? என்ற பொருளாதார புள்ளி விவர ஆய்வில் பல்வேறு நிஜங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அரிசி, கோதுமை மற்றும் உணவு தானியங்கள் போன்றவற்றை ஒரு தனி மனிதன் உட்கொள்ளும் அளவை எடுத்துக்கொண்டால் இந்தியர்களைவிட அமெரிக்கர்கள் 5 மடங்கு அதிகம் என்று அமெரிக்க விவசாயத் துறையின் 2007- ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. வருடம் ஒன்றுக்கு சராசரியாக இந்தியர் ஒருவர் 178 கிலோ கிராம் தானியத்தைத்தான் சாப்பிடுகிறார். ஆனால் அமெரிக்கர்கள் வருடத்திற்கு 1,046 கிலோ கிராம் தானியத்தை தின்று தீர்க்கின்றனர்.
சீனர்களைவிட மூன்று மடங்கும் ஐரோபியர்களைவிட இரண்டுமடங்கும் அதிகமாக அமெரிக்கர்கள் உணவு உட்கொள்கின்றனர்.
உண்மையில் அமெரிக்கர்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. அதனால்தான் அவர்களின் சாப்பாட்டு அளவும் அதிகரித்துள்ளது. 2003-ல் அமெரிக்கர் ஒருவரின் தனி நபர் உணவு தானியக் கொள்முதல் 946 கிலோ கிராமாக இருந்தது. ஆனால் 2007 -ஆம் அண்டில் இந்த அளவு 1046 கிலோவாக உயர்ந்துள்ளது. இதை இந்தியர்களுடன் ஒப்பிடும்போது 5 மடங்கு அதிகமாக அமெரிக்கர்கள் உட்கொள்கின்றனர். இந்த ஒப்பீடு வெறும் தானியங்களுக்கு மட்டுமல்ல. எல்லாவிதமான உணவுப் பொருட்களையும் வாங்குவதில் அமெரிக்கர்கள்தான் முன்னணியில் உள்ளனர்.இந்தியாவின் தனிநபர் ஒருவர் வருடத்துக்கு 38 கி.கி.பாலை மட்டுமே குடிக்கின்றனர். சீனர்கள் 17 கி.கி. பாலை மட்டுமே அருந்துகின்றனர். ஆனால் அமெரிக்கர்களோ 78 கி.கி.பாலை குடித்து தீர்க்கின்றனர். அதேபோல் காய்கறியின் அளவு வருடத்துக்கு 11 கி.கி. யை மட்டும் இந்தியர்கள் சாப்பிடுகின்றனர்.
ஆனால் அமெரிக்கர்களோ 41 கி.கி. யை சாப்பிடுகின்றனர். இந்தியாவில் ஏராளமானோர் காய்கறிகளைத்தான் விரும்பிச் சாப்பிடுகின்றனர். அதில் அவர்களுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடுகிறது. ஆனால் அமெரிக்கர்களோ அசைவ உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.ஆண்டு ஒன்றுக்கு ஓர் அமெரிக்கர் 42.6 கி.கி மாட்டிறைச்சி சாப்பிடுகிறார். ஆனால் இந்தியாவில் இதன் அளவு 1.6.கி.கி.அதே போல் கோழியை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவின் தனி நபர் ஒருவர் 45.4 கி.கி. போட்டுத் தாக்குகிறார். ஆனால் இந்தியர் ஒருவர் 1.9.கி.கி மட்டுமே சாப்பிடுகிறார். இப்படி அதிர்ச்சி அளிக்கும் உணவு தானிய ஒப்பீடுகள் கிழக்கத்திய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்குமிடையே நிலவி வருகிறது. இதன் உண்மை புரியாமல் உணவு தானிய விலைவாசி உயர்வுக்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் புஷ் கதைவிடுகிறார். மேற்கண்ட புள்ளி விவரங்கள் எல்லாம் அமெரிக்க விவசாயத் துறை வெளியிட்டதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ்ஷூக்கு பொருளாதார அறிவு கிடையாது : இந்தியத் தலைவர்கள் கண்டனம்
அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இதே நிலைமை நீடிக்கிறது. விலைவாசியை கட்டுப்படுத்த தவறி விட்டதாக மத்திய அரசை கண்டித்து பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே இந்தியா மற்றும் சீனாவில் அதிக அளவில் உணவு பொருட்கள் பயன் படுத்துவதால் விலை அதிகரித்து விட்டதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி கண்டலீசா ரைஸ் தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில், வாஷிங்டன் அருகே ஒரு பொருளாதார மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் புஷ், `உலகம் முழுவதும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள் அதிக அளவில் உணவு பொருட்களை சாப்பிடுவதால் அவற்றின் தேவை அதிகரித்து விலைவாசி உயர்ந்து விட்டது' என்றார்.
இந்தியர்கள் நிறைய சாப்பிடுவதால்தான் விலைவாசி உயர்வு : ஜார்ஜ் புஷ்
இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நல்லதுதான் ஆனால், அதனால் அதிகரித்துள்ள உணவு தானியங்களின் தேவையே உணவுப் பொருட்களின் விலை உயர்விற்குக் காரணம் என்றும் அவர், கூறியுள்ளார். இதுகுறித்து மிசெளரியில் நடந்த பொருளாதார மாநாடு ஒன்றில் பேசிய ஜார்ஜ் புஷ், "வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியினால் உலகளவில் தேவை அதிகரித்துள்ளது. இது உங்களுக்கும் (அமெரிக்க தொழிலதிபர்கள்) நல்லது. ஏனெனில் இந்த நாடுகளில் உங்களின் சரக்குகளை விற்கிறீர்கள். வளர்ச்சி இல்லாத இடத்தில் உங்கள் சரக்குகளை விற்பது மிகவும் கடினம்.
வேறுவிதமாகச் சொல்ல வேண்டும் என்றால், உலகத்தில் எவ்வளவு வளர்ச்சி உள்ளதோ அவ்வளவு வாய்ப்புகளும் உள்ளன. அதற்கேற்றவாறு தேவைகளும் அதிகரிக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு ஒரு சுவாரசியமான விசயத்தைப் பார்க்கலாம். இந்தியாவில் 35 கோடி மக்கள் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது அமெரிக்காவை விட அதிகமாகும். அதாவது இந்தியாவின் நடுத்தர வகுப்பு மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் இரண்டு மடங்காகும். இதனால் வளர்ச்சி அதிமாகும்போது தேவை அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நடுத்தர வகுப்பினர் நல்ல சத்தான உணவுகளை வாங்கும்போது, பற்றாக்குறை ஏற்பட்டு உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது" என்றார்.
உணவுப் பொருட்களின் விலை உயர்வில் பருவநிலை மாற்றத்தின் பங்கை பட்டியலிட்ட அவர்,எரிசக்தித் தேவைகளுக்கு தானியங்களைப் பயன்படுத்துவதுதான் முக்கியக் காரணம் என்பதை மறுத்தார். "உணவுப் பொருட்களின் விலை உயர்வில் எத்தனாலின் பங்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது மட்டுமே முக்கியக் காரணம் அல்ல. எரிபொருட்களின் விலை உயர்வும் உணவுப் பொருட்களின் விலை உயர்விற்கு முக்கியக் காரணமாகும். நீங்கள் ஒரு உழவராக இருந்தால், நீங்கள் எரிபொருளுக்குச் செலவழிக்கும் தொகையை நீங்கள் விற்கும் பொருட்களின் மீது வைப்பீர்கள். இல்லை என்றால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். நீங்கள் டீசலுக்கு அதிகமாகச் செலவிடும்போதும், உரங்களுக்கு அதிகமாகச் செலவிடும்போதும் நீங்கள் விற்கும் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. அதாவது உழவர்களின் அடிப்படைச் செலவுகள் அதிகரிக்கையில் உணவுப் பொருட்களின் விலையும் உயர்கிறது" என்றார் புஷ். "அமெரிக்காவில் உணவுப் பற்றாக்குறை இல்லை. ஆனால் நமக்கும் விலை உயர்வுப் பிரச்சனை உள்ளது. நாம் அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளது. உலகளவில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. பசியில் வாடும் மக்களுக்கு உணவு கிடைக்க நாம் உதவ வேண்டும். அமெரிக்கா எப்போதும் பசியைத் தீர்க்கும் பணியில் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டுள்ளது" என்றும் புஷ் கூறினார்.
தங்கக்காசு மோசடி : நடிகை ரோகினிக்கு தொடர்பு?
அது பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை பெரம்பூர் ராமச்சந்திரன் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 33). இவர் வட சென்னை இணை போலீஸ் கமிஷனர் ரவியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் இண்டர் நெட்டில் விளம்பரம் ஒன்று பார்த்தேன். குறைந்த முதலீட்டில் தங்ககாசு விற்பனையில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
நான் தொடர்பு கொண்டபோது அந்த நிறுவன பெண் ஒருவர் தங்ககாசு விற்பனை திட்டம் பற்றி கூறினார். அதன்படி ரூ.33 ஆயிரம் கட்டினேன். 6 கிராம் தங்கம் தரப்படும். நாம் 2 பேரை சேர்த்து விட வேண்டும். அதில் ஒருவரின் முதலீட்டு பணம் சேர்த்து விடும் நபருக்கு வந்து விடும். இப்படி சங்கலி தொடர்போல் சேர்த்து கொண்டே செல்லலாம். இதன் மூலம் ஏராளமான தங்க காசும், லட்சக்கணக்கில் பணமும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்.
அதை நம்பி நான் வட்டிக்கு பணம் வாங்கி ரூ.70 ஆயிரம் வரை கட்டினேன். ஆனால் எதிர்பார்த்தபடி தங்ககாசும் வரவில்லை. பணமும் வரவில்லை. சங்கிலி தொடர் திட்டம் ஒரு மோசடி வேலை என்பது தெரிந்தது.
இது பற்றி சேத்து பட்டில் உள்ள அவர்களது நிறு வனத்தை அணுகி கேட்டால் பணம் தராமல் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். என்னை போலவே ஓட்டேரி, புளியந்தோப்பு பகுதியிலும் நூற்றுக்கணக்கான நபர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறி இருந்தார்.
இணை கமிஷனர் ரவி உத்தரவின் பேரில் செம் பியம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்தனர். உதவி போலீஸ் கமிஷனர் ராஜாராம் மற்றும் போலீசார் சேத்துபட்டில் உள்ள தங்ககாசு சங்கிலி தொடர் திட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தியதில் மோசடியில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து தங்ககாசு நிறுவன பொது மேலாளரும், பெண் தொழில் அதிபருமான புஷ்பம் மேலாளர், அரிபிரபாகர், சுரேஷ், சந்திர சேகர், அகஸ்டின், விஜயா உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சங்கிலி தொடர் திட்டத்தில் நடிகை ரோகிணிக்கும் பங்கு உண்டு என புகார் கூறப் பட்டிருப்பதை தொடர்ந்து அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
புஷ்பத்திடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடி கும்பலின் தலைவன் விஜயபாஸ்கரன் என் பதும் பாங்காக்கில் இருந்து இண்டர்நெட் மூலம் போலி விளம்பரங்களை கொடுத்து கோடிக்கணக்கில் மோச டியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Friday, May 2, 2008
பிரியங்கா - நளினி சந்திக்கவில்லை : சிறை அதிகாரி பகீர் தகவல்
இந்தியாவையே ஆச்சரியப்பட வைத்த சம்பவங்களில் ஒன்று நளினி- பிரியங்கா சந்திப்பு. அச்சந்திப்பு பற்றி எல்லா ஊடகங்களும் பரபரப்புச் செய்திகள் வெளியிட்டிருந்தன. ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தியும், மார்ச் 19-ல் வேலூர் சிறையில் நளினியை சந்தித்துப் பேசியதை ஒப்புக் கொண்டார்.
அப்பொழுது என்ன பேசிக் கொண்டார்கள்? எப்படி எல்லாம் நளினி, பிரியங்காவின் உணர்ச்சிப் பூர்வமான சந்திப்பு நிகழ்ந்தது… பிரியங்கா மனம் விட்டு அழுதது, சோனியாவுக்கு நளினி இனிப்பு பலகாரம் செய்து வைத்திருந்தது…இதனால் தன்னுடைய கணவர் முருகனுக்கும் நளினிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது...இருவரும் தற்கொலைக்கு முயன்றது...இப்படி பக்க கணக்கில் இருவரின் சந்திப்பு பற்றி நாடே அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் பேசிக் கொண்டது. இவர்களின் சந்திப்பு கிட்டத்தட்ட 10 நாட்கள் நாட்டின் எல்லா ஊடகங்களையும் ஆக்கிரமிப்பு செய்திருந்தது.
ஆனால் இப்பொழுது முழுப் பூசணியை சோற்றுக்குள் அமுக்குவது மாதிரி இச்சந்திப்பு நிகழவே இல்லை என சிறைக் கண்காணிப்பாளர் முரண்பட்ட அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு நிக்ழந்தா? இல்லையா? என்பது பற்றி சென்னை வக்கீல் ராஜ்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சிறைக் கண்காணிப்பாளருக்கு விண்ணப்பித்திருந்தார்.
இது பற்றி தெரிந்தவுடன் பிர்யங்காவிடம் டெல்லி பத்திரிகைகள் கேள்வி எழுப்பியது. அவரும் சந்திப்பை ஒத்துக் கொண்டார்.ஆனால் சிறைத்துறை வட்டாரம் அப்பொழுது தகவல் ஏதும் அளிக்கவில்லை.அதற்கான் பதிலை இப்பொழுது தெரிவித்துள்ளது.
"மார்ச் 14 மற்றும் மார்ச் 19 ந் தேதிகளில் நீங்கள் கேள்வி எழுப்பி இருக்கும்படியான எவ்விதச் சந்திப்பும் நிகழவில்லை." என தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி விண்ணப்பித்திருந்த மனுவுக்கு பதில் அளித்துள்ளது சிறை நிர்வாகம்.
சிறைத் துறையின் இந்தப் பகீர் தகவலை அடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மேல்முறையீடு செய்யப் போவதாக நளியின் வழக்குரைஞர் துரைசாமி கூறி உள்ளார்.
வேலுர்ர் சிறை பதிவேட்டில் ப்ரியங்கா- நளியின் சந்திப்பு பற்றி பதிவு செய்யப்படவில்லை. எனவே இசசந்திப்பு நிகழவில்லை என சிறைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.எனவே நளினி- பிரியங்கா சந்திப்பு பற்றி பல்வேறு சந்தேகங்களும் கிளம்பியுள்ளன. இதனை அடுத்து அடுத்தகட்ட பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது.
சந்தன வீரப்பனுக்கு சிலை
இது தொடர்பாக முத்துலட்சுமி கூறியதாவது:-
எனது கணவர் வீரம் மிக்கவர், அதே சமயத்தில் ஏழை-எளியவர்களிடம் பரிவுடன் பழகி வந்தார். நயவஞ்சக செயல் மூலம் அவரை கொன்று விட்டனர்.
மூலக்காட்டில் அவர் சமாதி உள்ள இடத்தில் நான் நினைவகம் கட்ட உள்ளேன். இதற்கான பணிகள் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும். அந்த இடத்தில் எனது கணவரின் முழு உருவ வெண்கல சிலை ஒன்றையும் நிறுவ போகிறேன்.
எனது கணவர் தமிழக எல்லையை காக்கும் வகையில் செயல்பட்டு வந்தார். இதை இப்போது தான் எல்லைப் பகுதி மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். தினம், தினம் என் கணவர் சமாதிக்கு வந்து மண் எடுத்துச் செல்கிறார்கள்.என் கணவர் ஆத்மாவை அவர்கள், "எல்லைச்சாமி'' ஆக பார்க்கிறார்கள்.
இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.
தர்மபுரியிலும் "மாயாவி'' வீரப்பனுக்கு சிலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மக்கள் தொலைக்காட்சியில் வீரப்பன் தொடரை இயக்கி வரும் டைரக்டர் ஜி.கவுதமன் யோசனையின் பேரில், பா.ம.க. நிர்வாகி சிவகுமார் இந்த சிலையை உருவாக்கி வருகிறார்.
இதுபற்றி சிவகுமார் கூறு கையில், "2 லட்சம் ரூபாய் செலவில் வீரப்பனுக்கு சிலை செய்து வருகிறேன். தர்மபுரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தாத்த நாயக்கன் பட்டியில் என் சொந்த நிலத்தில் இந்த சிலை நிறுவப்படும்'' என்றார்.
அடுத்த மாதம் (ஜுன்) வீரப்பன் சிலை திறப்பு விழா தர்மபுரியில் நடக்க உள்ளது. இதில் டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை தமிழ்சங்க நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டனில் குடியேற ஒசாமா பின்லேடன் மகனுக்கு தடை
ஒமரின் மனைவி முஸ்லிம் மதத்துக்கு மாறினார். தன் பெயரையும் செய்னா அல்சபா பின்லேடன் என்று மாற்றிக்கொண்டார். இருவரும் இங்கிலாந்து நாட்டுக்கு சென்று வாழ திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ஒமருக்கு விசா கேட்டு செய்னா மனு செய்து உள்ளார். விசா கிடைக்கும் வரை இருவரும் எகிப்து நாட்டில் தங்குவது என்று முடிவு செய்து உள்ளனர். ஒமருக்கு விசா வழங்குவதற்கு இங்கிலாந்து அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர் அந்த நாட்டுக்குள் நுழைவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் தடை விதித்து உள்ளது. அவர் இங்கிலாந்து நாட்டுக்கு குடியேறினால் அது பொதுமக்களுக்கு கவலை அளிக்கும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.ஒமர் தன் தந்தைக்கு தொடர்ந்து விசுவாசமாக இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்து உள்ளன என்றும் அதிகாரிகள் ஒமரிடம் கூறி உள்ளனர்.தனக்கு விசா வழங்கப்படாததை எதிர்த்து ஒமர் அப்பீல் செய்து இருக்கிறார். என் தந்தையை காரணம் காட்டி எனக்கு விசா வழங்காதது தவறு என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள செஷைர் நகரில் என் பிரிட்டிஷ் மனைவியுடன் வசிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று அவர் கேட்டு இருக்கிறார்.
'தசாவதாரம் படத்தை தடை செய்வோம்' - இந்து அமைப்பு போர்க்கொடி
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் நேற்று ராமேசுவரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் நிலையில் இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணை முழுமையாக நிறைவடையும் வரையில் ராமர் பாலம் பகுதியில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் சினிமாவில் சைவ, வைணவ சமயங்களுக்கு இடையே 16-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோதலை காட்சியாக்கி இருக்கிறார்கள். அப்போது இந்து கடவுள்களின் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சியையும் அவர்கள் சேர்த்திருப்பதாக தெரிகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் இந்த படத்தை வெளியிட விடமாட்டோம். தியேட்டர் முன்பு போராட்டம் நடத்துவோம்.
பிரியங்கா-நளினி சந்திப்பு அரசியலில் சில சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
காங்கிரஸ் ஆட்சியில்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது அதேபோல `தீன்பிகார்' என்ற தீவை வங்காளதேசத்திற்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்திய பகுதிகளை பிற நாடுகளுக்கு விட்டுக் கொடுப்பது தேச பாதுகாப்புக்கு நல்லதல்ல. இந்த நிலை மாற மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
"அரைகுறை" மல்லிகா ஷெராவத் மீது போலீசில் புகார்
இந்த விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி, ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். குடும்பப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் நாகரீகமாக உடையணிந்தபடி வந்திருந்தனர்.
ஆனால் மல்லிகா ஷெராவத் என்ற இந்தி நடிகை தமிழ் கலாசாரத்தை மீறி, தமிழக மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் அரைகுறை ஆடையணிந்து, அதாவது குட்டை பாவாடை அணிந்து வந்திருந்தார். இதனால் தமிழ் பண்பாளர்கள் பலர் முகம் சுளித்தனர்.
முதல்-அமைச்சர் எதிரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து அவமரியாதை செய்தது மட்டுமல்லாமல், ஆபாசமாக அறுவருக்கத் தக்க சேஷ்டைகளையும் செய்தார். இதை டி.வி., பத்திரிகைகளில் பார்த்து மனம் புண்பட்டு விட்டது. தமிழ் கலாச்சாரத்தில் பற்று உள்ளவர்களுக்கு இது மன வேதனையையும் அவமானத்தையும் அளித்தது. கீழ்த்தரமான எண்ணங்களை உண்டு பண்ணும் வகையில் அவரது உடை அமைந்திருந்தது.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. எனவே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மல்லிகா ஷெராவத் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் வழக்கு தொடரவும் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கனிராஜனின் வக்கீல் ராம் மனோகரனிடம் கேட்ட போது, "இந்த பிரச்சினை தொடர்பாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்றும் கனிராஜனை அழைத்து இன்று (2-ந் தேதி) விசாரணை நடத்துவதாக பெரியமேடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்" என்று குறிப்பிட்டார்.