Sunday, April 26, 2020

கரோனாவை சபிப்பதா? ரசிப்பதா?

உணவகங்களை மாத்திரமே அதிகம் நம்பியிருக்கும் அமொிக்காவில், உணவகங்கள் முழுவதுமாய் மூடப்பட்டிருக்கின்றன. வாடிக்கையாளர்கள், அவர்களுக்குத் தேவைப்படும் உணவுப் பண்டங்களை இணையத்தின் வாயிலாகக் கோருகிறார்கள். பிறகு தேவையான உணவுப் பண்டங்கள் அவர்களின் இல்லங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. சமையலறைகளில் சமைப்பவர்கள் தவிர, பரிமாறுபவர்கள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம், நம் நாடுபோல் பரிமாறுபவர்களுக்கு இங்கே வரையறுக்கப்பட்ட ஊதியம் கிடையாது. வாடிக்கையாளர்களின் மூலம் வரும் ‘டிப்ஸ்’ எனப்படும் குறைந்தபட்ச ஊக்கத்தொகை மாத்திரமே அவர்களின் மாத வருமானம். ஆனால், தற்போது உணவகங்களில் உணவு பரிமாற முழுவதுமாகத் தடை. பிறகெங்கே பரிமாறுபவர்கள் பிழைப்பது? வணிக வளாகங்கள் மூடப்பட்டு விட்டன. உணவுப்பொருட்கள் அல்லாத பிற அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் சில கடைகள் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்காமல், அவர்களுக்கு வேண்டிய பொருட்களை இணையத்தின் வாயிலாகக் கோரச் செய்து, அவைகளை கடைகளின் பணியாளர்கள் மூலம் வாசலிலேயே வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் பிரதானக் காரணம் மக்கள் நடமாட்டத்தின் மூலம் நோய் பரவாமல் இருக்கவும், கரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும்தான். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் அளவோடு விற்கப்படுகின்றன. பால், ரொட்டி, முட்டை, தண்ணீர், சோடா போன்றவைகள் ஒரு குடும்பத்திற்கு இவ்வளவுதான் என்ற நிலை. மீன், கோழி, ஆடு, மாடு, பன்றி இறைச்சிகள் முழுவதுமாகத் தீர்ந்துவிட்டன. பொதுவாக வருட இறுதியில் வரும் “தேங்க்ஸ் கிவிங்” என்று சொல்லப்படுகிற பண்டிகைக் காலங்களில் விற்கப்படும் வான் கோழி இறைச்சி இப்போதே விற்பனைக்கு வந்து விட்டன. இறைச்சி இறக்குமதியும், இன்ன பிற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. உணவுப்பொருட்கள் விற்பனை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் வகையில் கூடுதலாக வாங்கி, சேமித்து வைப்பது கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கழிவறைப் பொருட்கள், கிருமி நாசினிகள் போன்றவற்றைக் கடைகளில் பார்த்து பல நாட்களாகிவிட்டது. குழந்தைகளுக்கான உணவுப்பொருட்கள் குறைந்துகொண்டே வருகிறது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு வீட்டிலிருந்தே இயங்கப் பணிக்கப்பட்டிருக்கின்றனர். சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஆயிரமாயிரம் கார்கள் பறக்கும் அதிவேக சாலைகளில் ஐம்பதுக்கும் குறைந்த கார்களேயே பார்க்க முடிகிறது. அனைவர் கண்களிலும் மரணபயம் தொிகிறது. செல்லப் பிராணிகளை, வெளியில் அழைத்துச் சென்று காலாரக்கூட முடியாமல் கதி கலங்கிக் கிடக்கின்றனர். தவிர்க்க இயலாமல் கடைகளுக்குச் சென்றாலும் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஆறு அல்லது ஏழு அடி இடைவெளியில் நிற்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் பரிதாபத்தை நினைக்கையில், அவர்கள் எண்ண ஓட்டத்தில் இப்படித்தான் சிந்தனை ஓடுமோ எனத் தோன்றுகிறது. அது “சாகப்போவது முதலில் நீயா அல்லது நானா” என்பதுதான். யாரைப் பார்த்தாலும் இவருக்குக் “கரோனா இருக்குமோ” என்ற சந்தேகமே தோன்றுகிறது. இப்படியே போனால் இன்னும் எத்தனை நாட்கள் நாம் உயிரோடிருக்கப் போகிறோம் என்ற மரண பயம் ஒரு புறம். பெற்றோர்கள் தன் குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம், நமக்கு ஏதாவது ஆகி விட்டால் நம் குழந்தைகளை யார் காப்பாற்றுவார் என்ற ஏக்கத்தை ஒவ்வொருவர் கண்களிலும் காண முடிகிறது. காரணம் நாளுக்கு நாள் வேகமாய்ப் பரவி வரும் கரோனா புள்ளி விவரங்களே! 

தொடர்ந்து வாசிக்க :  http://puthu.thinnai.com/?p=40086

A Delicious Raitha In Minutes by “Quarantine Cook” Sarithra

Wednesday, April 22, 2020

"சொந்தம் சிறுகதை"

2007 - ல் கலிஃபோர்னியா’விலிருந்தபோது, அங்கிருந்து வெளிவரும் மிகத்தரம் வாய்ந்த “தென்றல்” என்ற மாத இதழுக்கு நான் எழுதிய சிறுகதை.... சுவையான நினைவுகள் 😍 முடிந்தால் வாசித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள். ஒங்க அற்புதமான நேரத்துக்கு மிக்க நன்றி 😊🙏🏽 ராமு, ராமு, என்ன இன்னும் தூக்கமா? கோழி கூப்டுருச்சி, எப்ப நீ அடுப்பப் பத்தவச்சு டீ போடறது? எந்திரிப்பா. ஆளுக வந்துருவாக' என்று சுப்ரமணி தான் கொண்டுவந்த பால் கேனோடு எழுப்புகிறான். 'ம்ம்... நல்லா அசந்து தூங்கிட்டம்பா' என்ற முனகலோடு நெட்டி முறித்துக்கொண்டே ராமு எழுந்து வந்து 'கொண்டா, என்ன இன்னிக்கி பாலு கம்மியாருக்கு' என்று வாங்கிக் கொண்டான். 'எருமைக்குத் தவுடு கிவுடு நல்லா வச்சாத்தானே பாலு நெறயக் குடுக்கும்' என்றபடி அடுப்பைப் பற்ற வைக்கிறான். ராமுவின் டீயைக் குடித்தால்தான் அந்தப் பகுதி விவசாயிகளுக்கு வயலில் வேலை செய்யமுடியும். அந்தப் பகுதிக்கே ஒரே ஒரு டீக்கடைதான். அதற்கு பால் சப்ளை செய்வது சுப்ரமணிதான்..... தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்லவும். http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3390